வீடியோ, போட்டோஸ், Gif...வாட்ஸ்அப்பின் ஸ்டேட்டஸ் அப்டேட்! #WhatsappUpdate | Now you can share photos, Gifs and videos via WhatsApp status #WhatsappUpdate

வெளியிடப்பட்ட நேரம்: 12:31 (24/02/2017)

கடைசி தொடர்பு:12:31 (24/02/2017)

வீடியோ, போட்டோஸ், Gif...வாட்ஸ்அப்பின் ஸ்டேட்டஸ் அப்டேட்! #WhatsappUpdate

ஜேன் கோம் மற்றும் பிரையன் ஆக்டன்

ரியாக 8 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில்தான் வாட்ஸ்அப் துவங்கப்பட்டது. ஜேன் கோமும், பிரையன் ஆக்டனும் இதனைத் துவங்கிய போது, உலகமே தங்கள் மொபைல்களில் தூக்கி வைத்துக் கொண்டாடும் என அவர்களே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் இன்று இன்ஸ்டன்ட் மெசேஜிங் ஆப்பாக டெக் உலகில் கொடிகட்டிப் பறக்கிறது வாட்ஸ்அப். எப்போதும் பயனாளர்களின் பல்ஸ் பார்த்து, அப்டேட் கொடுப்பதுதான் வாட்ஸ்அப்பின் ஸ்டைல். 8-வது பிறந்தநாளான இன்றும், புதிய வசதிகளை அறிமுகம் செய்துள்ளது வாட்ஸ்அப். வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் போட்டோ, Gif, வீடியோ ஆகியவற்றை வைக்கும் வசதி வரவுள்ளதாக கடந்த 10-ம் தேதியே, வாட்ஸ்அப் பிளாக்கில் அறிவித்தார் அதன் நிறுவனர் ஜேன் கோம். அந்த அப்டேட்ஸ் அனைத்தும் இன்று வந்துவிட்டன.

1. உங்களுடைய ஸ்டேட்டஸ் மூலமாகவே வீடியோ, போட்டோஸ், Gif ஆகியவற்றை, மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள முடியும் என்பதுதான் இந்த புது அப்டேட்டின் ஸ்பெஷல்.

2. இந்த புதிய வசதிகளால் வாட்ஸ்அப்பின் ஹோம் பேஜ் முழுவதுமே மாறிவிட்டது. சாட்ஸ், ஸ்டேட்டஸ், வாட்ஸ்அப் கால் ஆகிய மூன்று டேப்களோடு, இன்ஸ்டன்ட் ஸ்டேட்டஸ் வைக்க உதவும் கேமரா ஐகானும் இடம் பெற்றுள்ளது. அந்த கேமரா ஐகானை க்ளிக் செய்வதன் மூலம் உடனடியாக போட்டோ, வீடியோ மற்றும் gif ஆகியவற்றை உங்கள் ஸ்டேட்டஸாக செட் செய்ய முடியும்.

வாட்ஸ்அப் அப்டேட்

3. நீங்கள் வைக்கும் ஸ்டேட்டஸ் அனைத்துமே, அடுத்த 24 மணி நேரத்திற்கு மட்டுமே! அதன் பிறகு உங்களுடைய ஸ்டேட்டஸ் மறைந்துவிடும்.

4. புதிதாக இணைந்திருக்கும் ஸ்டேட்டஸ் டேப் மூலம், உங்களுடைய கான்டேக்ட் லிஸ்ட்டில் இருக்கும் நண்பர்களின் ஸ்டேட்டஸ்களை உடனே நீங்கள் பார்க்க முடியும். இதற்கு முன்பு நீங்கள் நண்பர்களின் ஸ்டேட்டஸ் பார்க்க வேண்டுமென்றால், அவர்களின் ப்ரோபைல் அல்லது கான்டாக்ட் லிஸ்ட்டில்தான் பார்க்க முடியும். ஆனால் இப்போது தனியாக ஸ்டேட்டஸ் பாரில் சென்று பார்க்க முடியும்.

5. இந்த வசதி மூலம் உங்கள் நண்பர்கள் புதிதாக ஸ்டேட்டஸ் பதிவு செய்தால், உடனே ஸ்டேட்டஸ் பாரில் காட்டிவிடும். எனவே சமீபத்தில் பதிவு செய்த ஸ்டேட்டஸ் விவரங்களையும் தனியாகக் காணமுடியும். இதனால் ஃபேஸ்புக் போல இதிலும், அனைவரின் ஸ்டேட்டசும் உங்களுக்குத் தெரிந்துவிடும்.

6. வீடியோ ஸ்டேட்டஸ்களுக்காக, வீடியோவை ரெக்கார்ட் செய்யும் போது 45 நொடிகள் மட்டுமே ரெக்கார்டு செய்ய முடியும். அதேபோல ஏற்கெனவே இருக்கும் வீடியோக்களை அப்லோட் செய்தாலும், அவற்றை வாட்ஸ்அப் 45 நொடிகளுக்கு ட்ரிம் செய்துவிடும். உங்கள் போன் கேலரியில் இருந்தும் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்க்கு போட்டோக்களை ஒன்றாக அப்லோட் செய்ய முடியும்.

7. நீங்கள் ஸ்டேட்டஸில் அப்டேட் செய்யும் வீடியோக்கள், போட்டோக்கள் அனைத்துமே வழக்கம்போல உங்கள் போனில் ஸ்டோர் ஆகிவிடும். இவை அனைத்துமே எண்ட் டு எண்ட் என்க்ரிப்ட் செய்யப்பட்டதுதான். 

8. நீங்கள் அனுப்பும் புகைப்படங்களின் மீது எழுதும், வரையும் (Draw) வசதி ஏற்கெனவே வாட்ஸ்அப்பில் இருந்ததுதான். அதைத் தற்போதும் இந்த ஸ்டேட்டஸ் அப்டேட்டிலும் செய்ய முடியும். உங்களுடைய போட்டோஸ், வீடியோக்கள் மீது எழுதவும், எமோஜிக்களை வைக்கவும் முடியும்.

வாட்ஸ்அப் அப்டேட்

9. உங்களுடைய ஸ்டேட்டஸ்களை யாரெல்லாம் பார்க்கலாம் என்பதையும் நீங்கள் முடிவு செய்யலாம். இதற்காக ஸ்டேட்டஸ் பகுதியில் இருக்கும், Status Privacy பகுதிக்கு சென்று செட்டிங்க்ஸ்-ஐ மாற்றிக்கொள்ளலாம். அதில் My Contacts, My contacts except..., Only share with... என மூன்று ஆப்ஷன்கள் இருக்கின்றன. இதன்மூலம் குறிப்பிட்ட நபருடன் மட்டுமே உங்களுடைய ஸ்டேட்டஸை பகிர்ந்துகொள்ளவும், சிலருக்கு உங்கள் ஸ்டேட்டஸை காட்டாமலும் வைக்க முடியும். 

10. கடைசி வெர்ஷன் வரை வாட்ஸ்அப்பை அப்டேட் செய்தவர்களுக்கு இன்று காலை முதல் அப்டேட்ஸ் வரத்துவங்கிவிட்டன. இன்னும் உங்களுக்கு இந்த வசதிகள் வரவில்லை எனில் உடனே வாட்ஸ்அப்பை அப்டேட் செய்யுங்கள்.

இன்று காலை வாட்ஸ்அப்பை பார்த்த பலருக்கும் சர்ப்ரைஸாக இருந்திருக்கின்றன இந்த வசதிகள். ஸ்னாப்சாட்டை பார்த்து காப்பி அடித்தது, 24 மணி நேரம் மட்டுமே இருக்கும் ஸ்டேட்டஸ், இதுவரைக்கும் வாட்ஸ்அப்பில் மெசேஜ் செய்யாதவர்கள் கூட இன்று காலை புது ஸ்டேட்டஸ் பார்த்துவிட்டு மெசேஜ் செய்தது என இதுகுறித்த தங்கள் அனுபவங்களை, சமூக வலைதளங்களில் பதிந்து வருகின்றனர். நீங்களும் உங்கள் அனுபவத்தை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்!

- ஞா.சுதாகர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்