வெளியிடப்பட்ட நேரம்: 12:52 (15/02/2017)

கடைசி தொடர்பு:13:05 (15/02/2017)

யூ-ட்யூபில் பதிவேற்றப்பட்ட‌ முதல் வீடியோ எது தெரியுமா? #YouTubeMemories

யூ-ட்யூப்

ன்னிக்கு தல - தளபதி பட டீஸர் ரிலீஸ் ஆனா முதல் நாள் எத்தனை லட்சம் வியூஸ்னு ரசிகர்கள் அடிச்சுக்குற, யூ-ட்யூப் 12 வருடத்துக்கு முன் காதலர் தினத்தன்று உருவாக்கப்பட்டது. ஒரு புதுப்படம்  நல்லா இருக்கா, இல்லையான்னு  ரிவ்யூ பாக்கணுமா? யூ-ட்யூப் ல ஏதாவது ஒரு விமர்சன சேனல போடுங்க! போர் அடிக்குதா? யூ-ட்யூப் போடுங்க! இந்த பாட்டு ஹிட்டா இல்லையா? ஏதாவது தெரியாத விஷயத்தை உட்கார்ந்த இடத்திலிருந்தே கற்றுக் கொள்ள வேண்டுமா? யூ-ட்யூப்ல ஒரு டுடோரியல் சேனல் போடுங்க! இப்படி நமக்கு தெரிந்த, தெரியாத, தெரிந்து கொள்ள விரும்பும் எல்லாவற்றிக்கும் எதாவது ஒரு வீடியோவை தன்னகத்தே கொண்ட ஒரு ஆல்ரவுண்டராக விளங்குகிறது யூ-ட்யூப்

உலகம் முழுதும் இணைய வசதி உள்ள ஒவ்வொரு மனிதராலும் ஒரு நாளைக்கு சராசரியாக 25-30 நிமிடங்கள் பார்க்கப்படும் சமூக வலைதளம் அல்லாத பொழுதுபோக்கு வலைதளம் யூ-ட்யூப்தான்! இந்த இணைய சூப்பர் ஸ்டார் பற்றி தெரியாத சில சுவாரஸ்யமான தகவல்கள் இதோ....

யூ-ட்யூப் உருவான கதை!

பேபால் என்னும் அமெரிக்காவின் இணைய வர்த்தக வலைத்தளம் ஒன்றில் வேலை செய்து வந்தவர்கள்தான் சாத் ஹர்லே, ஸ்டீவ் சென் மற்றும் ஜவாத் கரீம். இவர்கள் மூவரும் யூ-ட்யூப் வலைதளத்தின் நிறுவனர்கள் என்பது நமக்கு இன்று தெரியும். ஆனால் 12 ஆண்டுகளுக்கு முன்னர், தங்கள் நிறுவன ஊழியர்கள் தான் வருகாலத்தில் உலகம் முழுக்க இணைய உலகத்தை ஆளப்போகும் வலை தளத்தை துவக்க போகிறார்கள் என்று தெரிந்திருந்தால் யூ-ட்யூப் இல்லாமலே போய் இருக்கும். காரணம் பேபால் நிறுவனத்தின் போனஸ் பணத்தில்தான் யூ-ட்யூப் உருவானது. நிறுவனர்களுள் ஒருவரான ஹர்லே, பேபால் நிறுவனத்தில் பணிக்கு அமர்ந்த போதே அந்த நிறுவனத்தின் லோகோ’வை டிசைன் செய்து காட்டிய பின்னர்தான் வேலைக்கு சேர்ந்தார் என்பது கூடுதல் தகவல்!

யூ-ட்யூப் ஆரம்பத்தில்  வீடியோ தளம் அல்ல!

யூ-ட்யூப் தொடங்கபட்ட காலத்தில் அது வெறும் வீடியோ பார்க்கும் வலைதளமாக மட்டும் உருவாக்கப்படவில்லை. அது ஒரு டேட்டிங் வலைதளமாகத்தான் முதலில் தொடங்கப்பட்டது. அப்போது பிரபலமாக இருந்த டேட்டிங் வலைத்தளமான ஹாட்-ஆர்-நாட் (hot or not) என்ற வலைதளத்தை பார்த்து அதேபோல் தொடங்கப்பட்டதுதான் இந்த யூ-ட்யூப்! நிறுவனர் கரீம் ஒரு வீடியோவை தேடி அலைந்து கிடைக்காமல் போனதும், மற்ற நிறுவனர்களான சென், மற்றும் ஹர்லே ஆகியோர் ஒரு பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோ ஒன்றை மெயிலில் அனுப்ப முயன்றனர். ஆனால் அதன் அளவு மிகுதி காரணமாக அனுப்ப முடியாமல் போனது. அதன் விளைவுதான், அந்த மாதிரியான வலைதளத்தை யூ-ட்யூப் மாதிரி மாற்ற காரணமாக அமைந்தது.

முதல் வீடியோ!

யூட்யூப்-ல் தினமும் பல வீடியோகளை பார்க்கும் நீங்கள் என்றாவது யூ-ட்யூப்பின் முதல் வீடியோ எது என்று யோசித்திருகிறீர்களா? யூ-ட்யூப்-ல் முதல் வீடியோ 23 ஏப்ரல் 2005 அன்று பதிவிடப்பட்டது. நிறுவனத்தின் நிறுவனர்களுள் ஒருவரான கரீம், சான் டியாகோவில் உள்ள ஒரு விலங்கு காட்சி சாலையில் ஒரு யானை முன் எடுத்த வீடியோதான் அது. அந்த வீடியோ பதிவேற்றம் கண்ட அன்றே 42 லட்சம் பார்வைகளை கடந்தது என்பது நம்ப முடியாத உண்மை! யூ-ட்யூப் சேனல்ஸ் இன்றைக்கு ரொம்ப மெனக்கெடுற விஷயம் வியூஸ் தான். அத தன்னோட முதல் வீடியோலயே கெத்து காட்டிருக்கு யூ-ட்யூப்

 

 

முட்டாள்கள் தின கொண்டாட்டம்!

கடந்த சில வருடங்களாக தொடர்ந்த யூ-ட்யூப் பயனாளியாக நீங்கள் இருந்தால் யூ-ட்யூப்பின் முட்டாள் தின கொண்டாட்டத்தை பற்றி உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். ஆமாம். யூட்யூப் ஆண்டு தோறும் ஏப்ரல்1 அன்று முட்டாள்கள் தினத்தை தனது வலைதள பயனாளர்களை ஏமாற்றுவதை வழக்கமாக கொண்டுள்ளது.. ஆண்டு தோறும் புதிது புதிதாக ஐடியா பிடித்து நாம் எதிர்பார்க்கா வண்ணம் நம்மை ஏமாற்றும் விஷயத்தை கச்சிதமாக செய்து வருகிறது இந்த குறும்புகார வலைத்தளம்! முதன் முதலில் 2007ல் ரிக்ரோல் எனப்படும் (ஒரு வீடியோ பார்க்கும்பொது திடீரென வேறொரு வீடியோ நடுவில் ஒடுவது) வகையிலான ஏமாற்று வித்தை. அதேபோல் 2009 ஏப்ரல் 1 அன்று  யூ-ட்யூப் தளம் தலை கீழாக தெரிய வைத்து பயனாள‌ர்களை குழப்பத்தில் ஆழ்த்தி பலரையும் கலவரம் கொள்ள வைத்தது. 2017-க்கும் ஐ யம் வெயிட்டிங் என தெறி காட்ட நிற்கிறது யூ-ட்யூப்

யூ-ட்யூப் இன்னும் பல!

    - உலகம் முழுவதிலும்  இணைய வசதி கொண்ட  மக்களில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் யூ-ட்யூப் பார்க்கிறார்கள்! 

    - ஒரு நாளைக்கு 4 பில்லியன் வீடியோக்கள் பார்க்கபடுகின்றன. 

    - ஒரு நிமிடத்திற்கு 300 மணி நேர வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.

    - யூ-டயூப்பில் அதிகம் தேடப்படுபவை இசை மற்றும் பாடல் வீடியோக்களே!

    - முத்தம் கொடுப்பது எப்படி, டை கட்டுவது எப்படி என்பவைதான் அதிகம் தேடப்பட்ட டாபிக்குகள்!

    - அமெரிக்கா தவிர்த்து அதிகமாக யூ-ட்யூப் பார்க்கும் நாடு சவூதி அரேபியா என்றால் நீங்கள் மயங்கி விழக்கூடும். அந்த நாட்டில் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களுக்கு தடை உள்ளது. ஆனால், யூ-ட்யூப்க்கு தடை இல்லை. எனவே அவர்களின் ஒரே பொழுதுபோக்கு யூ-ட்யூப் மட்டுமே!  இப்படி நம்மை முழுநேரமும் என்டர்டெயின் செய்யும் யூ-ட்யூப் நேற்றுதான் தனது 12-வது பிறந்தநாளைக் கொண்டாடியிருக்கிறது.  

- ரா.கலைச்செல்வன் 

(மாணவப் பத்திரிகையாளர்)

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்