வெளியிடப்பட்ட நேரம்: 18:37 (05/03/2017)

கடைசி தொடர்பு:21:47 (05/03/2017)

வருகிறது செம சம்மர்... மின்சாரமே தேவைப்படாத இந்த ஏஸி நம்மை காப்பாற்றும்..! #EcoCooler

மின்சார eco cooler

வெயில்காலம் நெருங்கிக் கொண்டிருக்கின்றது என்று நினத்தாலே நமக்கு வேர்வை வழிய ஆரம்பித்துவிடுகிறது. வெயிலின் வெப்பத்தை குறித்த  கவலையைவிட  வெயில் காலத்தில் ஏசி பயன்பாட்டால் எகிறும் கரண்ட் பில்லை குறித்து கவலை  நம்மில் பலருக்கு இருக்கும். அதற்கு தீர்வாக வந்துள்ளது Eco - Cooler. 

மின்சாரமே இல்லாமல் உங்கள் அறையை குளுமையாக வைத்துக்கொள்ள உதவும்.இதனை செய்ய 500 ரூபாய்க்குள் தான் செலவு ஆகும் என்பதுதான் நம்பமுடியாத உண்மையும் கூட.

Grey Dhaka எனப்படும் விளம்பர நிறுவனத்தில் பணிபுரியும் Ashis Paul என்பவரால் உருவாக்க பட்டதே இந்த eco-cooler.

"என் மகனுக்கு வீட்டில் வந்து பாடம் சொல்லி தரும் ஆசிரியர் அவனுக்கு, காற்றின் அழுத்தத்தில் ஏற்படும் மாற்றம் வெப்பநிலையிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை சொல்லிக்கொடுக்கும் பொழுதுதான் எனக்கு இந்த யோசனை தோன்றியது" என்று கூறிகிறார் ஆஷிஷ்.

மின்சார eco cooler

eco-cooler இயங்கும் முறை மிக எளிதான ஒன்று. அறைக்குள் நுழையும் காற்றை குறுகலான பாதைகளில் வழியே வர வழி செய்ய வேண்டும். உதாரணத்திற்கு வாயை அகலமாக வைத்து உள்ளங்கையில் காற்றை ஊதி பாருங்கள் வெப்பமான காற்றை உணரலாம், அதே உதடுகளை குவித்து வைத்து ஊதினால் குளிர்ச்சியான காற்று வெளிப்படும். இதே முறைதான் eco-cooler பயன் படுத்துகிறது.

Grey Dhaka நிறுவனம் இந்த eco-coolerஐ பங்களாதேஷை தேர்ந்தெடுத்து அங்கே உள்ள ஏழை மக்களுக்கு இந்த eco-collerஐ வழங்கியுள்ளனர். பங்களாதேஷில் தகர குடிசையில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கை மிக அதிகம். வெயில் காலங்களில் அந்த தகர குடிசைகளுக்குள் இருப்பது அடுப்பில் அமர்ந்து இருப்பது போல் இருக்கும். ஆனால் இப்பொழுது அந்த மக்கள்ககளின் நிலை மாறியுள்ளது.

ஏசி என்பது ஓர் அறையை குளிர வைத்து, பூமியை சூடாக்கும் என ஒரு வாட்ஸப் ஃபார்வர்ட் பிரபலம். வாட்ஸப்பில் வரும் எல்லாமே பொய் இல்லை என்பதற்கு இது ஒரு சரியான உதாரணம். வெயிலை சமாளிக்கவோ, அல்லது புதிதாக ஒன்றை முயற்சி செய்து பார்க்கவோ, அல்லது விடுமுறை நாளில் டைம் பாஸ் செய்யவோ.. எதாவது ஒரு காரணத்துக்காக இதை முயற்சி செய்து பாருங்கள்.

வர்தா புயல் காரணமாக வீழ்ந்த மரங்கள் அதிகம். அதனால் இந்த ஆண்டு கோடை முன் எப்போதும் இருந்ததை விட தீவிரமாக இருக்கும் என்கிறார்கள் சூழலியல் ஆர்வலர்கள். கெட் ரெடி ஃபோக்ஸ்

eco cooler செயல்படும் முறையை இந்த வீடியோவில் காணலாம்.

 

 

 

-க.விக்னேஸ்வரன் (மாணவப் பத்திரிகையாளர்)

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்