வெளியிடப்பட்ட நேரம்: 13:56 (18/02/2017)

கடைசி தொடர்பு:14:07 (18/02/2017)

”இப்பலாம் யார் சார் ஃபோன்ல கால் பண்றா?” #Top3Dialerapps #AwesomeAndroid

கால்

கால் செய்வதற்காகக் கண்டுப்பிடிக்கப்பட்டது தொலைபேசி. அங்கிருந்து அது அடைந்த ஒவ்வொரு மாற்றத்திலும் புதுப்புது வசதிகள் சேர்ந்துகொண்டேபோனது. தொலைபேசியின் சமீபத்திய வளர்ச்சியான ஸ்மார்ட்ஃபோனில், அந்த காலிங் வசதிக்கு முக்கியத்துவமே இல்லை எனலாம். மெசேஜ் செய்யவும், ப்ரவுஸ் செய்யவும், செல்ஃபி எடுக்கவும் என ஸ்மார்ட்போனின் பயன்பாடுகள் எல்லாமே வேற வேற. ”இப்பலாம் யார் சார் ஃபோன்ல கால் பண்றா” என்றுதான் கேட்கவேண்டியிருக்கிறது.

டீஃபால்டாகவே எல்லா மொபைலிலும் எல்லா வசதிக்கும் ஒரு ஆப் இருக்கும். ஆனால், அதை விட்டுவிட்டு thirdparty apps தான் பயன்படுத்துவார்கள் ஆண்ட்ராய்டு பாய்ஸ். செல்ஃபி எடுக்க தனி ஆப், அதை கலர் கரெக்‌ஷன் செய்ய தனி ஆப் என ரகம் ரகமாக டவுண்லோடு செய்யப்படுவதுண்டு. ஆனால், கடைசிவரைக்கும் கம்பெனி தந்த ஆப்பையே நம்பி இருப்பது காலிங் வசதிக்கு மட்டும்தான். இன்பில்ட்டாக என்ன ஆப் இருக்கிறதோ, அதில்தானே நாம் எல்லா அழைப்புகளையும் செய்கிறோம்? அதற்கும் விதவிதமான ஆப் இருக்கின்றன என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?

1) True dialer

true dialer கால்

யார் நம்மை அழைத்தாலும் அவரின் ஜாதகத்தையே புட்டு புட்டு வைப்பதில் ட்ரூகாலர் ஒரு “யதார்த்த ஜோதிடர் ஷெல்வி” என்பது நாம் அறிந்ததே. ட்ரூகாலரின் ஒரு கிளை ஆப் தான் true dialer. இதன் வசதிகள் எல்லாமே ஆசம் ஆசம் வகையறாதான். ஸ்பாம் கால்களை ப்ளாக் செய்ய முடியும். நாம் அழைக்க விரும்பும் நபர் அப்போது ஆன்லைனில் இருக்கிறாரா, அல்லது யாரிடமாவது பேசிக்கொண்டு இருக்கிறாரா என்பது வரை பார்க்க முடியும். அவர் கோவத்தில் இருக்கிறாரா இல்லையா என்பதை தவிர ஆல் டீட்டெயில்ஸும் கொடுத்துவிடுகிறது ட்ரூ டயலர். இலவசமாக பல வசதிகள் இருந்தாலும் முக்கியமான சில வசதிகளுக்கு காசு கேட்பதுதான் ட்ரூ டயலரின் கெட்டப்பழக்கம். மாதம் 60ரூ கொடுக்க தயார் என்றால், best calling apps நம்பிக்கை வாக்கெடுப்பில் வெல்லப்போவது ட்ரூ டயலர்தான்.

ஒரு முக்கியமான பாயிண்ட் இருக்கிறது. நமது நம்பரை ட்ரூ காலரின் எந்த ஆப்பில் கொடுத்தாலும், அதை சேகரித்து மொத்தமாக விளம்பரதாரர்களுக்கு விற்கிறது ட்ரூகாலர். அதனால் ”அந்த புதர் பக்கம் போகாத திவ்யா” என்பதுதான் பலரது குரலாக இருக்கிறது. “என் நம்பர் தெரிஞ்சா தெரியட்டும். அப்பதான அடுத்தவங்க தகவல் எனக்கு தெரியும்” என சொல்வீர்கள் என்றால், நம்பி டவுன்லோடு செய்யுங்க.

2) Drupe

ட்ரூப் கால்

interfaceல் விஷயத்துல ட்ரூப் ஒரு மேக்கப் போட்ட கவர்ச்சி நடிகை. பாரக்கவே கலர்ஃபுல்லாக, ஜெகஜோதியாக இருக்கிறது. காண்டாக்டில் இருந்து ஒருவரை நேராக இழுத்து நமக்கு பிடித்த ஆப்பில் போடலாம். அதாவது, “ரஜினி” என்ற காண்டாக்ட்டை க்ளிக் செய்து, வாட்ஸப் ஐகானில் போட்டால், அங்கே அவருடன் சாட் செய்யலாம். போலவே, ஃபேஸ்புக், காலிங், மெஸெஜ் என அனைத்தும். இன் - பில்ட்டாகவே ரெக்கார்டிங் வசதி இருப்பதால், நோ டென்ஷன். பேசியதை பொறுமையாக கேட்டுக் கொள்ளலாம். நிறைய தீம்கள் இருப்பதால், சீசனுக்கேற்றது போல மாற்றிக்கொள்ளலாம். Gesture வசதி இருப்பது சிறப்பு. மிக சிறப்பு

3) Hangouts dialer

ஹேஙவுட்ஸ் டயலர்

”ஹேங் அவுட்டை கூகுள் ஹேங் செய்து பல நாளாச்சே..இன்னுமா இது இருக்கு” என்ற சந்தேகம் வருவது நியாயம்தான். ஆனால், ஹேங் அவுட் டயலர் தரும் ஒரு சலுகை செம செம. யூ.எஸ்ஸுக்கும், கனடாவுக்கும் இதன் மூலம் இலவசமாக கால் செய்யலாம். மற்ற வசதிகளும் ஒகே தான். அதனால், உங்கள் கேர்ள் ஃப்ரெண்டோ, பாய் ஃப்ரெண்டோ இருந்தால் தைரியமாக இதை டவுன்லோடு செய்யலாம். அல்லது, அந்த ஊரில் ஒரு கேர்ள் ஃப்ரெண்டு வேண்டுமென்றாலும் முதலில் இதை டவுன்லோடு செய்தி முயற்சியை ஆரம்பிக்கலாம்.

நீங்க வேற என்ன என்ன டயலர் ஆப்ஸ் பயன்படுத்துறீங்க என்பதை கமெண்ட்டில் சொல்லுங்க பாஸ். மாத்தி யூஸ் செஞ்சு பார்க்கலாம். முக்கியமான விஷயம். நீங்கள் ஒரு உண்மையான ஆண்ட்ராய்டு யூஸர் என்றால் அதிகம் பகிரவும்.​​​​​​​
 

-கார்க்கிபவா

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்