பங்களாதேஷ் டெஸ்ட்டில் இந்தியாவுக்காக விக்கெட் வீழ்த்தும் 12வது வீரர்! | Kohli and co uses the DRS reviews cleverly against Bangladesh

வெளியிடப்பட்ட நேரம்: 09:26 (12/02/2017)

கடைசி தொடர்பு:09:26 (12/02/2017)

பங்களாதேஷ் டெஸ்ட்டில் இந்தியாவுக்காக விக்கெட் வீழ்த்தும் 12வது வீரர்!

பங்களாதேஷ் கோலி ரிவியூ

பங்களாதேஷ் அணியுடன்  நடந்து வரும் ஒரே டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு கணிசமான ரன்கள் வரவும், கோலி இரட்டை சதமடிக்கவும், பங்களாதேஷின் முதல் விக்கெட்டை வீழ்த்தவும் உதவியது இந்தியாவின் 12வது வீரர் தான். ஆம், டி.ஆர்.எஸ் எனும் அம்பயரின் முடிவுக்கு எதிராக அப்பீல் செய்யும் முறைதான் இத்தனைக்கும் காரணம். கோலி தன்னை மீண்டும் ஒருமுறை டெஸ்ட் போட்டிகளில் டி.ஆர்.எஸ் கில்லி என நிரூபித்துள்ளார்.

கோலி 180 ரன்களில் ஆடிக்கொண்டிருந்தபோது எல்பிடபிள்யூவிற்காக வங்கதேச வீரர்கள் ஆர்பரிக்க அம்பயரும் அவுட் கொடுத்துவிட்டார். ஆனால் கோலி எதிர்முறையில் இருந்த சஹாவின் பதிலை கேட்டு ரிவியூ செய்தார். அதனால் கோலி இரட்டை சதமடிக்க முடிந்தது. அதுமட்டுமில்லாமல் 204 ரன்கள் குவித்து வெளியேறிய போது ஏன் கோலி ரிவியூ செய்யவில்லை என்பது விவாதத்துக்கு உள்ளானது. அதற்கு கோலி அணியில் நான் அந்த ரிவியூவை வீணாக்கியிருந்தால் அடுத்து சதமடிக்க இருந்த சஹாவுக்கோ..ஜடேஜாவுக்கோ பயன்பட ரிவியூக்கள் இல்லாமல் போயிருக்கும் என்றார்.

அதன் பின் இந்தியாவின் டிக்ளேருக்கு பிறகு பங்களாதேஷ் பேட் செய்யும்போது இரண்டாவது நாளின் கடைசி ஓவருக்கு இரண்டு ஓவர்கள் முன்பு உமேஷ் யாதவின் பந்து பேட்ஸ்மேனின் மட்டையில் உரசி செல்வது தெரிந்து முரளி விஜய் ஆர்பரிக்க கோலி ரிவியூ செய்து விக்கெட்டை இந்தியாவுடையதாக்கினார்.

ஆனால் இவ்வளவு கெத்தான ரிவியூக்களுக்கு நடுவே பங்களாதேஷ் கேப்டன் முஸ்ஃபிகுர் ரஹீமின் மோசமான ரிவியூக்களும் அரங்கேறியது. கோலியின் பேட்டில் தெளிவாக பந்து பட்டு சென்றது அதனை ரிவியூ செய்து ரிவியூவை வீணாக்கியது மட்டுமின்றி டி.ஆர்.எஸ் ரிவியூக்களில் மோசமான ரிவியூவாகவும் இது பதிவானது...

 

 

 

இதற்கு முன் இந்தியா-இங்கிலாந்து  டெஸ்ட்  தொடரிலும் கோலி டி.ஆர்.எஸ் ரிவியுக்களில் சிறப்பாக செயல்பட்டார். ஒருநாள், டி20 போட்டிகளில் முன்னாள் கேப்டன் தோனியின் அனுபவம் கைகொடுக்க டி.ஆர்.எஸ்களில் இந்தியா மாஸ் காட்டியது. தோனியின் 93 சதவிகித டி.ஆர்.எஸ் அப்பீல்கள் வெற்றிகரமானவை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் டி.ஆர்.எஸ்-ல் சந்தேகங்களை எழுப்பி சில காலம் பயன்படுத்தாமல் இருந்தது இந்தியா தான். ஆனால் இந்தியா நோ சொன்னதற்கும் காரணம் உள்ளது. 

இந்தியா போன்ற ஆசிய நாடுகளில் அதிகமான சத்தங்களுக்கு நடுவே நடக்கும் ஆடுகளங்களில் ஸ்னிக்கோ மீட்டர் பேட்டில் பந்து படுவதை உறுதி செய்வதில் பிரச்னை உள்ளது,  Hwak-Eye மூலம் பந்தின் திசை சரியாக கணிக்க முடியவில்லை என பல குற்றச்சாட்டுகள் இருந்து வருகிறது. அதற்கு ஏற்ப தென்னாப்பிரிக்கா-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான தொடரில் டிவில்லியர்ஸ் போல்டானது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது அவுட்டான பந்தின்  Hwak-Eye ட்ராக்கிங் பந்து ஸ்டெம்புகளுக்கு மேல் சென்றதாக வந்தது. இதுபோன்ற காரணங்களுக்காவே டி.ஆர்.எஸ்-ஐ எதிர்த்தது இந்தியா. தற்போது அதில் உள்ள குறைகள் கலையப்பட்டதுமே இந்தியா டி.ஆர்.எஸ்க்கு ஓ.கே சொல்லியுள்ளது. 

டெஸ்ட்டுக்கு கோலி, ஒன்டே, டி20யில் தோனியின் அறிவுரை என டி.ஆர்.எஸ்-ல் இந்தியா கெத்து காட்டுவதால் இந்தியாவின் வெற்றி பங்களிப்பில் டி.ஆர்.எஸ்ஸும் ஒரு அறிவிக்கப்படாத வீரராகியுள்ளது. 


டி.ஆர்.எஸ் என்றால் என்ன?

டி.ஆர்.எஸ் என்பது கள நடுவர்களின் முடிவை மறு பரிசீலனை செய்து முடிவை அறியும் தொழில்நுட்பமாகும். இதில் மூன்று விதமான சோதனைகள் நிகழ்த்தப்படுகிறது. ஹாட் ஸ்பாட் - இந்த தொழில்நுட்பத்தின் மூலம் பந்து பேட்டில் பட்டதா? இல்லையா? மற்றொன்று ஸ்னிக்கோ மீட்டர் அதாவது பந்து பேட்டில் பட்டதா இல்லையா என கண்டறியும் தொழில்நுட்பம், மூன்றாவது Hwak-Eye எனும் பந்துவீச்சாளர் வீசிய பந்தின் திசையை ட்ராக் செய்யும் தொழில்நுட்பம். இவை மூன்றும் சேர்ந்த கள நடுவரின் தீர்ப்பை மறு பரிசீலனை செய்யும் முறைதான் டி.ஆர்.எஸ்


ச,ஸ்ரீராம்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்