உலகம் முழுவதும் இன்டர்நெட் சேவை பாதிப்புக்கு இதுதான் காரணமா?

நேற்று, உலகின் பல இடங்களிலும் இன்டர்நெட் சேவை பாதிப்புக்குள்ளானது. அதற்குக் காரணம் என்ன என்பது இப்போது தெரியவந்துள்ளது.

இன்டர்நெட் சேவையை வழங்கிவரும் உலகின் முன்னணி நிறுவனங்களில் 'அமேசான் வெப் சர்வீசஸ்' நிறுவனமும் ஒன்று. இந்த நிறுவனத்துக்குச் சொந்தமான விர்ஜினியாவில் உள்ள S3 டேட்டா சென்டரில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, உலகம் முழுவதும் நேற்று இணைய சேவை பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக, பல முன்னணி இணையதளங்களும், அப்ளிகேஷன்களும் முடங்கின. S3 டேட்டா சென்டரின் சில சேவைகள் மட்டுமே பாதிப்படைந்ததாகவும், அது விரைவில் சரிசெய்யப்படும் எனவும் அமேசான் வெப் சர்வீசஸ் தெரிவித்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!