வெளியிடப்பட்ட நேரம்: 11:21 (26/02/2017)

கடைசி தொடர்பு:11:21 (26/02/2017)

7 வருஷமா கூகுள் காதுல 'ஜெஸ்ஸி...ஜெஸ்ஸி'னு தான் சொல்லிட்டிருக்காங்க! #7yearsofVTV

7 Years of VTV

மச்சான் அந்த பொண்னுக்கு உன்னோட ஒரு வயசு கூடடானு ஃப்ரெண்டு சொன்னா...அதுக்கென்ன ஜெஸ்ஸி மாதிரினு சொல்லிட்டு போற அளவுக்கு ட்ரெண்ட் செட்டர் படமா இருக்கு 2010ல வெளியான ''விண்ணைத்தாண்டி வருவாயா''. படம் ரிலீஸாகி 7 வருஷம் ஆகிடுச்சு. ஆனா இன்னிக்கும் யாராவது பெஸ்ட் லவ் படம் பேர் சொல்லுங்கனு சொன்னா 10ல 3 பேர் விடிவி சொல்றாங்க. இன்ஜினியரிங் படிச்சா வேலை கிடைக்காது, எல்லாருக்கும் ஒரு பேஷன் இருக்கும், கேரளா பொண்ணு, காஃபி ஷாப் லவ், ப்ரேக் அப் ஆன உடனே தண்னி அடிச்சு கெட்டு போகாம கெத்தா லைஃப்ல ஜெயிக்கறதுனு பல யூத்ஃபுல் விஷயங்கள உள்ளடக்கி வெளிவந்த இந்த படம் சைலன்ட்டா செஞ்சிருக்கும் சாதனை என்னனு தெரியுமா?

ஒரு படம் ரிலீஸ் ஆகுதுனா உடனடியா ரசிகர்கள் சேர்ந்து ட்விட்டர்ல ட்ரெண்ட் பண்ணுறது, இந்தியா ட்ரெண்ட், இன்டெர் நேஷனல் ட்ரெண்டுனு தெறிக்கவிடுவாங்க. ஆனா இதெல்லாம் 10-வது நாள் வரைக்கும் கூட தொடராது. ஆனா இந்த படம் ரிலீஸ் ஆன 2010-ல இருந்து இப்போ வரைக்கும் தமிழ்நாட்டுலயும் சரி, இந்தியா அளவுலயும் சரி, இந்த படம் பற்றி ஒரு டாக் இருந்துகிட்டே இருந்திருக்கு. யாரவது லவ் சொல்ல டயலாக் கிடைக்கலனா அந்த விடிவி டயலாக் நல்லா இருக்கும்னு ஆரம்பிச்சு ஹோசானா பாட்டு, விடிவி புகைப்படங்கள், ஜெஸ்ஸினு கூகுள் சர்ச்சோட எண்ணிக்கை நீளுது. அதுக்குனு 7 வருஷமும் இதையேத்தான் தேடிருக்காங்களானு பார்த்தா..அட ஆமாம் பாஸ்! தமிழ் காதலர்கள் விடிவி-ய விடுவதாய் இல்லை.

கடந்த ஏழு வருடங்களாக விண்ணைத்தாண்டி வருவாயாவின் கூகுள் ட்ரெண்ட்

இதெல்லாம், சரி இந்த படத்த எதுக்காகல்லாம் தேடி இருக்காங்கனு பார்த்தால்...சுவாரஸ்யமான பதில்கள் இதோ...
ஏக் திவானா தா விடிவியின் ஹிந்தி வெர்ஷன், விடிவி புகைப்படங்கள் வசனங்களுடன் என அதிகமாக தேடியுள்ளனர். இன்றும் இணையத்திலும், சமூக வலைதளங்களிலும் அதிகமான காதல் ஸ்டேட்டஸ்களில் விடிவி புகைப்படம் தான். நீதானே என் பொன்வசந்தம் படத்தை பற்றி விடிவியுடன் அதிகம் தேடியுள்ளனர். நீ தானே என் பொன்வசந்தம் படத்தை விடிவி பார்ட் 2 என பலரும் விமர்சித்தது குறிப்பிடத்தக்கது. 

விண்ணைத்தாண்டி வருவாயா ஃபுல் மூவி ஹச்.டி, விடிவி படக்காட்சிகள். விடிவி பாடல்கள், விடிவி திரிஷா ஆகியவை அதிக ட்ரெண்டிங் வார்த்தைகளில் இடம் பிடித்துள்ளன. 

இந்த படத்தை எந்த எந்த ஊர்களில் அதிகம் தேடியுள்ளனர் என்று பார்த்தால்  தமிழக அளவில் தஞ்சாவூர், ஈரோடு, சிவகாசி ஆகிய ஊர்கள் முதல் மூன்று இடத்தை பிடிக்கின்றன. மாநில அளவில் பாண்டிச்சேரி முதலிடம் வகிக்கிறது. இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் போர்க்களமாக இருக்கும் காஷ்மீர் விடிவி தேடலில் டாப் 10ல் இடம்பிடித்துள்ளது.

இந்த காதல் காவியம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது தான் இதற்கெல்லாம் காரணம். கெளதம் மேனன் இந்த படத்துக்கு பின்னால் பல படங்களை இயக்கினாலும் இது தான் கெளதம் மேனனின் பெஸ்ட் என சொல்லும் படம், சிம்பு, திரிஷா இருவரது கேரியரிலும் இது ஒரு பென்ச் மார்க் படம். ஆரம்பத்தில் இருந்தே விடிவி 2 வரும் என்ற எதிர்பார்ப்பு அவ்வப்போது கிளம்பும், கெளதம் மேனனும் வாய்ப்பு அமைந்தால் உண்டு என்று தான் சொல்கிறார். ஒரு பார்ட்டுக்கே இங்க பசங்கல்லாம் ஜெஸ்ஸி, ஜெஸ்ஸினு சொல்லிட்டு இருக்காங்க...பார்ட் 2லாம் வந்தா அவ்வளவு தான். 

காதல் உள்ளவரை விடிவி வாழும்னு ஸ்டேட்டஸ் தட்டிகிட்டு இருக்குற சமூக வலைதள காதலர்கள் இன்னிக்கு ட்ரெண்ட் பண்ணிட்டு இருக்குற விஷயம் 7 Years of VTV...உங்களோட விடிவி படம் பற்றிய அனுபவத்த கமென்ட்ல பதிவு பண்ணுங்க பாஸ்.


ச.ஸ்ரீராம்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்