இந்தியாவில் விற்பனைக்கு வந்த நோக்கியா 6 | Nokia 6 comes for sale in India on EBay

வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (14/02/2017)

கடைசி தொடர்பு:17:02 (14/02/2017)

இந்தியாவில் விற்பனைக்கு வந்த நோக்கியா 6

தற்பொழுது சீனாவில் மட்டுமே விற்பனை செய்யப்படும் நோக்கியா 6 ஸ்மார்ட்போன் இந்தியாவில் உள்ள ஆன்லைன் வர்த்தக இணையதளமான ஈபே-வில் விற்பனைக்கு வந்துள்ளது. 32,440 ரூபாயாக விலை குறிப்பிடப்பட்டுள்ள இதன் உண்மையான விலை 17,000 ரூபாய் மட்டுமே. இப்போது முன்பதிவு செய்தால் 25 நாட்களுக்குப் பிறகே, டெலிவரி கிடைக்குமாம்.

Nokia 6 on EBAY India

இந்தியாவில் HMD Global எனும் நிறுவனம்தான் நோக்கியா பிராண்டுக்கான உரிமையை வைத்துள்ளது. இந்த நிறுவனம் இன்னும் நோக்கியா 6 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அதிகாரபூர்வமாக கொண்டு வரவில்லை. 5.5 இன்ச் ஃபுல்-HD திரை, Octa-Core குவால்காம் ஸ்நாப்டிராகன் 430 பிராசஸர், 4 GB RAM ஆகிய வசதிகளைக் கொண்டுள்ளது. ஆண்ட்ராய்ட் 7.0 Nougat ஆபரேட்டிங் சிஸ்டம் மூலம் இயங்குகிறது. 

Nokia 6 Black

 - மு. ராஜேஷ் (மாணவ பத்திரிகையாளர்)

நீங்க எப்படி பீல் பண்றீங்க