கம்பேக் நோக்கியா... புதிய 3310-ல் மாறிய 10 விஷயங்கள்! #Nokia3310 | What has changed in new nokia 3310 model

வெளியிடப்பட்ட நேரம்: 10:57 (07/03/2017)

கடைசி தொடர்பு:10:56 (07/03/2017)

கம்பேக் நோக்கியா... புதிய 3310-ல் மாறிய 10 விஷயங்கள்! #Nokia3310

ந்த வருடம் வரவிருக்கும் ஐபோன் 8, சாம்சங் கேலக்ஸி நோட் 8 ஆகிய போன்களை விட, போன் பிரியர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது நோக்கியாவின் 3310-தான். சாதாரண போனாக இருந்து விடைபெற்ற 3310, தற்போது ஸ்மார்ட்போன் போல மீண்டும் வந்துள்ளது. பல வருடங்கள் கழித்து வந்தாலும் மவுசு குறையாத பாட்ஷா போல, மீண்டும் வந்துள்ளது நோக்கியா 3310. புதிய 3310-க்கும் பழைய 3310 போனுக்கும் இடையே எவ்வளவு மாற்றங்கள் தெரியுமா?

நோக்கியா 3310

1. முதலில் பிளாக் அண்ட் ஒயிட்டாக இருந்த டிஸ்ப்ளே தற்போது கலர் டிஸ்ப்ளேயாக மாறியுள்ளது. 2.4 இன்ச் கலர் டிஸ்ப்ளே மற்றும் சூரிய ஒளியிலும் படிப்பதற்கு ஏற்ப போலரைஸ்டு லேயர் என வண்ணமயமாக மாறியிருக்கிறது இதன் டிஸ்ப்ளே.

2. நோக்கியாவின் மிகப்பெரிய பலன்களில் ஒன்று அதன் பேட்டரி திறன். முந்தைய வெர்ஷனில் இருந்தது 1000 mAh ரிமூவல் பேட்டரி. தற்போதைய மாடலில் இருப்பது 1200 mAh ரிமூவல் பேட்டரி. இதற்கு 22 மணி நேரம் டாக்டைம், 25.3 நாட்கள் ஸ்டாண்ட் பை டைம் என்கிறது நோக்கியா.

3. முந்தைய வெர்ஷனில் அதிக கலர் ஆப்ஷன்கள் கிடையாது. ஆனால் புதிய நோக்கியா 3310-வில் வார்ம் ரெட், மஞ்சள், டார்க் ப்ளூ, க்ரே என நான்கு நிறங்களில் கிடைக்கிறது. 

4. முந்தைய வெர்ஷனில் மெமரி கார்டு ஸ்லாட், இன்டர்னல் மெமரி போன்ற வசதிகள் எல்லாம் கிடையாது. ஆனால் புதிய மாடலில் 16 எம்.பி இன்டர்னல் மெமரி உள்ளது. அத்துடன் 32 ஜி.பி வரை மெமரியை நீட்டித்துக் கொள்ளவும் முடியும் என்பது இதன் சிறப்பு.

நோக்கியா 3310 போன்

5. பழைய போனில் கேமரா வசதிகள் கிடையாது. ஆனால் இந்த முறை 2 எம்.பி திறன்கொண்ட ரியர் கேமராவை கூடுதலாக சேர்த்துள்ளனர். LED ஃப்ளாஷ் வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

6. முந்தைய போனைப் போலவே இன்பில்ட் ஸ்பீக்கர், வைஃபை, ஜி.பி.எஸ் போன்ற வசதிகள் இதிலும் இல்லை. ஆனால் இதில் புதிதாக ப்ளூடூத் மற்றும் FM ஆகிய வசதிகளைக் கொடுத்துள்ளது நோக்கியா.  இசை கேட்பதற்காக 3.5 mm ஆடியோ ஜாக்கும் இதில் உண்டு. 

7. கேம் பிரியர்களை மொபைலோடு கட்டிப்போட்ட ஸ்னேக் கேம் இதிலும் உண்டு. ஆனால் இந்த விளையாட்டும் காலத்துக்கு ஏற்ப மாறியுள்ளது. அதாவது பிளாக் அண்ட் ஒயிட்டில் இருந்த அந்த கேம் தற்போது கலர் வடிவத்துக்கு மாறியுள்ளது. 

8. பழைய நோக்கியா 3310-ல் ஒரே ஒரு சிம் மட்டுமே பயன்படுத்த முடியும். ஆனால் இந்த முறை ஒரு சிம் உள்ள போன், டூயல் சிம் வசதி உள்ள போன் என இரு மாடல்களை வெளியிட்டுள்ளது நோக்கியா. எனவே டூயல் சிம் ஆப்ஷன் வேண்டுபவர்கள், இரண்டு 2G சிம்களைப் பயன்படுத்த முடியும்.

Nokia 3310 camera

9. இதில் இருப்பது Micro USB போர்ட். இதனால் தற்போதைய ஸ்மார்ட்போன்களுடைய சார்ஜர்கள், டேட்டா கேபிள்கள் ஆகியவற்றை இதில் இணைக்க முடியும். பழைய நோக்கியா போல குண்டு பின், பட்டை பின் என்பதெல்லாம் இதில் கிடையாது.

10. போனைப் பார்க்காமலே நாம் டைப் செய்யும் அளவிற்கு நமக்கு எளிதாக இருந்த பழைய 3 X 4 கீ-பேட்தான் இதிலும். டச் ஸ்க்ரீனில் Qwerty கீ-போர்டில் டைப் அடித்துக் கொண்டிருப்பவர்களுக்கு இது ஒரு நாஸ்டால்ஜிக் மேட்டர்தான். கீ-பேட், டிசைன் என அனைத்திலுமே தற்போதைய மார்க்கெட்டிற்கு ஏற்ப புதுமையாக இருக்கிறது நோக்கியா 3310.

இந்த போன் குறித்த அறிவிப்பு வந்தநாள் முதலே, இதற்கான வரவேற்பும், ஆர்வமும் சமூக வலைதளங்களில் அதிகரித்து வருகிறது. அது விற்பனையிலும் எதிரொலிக்குமா என்பதனை பொறுத்திருந்துப் பார்ப்போம்.

- ஞா.சுதாகர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close