வெளியிடப்பட்ட நேரம்: 12:10 (06/03/2017)

கடைசி தொடர்பு:12:12 (06/03/2017)

ஹார்ட் எமோஜி முதல் ஹைஃபை வரை... மெசென்ஜர் மேஜிக்ஸ்! #MobileMania

மெசென்ஜர்

ஃபேஸ்புக்... காலைல எழுந்து பேப்பர் படிக்குறோமோ இல்லையோ, இதுல எத்தனை நோட்டிஃபிகேஷன் வந்துருக்கு, யார் ஹார்ட் எமோஜி போட்ருக்காங்கனு பாக்கலனா அந்த நாள்  ஸ்டார்ட் ஆகாத மாதிரியே வாழுற ஃபேஸ்புக்வாசிகளே... ஃபேஸ்புக்ல ஸ்டேட்டஸ், ஃபேட்டோ, வீடியோ போடுறது, லைக், ஷேர் இதை தாண்டி இன்னும் நிறைய மேஜிக் இருக்கு தெரியுமா? ஃபேஸ்புக் மெசென்ஜர்ல உங்களை கெத்து காட்ட வைக்கும் 7 ட்ரிக்ஸ் இதோ...

இனி லைக் வேண்டாம்:

மெசென்ஜர்

ஃபேஸ்புக் சாட்ல யாருக்காவது லைக் அனுப்பறதுக்கு ஒரு எமோஜி இருக்கும். ஆனா அதை உங்களால மாத்திக்க முடியும் என்பது தெரியுமா? மெசென்ஜர்  ஒப்பன் பண்ணி மேல உள்ள செட்டிங்ஸ்ல சேஞ்ச் எமோஜின்னு ஒரு ஆப்ஷன் இருக்கும். அதை க்ளிக் பண்ணி உங்களுக்கு புடிச்ச எமோஜிய மாத்திக்கலாம். இதுதான் நல்ல வாய்ப்புனு ஹார்ட் எமோஜி மாத்துற யூத்ஸ், சியர்ஸ் எமோஜி மாத்துற நண்பேன்டாஸ்னு எமோஜிக்கள் பேசுது. இதுல ஹார்ட் எமோஜி போட்டா மொபைல் ஸ்க்ரீன் முழுக்க ஹார்ட் பறப்பது ரெமோக்களுக்கு எக்ஸ்ட்ரா அட்வான்டேஜ். இனிமேயும் லைக் பண்ணுவீங்க?

கேம்ஸ்:

மெசென்ஜர்

உங்க போன்ல  விளையாட ஒரு கேம் இன்ஸ்டால் பண்ணனும்னா நிறையா ஸ்பேஸ் எடுக்கும். 4 ஜிபி மெமரில இதுக்கெல்லாம் எங்க இடமிருக்குனு ஃபீல் பண்ணுறவங்களுக்கு மெஸெஞர் போதும். உங்க ஃப்ரெண்ட்ஸோட சேர்ந்து கெத்தா கேம் விளையாடலாம். உங்க மெசென்ஜர்  மூலமா புட்பாலொ, பேஸ்கெட் பால், போக்கிமான் போன்ற எமோஜிகள அனுப்ப வேண்டும். அந்த எமோஜிய க்ளிக் பண்ணா போதும். அப்பறம் என்ன கமான் லெட்ஸ் ப்ளே தான்...

ஹைஃபை சொல்ல ரெடியா?

மெசென்ஜர்

பர்த்டே ஆரம்பிச்சு கல்யாணம் வரைக்கும் எல்லாமே ஃபேஸ்புக் வழியாதான்னு ஆயிடுச்சு. யாரோடயாவது உங்க வெற்றியை பகிர்ந்துக்கறதுக்கும், ஹைஃபை சொல்றது, வேவ் மூலமா டாட்டா சொல்றதுனு கொஞ்ச நேரத்தில் தோன்றி மறையக்கூடிய மேஜிக் எமோஜிக்களை உங்கள் மெசென்ஜர்  இருந்து அனுப்ப முடியும். 

செல்லப் பெயர் வைக்கலாமா?

மெசென்ஜர்

உங்களுக்கு பிடித்தமானவர்கள், பெஸ்ட்டி, லவ்வர் என எல்லாருக்கும் ப்யூட்டி, டியர், பேபி என செல்லப்பெயர்கள் ஆரம்பித்து லூசு, பக்கினு நேர்ல கூப்புடுற பேர்களை ஃபேஸ்புக் பேரா மாத்தி வைச்சுக்கலாம்னா எவ்ளோ ஜாலியா இருக்கும். அது ரொம்ப ஈஸி. உங்க மெசென்ஜர்ல  set nicknameனு ஒரு ஆப்ஷன் இருக்கும். அதுல போய் உங்களுக்கு புடிச்சவங்க பேர எப்படி வேணும்னாலும் எடிட் பண்ணி வைக்கலாம். 

யாருக்கும் தெரியாமா ப்ளான் பண்ணலாம்!

மெசென்ஜர்

பப்ளிக்கா ஒரு ஈவன்ட் ரெடி பண்ணி அதை உலகமே பார்த்து எனக்கு ட்ரீட் இல்லையானு கேட்டா என்ன செய்ய?, இதெல்லாம் இல்லாம க்ரூப்க்குள்ள இருக்குற பத்து பேர் மட்டும் ப்ளான் பண்ணி ட்ரீட்டோ , ட்ரிப்போ போக முடிஞ்சா எவ்ளோ ஜாலியா இருக்கும். அதுக்கும் மெசென்ஜர்ல வாய்ப்பிருக்கு, ஈவண்ட் ரிமைன்டர் செட் பண்ணுங்க. யார் வர்றீங்க, வரலைனு அங்கயே சொல்லிடலாம். அப்பறம் என்ன ட்ரீட் போய் செல்ஃபி போட்டு எப்பதான் இதெல்லாம் ப்ளான் பண்றாங்களோனு பொலம்ப விடுங்க... பாய்ஸ் அப்படியே எப்படியும் போகமாட்டோம்னு நினைக்குற அந்த கோவா ட்ரிப்பையும் போட்டு வையுங்க...

ரகசியமா பேசுங்க பாஸ்!

messenger

இன்னிக்கு இருக்குற நிலைமைல யார்கிட்ட என்ன பேசினாலும் லீக் ஆகிடுமோங்குற பயம் இருக்கு. அப்படி எதாவது ரகசியமா பேசணும்னா மெசென்ஜர்ல உள்ள ''சீக்ரெட் கான்வெர்சேஷன்'' மூலமா பேசுங்க உங்க மெஸேஜ எதிர்முனைல உள்ளவங்க பார்த்த 30 செகண்டுக்குள் டெலிட் ஆகுற மாதிரி ஆப்ஷனையும் செட் செய்து வைத்து கொள்ளலாம். 

கலர்ஃபுல் மெசென்ஜர்:

messenger

எல்லாருக்கும் தெரிஞ்சது ஃபேஸ்புக் மெசென்ஜர்  ப்ளூ கலர்னு மட்டும் தானே. அப்படின்னா இதை ட்ரை பண்ணுங்க, உங்களுக்கு ஃப்ரெண்ட்ஸுக்கு பிடித்த கலர்ல உங்க ஃபேஸ்புக் மெசென்ஜர மாத்திக்கலாம். சேஞ்ச் கலர் ஆப்ஷன் மூலமா கலர் மாத்துங்க. 

இதெல்லாம் உங்க ஃப்ரெண்ட்ஸுக்கு தெரியாம இருந்தா இந்த ட்ரிக்ஸ் மூலமா அவங்கள சர்ப்ரைஸ் பண்ணுங்க.. 

இதேபோல் வாட்ஸ்அப் ட்ரிக்ஸ் அறிய க்ளிக் செய்க

ச.ஸ்ரீராம்
 


டிரெண்டிங் @ விகடன்