வாட்ஸ்-அப் செக் பண்ணுங்க... ஸ்டேட்டஸ் பாருங்க!

இன்று முதல் வாட்ஸ்-அப்பில் புதிய 'Status' வசதி அறிமுகமாகிறது. அப்படியே ஸ்நாப்சாட்டைப்போல இருக்கும் இந்த வசதிமூலம் இனி படங்கள், வீடியோ, GIFs என எப்படியும் ஸ்டேட்டஸ் வைக்கலாம்.

New Whatsapp Status

 

உங்கள் ஸ்டேட்டஸை யார் பார்த்தார்கள் என்றும் தெரிந்துகொள்ள முடியும். எத்தனை முறை பார்க்கப்பட்டுள்ளது என்பதையும் தெரிந்துகொள்ள முடியும். யார் யாருக்கு உங்கள் ஸ்டேட்டஸ் தெரிய வேண்டும் என்ற கன்ட்ரோலும் செய்ய முடியும். இந்த வசதியைப் பெற, வாட்ஸ்-அப் அப்டேட் செய்யத் தேவையில்லை. ஆனால், மிகப் பழைய வாட்ஸ்-அப் வெர்ஷன் வைத்திருந்தால், அப்டேட் செய்துகொள்ளுங்கள். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!