கூகுள் ப்ளே ஸ்டோர் - சில புதிய மாற்றங்கள்! #GooglePlayStore

ஆன்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்ஃபோன்களைப் பயன்படுத்துபவர்கள், தங்களுக்குத் தேவையான அப்ளிகேஷன்களை கூகுள் ப்ளே ஸ்டோர் மூலமாகத் தரவிறக்கம் செய்வர். 2016-ம் ஆண்டு மட்டும் கூகுள் ப்ளே ஸ்டோரில் 90 பில்லியன் ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன்கள் டவுண்லோட் செய்யப்பட்டுள்ளன. தற்போது கூகுள் இந்த ப்ளே ஸ்டோரில் சில மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது.

பயனர்கள் பயன்படுத்தும் ஆப்ஸ்களில், எவற்றுக்கெல்லாம் புதிய அப்டேட் வந்திருக்கிறதோ, அவற்றைத் தனியே காண்பிக்கிறது. இதன் மூலமாக, தனித்தனியாகவோ அல்லது மொத்தமாகவே ஆப்ஸ்களை அப்டேட் செய்ய முடியும். பயனாளர்களின் மொபைலில் நிறுவப்பட்டுள்ள அப்ளிகேஷன்களின் விவரங்கள், இன்னொரு டேப்பில் தனியாகவும் காண்பிக்கிறது. மேலும், மொபைலில் பயன்படுத்தும் ஆப்ஸ்களுக்குக் கிடைக்கும் 'Beta' வெர்சன்கள் பற்றிய விவரங்களை, 'லைப்ரரி' டேப்பில் தனியாகவும் காண்பிக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!