பிரேக்கிங் தாண்டி, மற்ற செய்திகளை மிஸ் செய்யாமல் இருக்க 4 வழிகள்! | How to get important news over breaking news

வெளியிடப்பட்ட நேரம்: 11:03 (13/02/2017)

கடைசி தொடர்பு:11:06 (13/02/2017)

பிரேக்கிங் தாண்டி, மற்ற செய்திகளை மிஸ் செய்யாமல் இருக்க 4 வழிகள்!

பிரேக்கிங் செய்தி

மிழ்நாடே பிரேக்கிங் நியூஸ் வரப்போகுதுனு, ஒரு ப்ரேக்கிங் நியூஸ் வர்ற நிலைமைல தான் இப்போ இருக்கு. நொடிக்கு நொடி அரசியல் சூழலில் மாற்றம். எந்த நேரத்தில் யார் என்ன அறிக்கை தரப்போகிறார்கள் என்ற பரபரப்பு. க்ரீன்வேஸ் சாலை, போயஸ் கார்டன், கூவத்தூர், ஆளுநர் மாளிகை என நான்கு இடங்களில் இருந்தும் லைவ் செய்திகள் கொட்டிக்கொண்டே இருக்கின்றன. இதனை பார்த்த சாமானிய மக்களே ''2015 சென்னை வெள்ளம் அப்போ நியூஸ் சேனல மாத்தினது இன்னும் மத்த சேனல் மாத்த முடியல'' என்பதும், மியூஸிக் சேனல்ல எஸ்.எம்.எஸ் ஸ்க்ரோலிங் பார்த்தவங்கள எல்லாம் நியூஸ் ப்ரேக்கிங் பார்க்க வைச்சுட்டாங்கனு சொல்றதும்தான் இன்றைய நிலைமை.

பிரேக்கிங் செய்திகள்தான் இன்றைக்கு முக்கியத்துவம் வாய்ந்ததுனு சொன்னாலும். எனக்கு நாட்டுல நடக்குற மத்த எந்த விஷயமுமே தெரியலனு ஃபீல் பண்றவங்களும் இருக்கத்தான் செய்யுறாங்க. விராட் கோலி இரட்டை சதமடித்தது, சிங்கம் 3 படம் எப்படி இருக்கிறது என்ற விமர்சனம், இன்றைய தங்கம் வெள்ளி விலை என்ன, ட்ரம்ப் விஷயம் என்ன ஆச்சு என நம்மை சுற்றி நடக்கும் அனைத்து விஷயங்களையும் மறக்கமால் ஃபாலோ பண்ணவும், பிரேக்கிங்கிற்கு நடுவில் மற்ற அப்டேட்டுகளை மிஸ் செய்யாமல் இருக்கவும் இந்த நான்கு வழிகளை ஃபாலோ செய்யுங்கள்.

1. செய்திகள் என்பது இன்று பல தளங்களில் இருந்தும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் மக்களை அதிவேகமாக சென்றடைகின்றன. இவைகளுன் எவற்றை ஃபாலோ செய்வது என்ற குழப்பம் மக்களுக்கு எப்போதுமே இருந்து கொண்டுதான் இருக்கிறது. பல ஒருங்கிணைத்து தரும் இணையதளங்கள் பெருகி வருகின்றன. அவற்றில் சில படிப்பவரின் விருப்பத்திற்கு ஏற்ப நம்பகத்தன்மையுடன் செய்திகளை ஒருங்கிணைத்து நம் பார்வைக்குத் தருகிறன. உதாரணமாக ஒருவர் வர்த்தகம் மற்றும் விளையாட்டுச் செய்திகளை மட்டும் படிக்கிறார் என்றால் அவருக்கு அது தொடர்பான செய்திகளை மட்டும் தரும் அதன் அப்டேட் என்பதும் வேகமாக இருக்கும். ஃபீட்லி, ஃப்ளிப் போர்ட் போன்ற தளங்கள் எளிமையாக செய்திகளை தொகுத்து வழங்குகின்றன.

பிரேக்கிங் செய்தி

2. மேம்படுத்தப்பட்ட செய்திகளை தரும் இணையதளங்களை முகப்பு பக்கத்தில் லோகோவாக சேமித்து வையுங்கள். உதாரணமாக உங்கள் ஆண்ட்ராய்ட் போனில் ஒரு செய்தியை படிக்கிறீர்கள். அந்த தளம் உங்களுக்கு பிடித்துள்ளது என்றால் உங்கள் ப்ரவுசரில் ''Add to Homescreen'' ஆப்ஷனை க்ளிக் செய்தால் உங்கள் முகப்பு பக்கத்தில் அந்த இணையதளத்தின் லோகோவை சேர்த்துவிடும். இதனால் உங்கள் போனில் ஆப்ஸை இன்ஸ்டால் செய்து மெமரியை இழப்பதையும் தடுக்கலாம். எந்தப் பக்கத்தையும் சேமிக்கலாம் என்பதால் ஒருவருக்கு விளையாட்டு செய்தி பக்கம் பிடித்திருந்தால் அதனையே ஹோம் ஸ்க்ரீனில் வைத்து கொள்ளலாம்.

3. நம்பகமான செய்தி தளங்களின் நியூஸ்லெட்டர்கள். ஒரு நாளின் அல்லது அந்த  வாரத்தின் முக்கிய செய்திகளை தவறவிட்ட செய்திகளை தொகுத்து மிகவும் பர்சனலாக நமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கின்றன. இன்னமும் சொல்லப்போனால் நமக்கு தேவையான துறையின் நியூஸ்லெட்டர்களை மட்டும் தேர்ந்தெடுக்கும் வசதிகளும் வளர்ந்துள்ளன. உதாரணமாக ஒருவருக்கு ஷேர் மார்க்கெட் அப்டேட் மற்றும் வேண்டுமென்றால் அவர் அதனை மட்டும் ஆக்டிவேட் செய்யும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது.  செய்தி நிறுவனங்களும், செய்தியை தொகுத்து தரும் அக்ரிகேட்டர் சேவை நிறுவனங்களும் நமக்கு நியூஸ்லெட்டர்களாக‌ அனுப்பி வைக்கின்றன. 

4. ஆப்ஸ்கள், இன்றைய டிஜிட்டல் உலகில் மிகவும் முக்கியமான டூலாக உள்ளன. சமூக வலைதளங்களில் யார் வேண்டுமானாலும் என்ன செய்தியை வேண்டுமானாலும் கூறலாம் என்ற நிலையில் செய்திகளின் நம்பகத்தன்மைக்கு ஆப்ஸ்கள் சரியான தேர்வாக உள்ளன. இதில் நீங்கள் குறிப்பிட்ட பிரிவுகளை மட்டும் தேர்வு செய்து படிக்கலாம். உங்களுக்கு அரசியல் பிடிக்கவில்லை என்றால் அது தவிர மற்ற செய்திகள் தெரியுமாறும், அல்லது அரசியல் மட்டுமே தெரிய வேண்டும் என்றவாறும் மாற்றி அமைத்துக்கொள்ளலாம் என்ற வசதிகளை ஆப் நிறுவனங்கள் வழங்குகின்றன. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் அதிக ரேட்டிங் பெறப்பட்ட செய்தி ஆப்ஸ்களையும் பயன்படுத்துவது இதன் மூலம் போலி செய்திகளை தவிர்க்கலாம்.

 

ச.ஸ்ரீராம்
 


டிரெண்டிங் @ விகடன்