வெளியிடப்பட்ட நேரம்: 11:20 (13/03/2017)

கடைசி தொடர்பு:11:46 (13/03/2017)

இது சாதாரண ரோல்ஸ் ராய்ஸ் இல்லை!

உலகப் புகழ்பெற்ற ரோல்ஸ் ராய்ஸ் கார் நிறுவனம், தன்னுடைய கோஸ்ட் காரில் 'Elegance' எனும் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது.

Rolls Royce Diamonds

ஜெனிவா மோட்டார் ஷோவில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள இந்தக் காரில், மின்னுவது பெயின்ட் துகள் அல்ல, வைரம்.  ஆயிரம் வைரக்கற்களைத் தூளாக்கி, பெயின்ட்டில் கலந்து அடித்துள்ளார்கள். வைரத்தூளை பெயின்ட்டில் கலந்து வண்ணம் தீட்டப்பட்ட முதல் கார் இதுதானாம். இந்த வைரத்தூளை 'Diamond Stardust' என்று அழைக்கிறார்கள். இதற்காக, ஆயிரம் வைரக்கற்களையும் இரண்டு மாதங்கள் மைக்ரோஸ்கோப்பில் ஆராய்ந்துள்ளார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க