தடாலடியாக விலை குறைந்த சோனி Xperia X...! இன்று வெளியாகிறது HTC U Ultra...!

Sony Xperia X

கடந்த ஆண்டு சோனி Xperia X  48,990 ரூபாய்க்கு வெளியானது. பின்னர் சில மாதங்களிலேயே 10,000 ரூபாய் குறைக்கப்பட்டு 38,990 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், தற்போது அதன் விலை மேலும் 14,000 ரூபாய் குறைக்கப்பட்டு 24.990 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஃப்ளிப்கார்ட் இணையதளத்தில் குறைந்த காலத்துக்கு மட்டும் இந்த சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். 

HTC U Ultra

HTC நிறுவனத்தின் 'HTC U Ultra' இன்று டெல்லியில் நடக்கும் நிகழ்ச்சியில் மதியம் 3:30 மணி அளவில் வெளியிடப்படுகிறது. இந்த போனின் சிறப்பம்சம், பயனரின் தனிப்பட்ட உபயோகத்தைப் பற்றி கற்றுக்கொண்டு அதற்கு ஏற்றார் போல் செயல்படும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக HTC தெரிவிக்கிறது. இதன் விலை ரூ.54,000 ரூபாய் இருக்கலாம்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!