அலங்காநல்லூர் லட்சியம்... ஆண்ட்ராய்டு, ஐ.ஓ.எஸ் நிச்சயம்..! #JallikattuRun | Jallikattu Run App launched in Apple Store and Google Play Store

வெளியிடப்பட்ட நேரம்: 16:56 (11/02/2017)

கடைசி தொடர்பு:12:12 (22/02/2017)

அலங்காநல்லூர் லட்சியம்... ஆண்ட்ராய்டு, ஐ.ஓ.எஸ் நிச்சயம்..! #JallikattuRun

ஆன்ட்ராய்டு ஜல்லிகட்டு ரன்

தமிழ்நாட்டின் கலாச்சார அடையாளங்களில் ஒன்று ஜல்லிக்கட்டு. அதற்கு தடை விதித்து அதனை மாணவர்களும், போராட்டக்காரர்களும் தமிழகமெங்கும் மாபெரும் போராட்டத்தை நடத்தி மீட்டெடுத்தனர். இந்த பிரச்னை நீதிமன்றத்தில் இருந்த போது ஒரு நீதிபதி வேண்டுமென்றால் ஜல்லிக்கட்டை வீடியோ கேமில் விளையாடிக் கொள்ளுங்கள் என்று தெரிவித்திருந்தார். அதற்கு எதிராக விமர்சனங்கள் எழுந்தது. தற்போது இளைஞர்களும், போராட்டக்காரர்களும் ஒன்றாக போராடி மீட்டெடுத்த ஜல்லிக்கட்டு உலக நாடுகள் அனைத்திலும் தமிழர்களின் கலாச்சாரத்தை பிரதிபலித்து வருகிறது. புதிய ஆப் ஒன்று ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ப்ளே ஸ்டோர்களில் ஜல்லிகட்டு ரன் என்ற பெயரில் அறிமுகமாகியிருக்கிறது.

இந்த ஆப் ஜல்லிக்கட்டை அதன் கலாச்சார விஷயங்களோடு மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக உள்ளது. 16 மெகாபைட் அளவில் உள்ள இந்த ஆப் இன்ஸ்டால் செய்தவுடன் கிராமிய வாத்தியங்களின் இசையுடன் துவங்குகிறது. விளையாட்டை துவங்கினால்  வாடிவாசலில் இருந்து வெளியேறும் காளை மாடுபிடி வீரர்களை தாண்டு ஓடும், 3 லைஃப்கள் ஆட்டம் துவங்கியதும் இருக்கும், நடுவே காளைக்கு ஆட்டத்தில் காயின்களும், இடையிடையே வாய்ப்புகளும் கிடைக்கும். 

அது மட்டுமின்றி நாம் சேகரிக்கும் காயின்களின் மதிப்புக்கு ஏற்ப காளைகளை வாங்கி கொள்ளலாம். அப்பு என்ற காளை தான் ஆரம்பத்தில் நமக்கு அளிக்கப்பட்டிருக்கும், பிறகு புள்ளிகளின் அடைப்படையில், ஜல்லிக்கட்டின் பிரபல மாடுகளின் பெயரில் மாடுகளை பெறலாம். கருப்பன், கொம்பன், பாண்டி, மருது, முத்து, வெள்ளையன், வெங்கலபாண்டி, வெள்ளிமணி, தங்கமணி என ஜல்லிகட்டு மாடுகளின் பெயர்களோடு மாடுகள் வைத்து ஜல்லிகட்டு ஆடுவது இளைஞர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளது. 

இந்த ஆப்பை அமெரிக்காவில் உள்ள ஆவேகா இன்டெராக்டிவ் நிறுவனம் தயாரித்துள்ளது. ப்ளே ஸ்டோரில் 4.8 ரேட்டிங் பெற்றுள்ள இந்த ஆப்பை 50000 பேர் பயன்படுத்தி வருகின்றனர். பிப்ரவரி 8ம்தேதி வெளியாகியுள்ள இந்த ஆப்ஸுக்கு ரிவியூக்களும் சிறப்பாக அமைந்துள்ளன. மதுர குலுங்க குலுங்க கிராமிய இசையுடன் ஆண்ட்ராய்டு, ஐபோன்களை ஆக்கிரமித்து வருகிறது இந்த ஆப். ஜல்லிக்கட்டு அலங்காநல்லூரில் நிச்சயம் வேண்டும் என்பது தான் அனைவரது லட்சியமும், ஆனால் ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ்-ல் கிடைப்பது நிச்சயம் என்பதை நிருபித்துள்ளது. இன்னும் கலாச்சார விஷயங்களை உட்புகுத்தினால் இப்போது இருக்கும் ரன் கேம்கள் மத்தியில் இது ஹிட் அடிக்கும் என்பதில் சந்தேகமில்லை. 

வர்லாம்...வர்லாம்...வா சொல்ல வைக்கிறது ஜல்லிக்கட்டு ரன் ஆப்...ஆப்பை டவுன்லோட் செய்ய க்ளிக் செய்க.

ச.ஸ்ரீராம்


டிரெண்டிங் @ விகடன்