விலை குறைந்தது சாம்சங் A9 Pro...! நாளை முதல் ஃப்ளிப்கார்ட்டில்...

Samsung A9 Pro

சாம்சங் நிறுவனத்தின் ப்ரீமியம் A சீரிஸ் ஃபோனான A9 Pro-வின் விலை 2,590 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. முன்னர், 32,490 ரூபாய்க்கு சந்தையில் விற்று வந்த A9 Pro, தற்போது விலை குறைக்கப்பட்டு 29,900 ரூபாய்க்கு விற்கப்பட உள்ளது.  நாளை முதல் விலை குறைக்கப்பட்ட A9 Pro ஃப்ளிப்கார்ட் இணையதளத்தில் கிடைக்கும். இந்த போன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதன்முறையாக சந்தைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. 

6 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, 4GB ரேம், Adreno 510 GPU, 16 மெகா பிக்சல் பின்புற கேமரா, 5,000mAh பேட்டரி போன்ற வசதிகளை இந்த போன் கொண்டுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!