மார்ச் 31 க்குப் பிறகு ஜியோ இலவசம் கிடையாது | Jio won't be free after March 31, says Mukesh Ambani

வெளியிடப்பட்ட நேரம்: 15:09 (21/02/2017)

கடைசி தொடர்பு:16:14 (21/02/2017)

மார்ச் 31 க்குப் பிறகு ஜியோ இலவசம் கிடையாது

மார்ச் 31-ம் தேதிக்குப் பிறகு ஜியோவில் இணையத்திற்கான 4ஜி சேவையும், அழைப்புகளும் இலவசமாகத் தரப்படாது என்று ரிலையன்ஸ் நிறுவன உரிமையாளர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். ஜியோ குறித்துப் பேசிய முகேஷ் அம்பானி, ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஜியோ கட்டணச் சேவைதான் வழங்கும். ஆனால், அனைவரும் பயன்படுத்தும் வகையில் குறைந்த விலையில் இருக்கும் என்றும் தெரிவித்தார்.


கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 100 கோடி ஜிகா பைட் அளவுக்கு டேட்டா பயன்படுத்தப்பட்டுள்ளது. உலகில் டேட்டா பயன்படுத்துபவர்களில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது என்றும் தெரிவித்தார். ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஆண்டுக்கு 99 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்பவர்கள், ஜியோ முதன்மை உறுப்பினர்களாக எடுத்துக்கொள்ளப்படுவார்கள் என்றும் அவர்கள் மாதத்துக்கு 303 ரூபாய் கொடுத்து ரீசார்ஜ் செய்யும்போது, தற்போது ஜியோவால் அளிக்கப்பட்டு வரும் அதே சேவையைப் பெற முடியும் என்றும் தெரிவித்தார். ஜியோ இதுவரையில் 100 மில்லியன் பயனாளர்களைக் கொண்டுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க