ஆப்பிள் அப்பத்தா...டேப்லெட் சின்னாத்தா...கேட்ஜெட்ஸ் தந்த மாற்றங்கள்! #DigitalLife | How gadgets have influenced our life style

வெளியிடப்பட்ட நேரம்: 21:18 (22/02/2017)

கடைசி தொடர்பு:21:36 (22/02/2017)

ஆப்பிள் அப்பத்தா...டேப்லெட் சின்னாத்தா...கேட்ஜெட்ஸ் தந்த மாற்றங்கள்! #DigitalLife

கேட்ஜெட்ஸ் வந்தா பின்னால நம்ம பழக்கவழக்கங்கள்ல என்னென்ன மாற்றங்கள் வந்திருக்குன்னு யோசிச்சா, நம்ப முடியாத மாற்றங்கள் நம்பித்தான் ஆகவேண்டியிருக்குங்கற கணக்கா இருக்கு. நல்லதும், கெட்டதுமா இருக்கற இந்தப் பழக்கங்கள்ல பலதை நாமளும் பண்றோம்ங்கறதுதான், உண்மை.

கேட்ஜெட்


முதல்ல எல்லாம் யாராவது விருந்தாளிகள் வீட்டுக்கு வந்தா, உட்காருங்க... என்ன சாப்டறீங்கன்னு கேட்போம். அவங்களும் உள்ள வந்ததுமே, ‘மச்சான் இல்லையா.. மதினி இல்லையா’ன்னு ஆட்களைத்தான் கேப்பாங்க” இப்ப, வந்ததுமே அவங்க போனை எங்க சார்ஜ் போடலாம்னுதான் பார்க்கறாங்க.

‘உன் நண்பனைப் பற்றிச் சொல்.. உன்னைப் பற்றிச் சொல்கிறேன்’ன்னு யாரோ போனில்லாத காலத்துல சொல்லிருக்காங்க. இப்பல்லாம், உன் போனை ஓபன் பண்ணிக் காட்டு, உன்னைப் பத்திச் சொல்றேன்தான் நடக்குது.

பயணம் போறவங்க, தண்ணி பாட்டிலை எடுத்து வெச்சுக்கறாங்களோ இல்லையோ, பவர் பேங்கை எடுத்து வெச்சுக்க மறக்கறதில்லை. ஹெட்போன் மாட்டிகிட்டு, வேலை செஞ்சுட்டிருக்கறப்ப நம்ம மேனேஜர் நம்மகிட்ட வந்து நின்னா, எழுந்து நிக்கறதை விட, ஹெட்போனை கழட்டறதுதான் மரியாதையான செய்கை.

கல்யாணம், காதுகுத்துன்னு போனா குழந்தைகள் அம்மாவையோ, அப்பாவையோ தொந்தரவு பண்ணினாலோ.. அல்லது தியேட்டர்ல படம் பார்க்கறப்ப குட்டீஸ் குறும்பு பண்ணினாலோ டக்னு நம்ம போனைக் குடுத்து கேம் விளையாடச் சொல்லிட்டு நாம நிம்மதியாகிடறோம்.


பக்கத்து வீட்ல சர்க்கரை, காபித்துளெல்லாம் கடன் கேட்கறதில்ல.. Wi Fi பாஸ்வேர்ட்தான். 

புருஷன்கிட்ட ‘என்னங்க.... எனக்கு அந்த புடவை ரொம்பப் பிடிச்சிருக்கு.. வாங்கித்தர்றீங்களா’ கெஞ்சலெல்லாம் இல்லை. போன்ல ஆர்டர் பண்ணி வீடு தேடி வரவெச்சுக்கறாங்க. புடவையக் கட்டிகிட்டு அவங்க நிக்கற அழகுல மயங்கறதவிட, க்ரெடிட் கார்ட் பார்த்த பின்னாடி, புருஷன் மயங்கறதுதான் அதிகம்.

முன்னாடியெல்லாம் ஊருக்குப் போறப்ப, பக்கத்துவீட்ல ‘பார்த்துக்கோங்க’ன்னு சொல்லிட்டு போவோம். அல்லது கூர்க்காகிட்ட சொல்லுவோம். இப்ப சிசிடிவி மாட்டிக்கறதால அந்த வேலையை அதுவே பார்த்துக்குது.

குழந்தைகள், ‘அப்பா என்ன பொம்மை வாங்கிட்டு வந்தீங்க’ன்னு கேட்கற காலம்போய், ‘புதுசா என்ன கேம் டவுன்லோட் பண்ணினீங்க?’ன்னு கேக்கறாங்க. 

கேட்ஜெட்

குழந்தைகள்கிட்ட பெரியவங்க கூட விளையாடணும்னா, எக்ஸ் பாஸ்ல கேரக்டர்ஸ் பேரை அப்பத்தா, மாமான்னு வெச்சு ‘அவங்ககூடத்தான் விளையாடறேன்மா’ங்குதுங்க! 

பொண்ணு பார்க்கறதெல்லாம், ஸ்கைப்லதான். நோ பஜ்ஜி, சொஜ்ஜி டிராமாஸ்! பொண்ணுக்கு ஆடத்தெரியுமா பாடத்தெரியுமான்னு கேக்கறதில்ல.. பொண்ணுகிட்ட ஆண்ட்ராய்ட் இருக்கா, ஆப்பிள் இருக்காதான்!

உடம்பு சரியில்லைன்னா, கை வெச்சுப் பார்க்கறதில்ல... எலக்ட்ரானிக் தெர்மா மீட்டர்னு, கேட்ஜட் கைவசம் வெச்சிருக்காங்க. 

கூடவே இருக்கற ஃப்ரெண்டுக்கு, வாட்ஸ்அப்லதான் வாழ்த்து. வழி தெரியலைன்னா, நிறுத்தி ஆளுகளைக் கேட்கறது மாறி, ஜிபிஎஸ்ஸைத்தான் நம்பறோம். அப்படிப் போய், ஒன்வேன்னு தெரியாம ட்ராஃபிக் கான்ஸ்டபிள் காலுக்குள்ளயே போய் நிறுத்தறதுவேற நடக்குது!

காந்திகூட இப்ப இருந்திருந்தா, தண்டி யாத்திரையை ஃபேஸ்புக் ஈவன்டாகவும், உப்புச் சத்தியாகிரத்தை ட்விட்டர் ஹேஷ்டேக்லயும்தான் கொண்டாடிருப்பார். திருப்பூர் குமரனின் போராட்டத்தை ஃபேஸ்புக்கில் லைவ் செய்திருப்பார்கள். ஆனால், நேரில் சென்று ஆதரவு தராமல் லைக் மட்டும் போட்டு ஆதரவு தெரிவித்திருப்பார்கள்.

என்ன சொல்லுங்க பாஸ்.. லவ்வரை நேர்ல கண்ணுக்கு கண்ணு பார்த்து, கை கோர்த்து பேசறப்ப வர்ற ஃபீலை மட்டும் மாத்த கேட்ஜெட் வர்ல. காதல் வாழ்க!

-கே

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close