இளைஞர்களைக் கவரும் Fastrack-ன் ஆக்டிவிட்டி ட்ராக்கர்!

fasttrack activity tracker

ஆக்டிவிட்டி ட்ராக்கர் என்பது கையில் இருக்கும் வாட்சை போலத்தான். ஆனால், கிட்டத்தட்ட ஒரு ஸ்மார்ட் போன் செய்யும் வேலைகளை இது செய்யும். இப்படியொரு ஆக்டிவிட்டி ட்ராக்கர், 1,995 ரூபாயில் சந்தைக்கு வந்திருக்கிறது. டைட்டான் நிறுவனத்தின் கிளை நிறுவனமான ஃபாஸ்ட்ராக், 'Reflex' என்னும் புதிய ஆக்டிவிட்டி ட்ராக்கரை அறிமுகப்படுத்தியுள்ளது.

பல வண்ணங்களில் வரும் இந்த ட்ராக்கரை, ஆண்ட்ராய்டு அல்லது ஐபோன்களில் கனெக்ட் செய்துகொள்ளலாம். இதன்மூலம், போனில் வரும் இன்கமிங் கால் மற்றும் எஸ்எம்எஸ்-களுக்கான நோட்டிஃபிகேஷனை ட்ராக்கர் மூலமே அறிந்துகொள்ள முடியும். தூங்கும் நேரத்தை ட்ராக் செய்யும் இந்தக் கருவி, நீண்டநேரம் இதைப் பயன்படுத்துபவர் எந்த ஒரு செயலிலும் ஈடுபடாமல் இருந்தால், அதைப் பற்றியும் உஷார்படுத்துமாம். பல வித்தியாசமான வசதிகளுடன் வரும் இந்த ட்ராக்கரின் விலை 1,995 ரூபாயாகும். 

ஒரு முறை சார்ஜ் செய்தால், இந்த ஆக்டிவிட்டி ட்ராக்கரில் கிட்டத்தட்ட ஏழு நாட்கள் சார்ஜ் நிற்கும் என்று ஃபாஸ்ட்ராக் நிறுவனம் கூறுகிறது.

Fastrack

Do you like the story?

Please Appreciate the Author by clapping!