வெளியிடப்பட்ட நேரம்: 15:13 (14/03/2017)

கடைசி தொடர்பு:15:32 (14/03/2017)

கூகுளுடன் இணைந்த ஜியோ!

வெற்றிநடை போட்டு வரும் ஜியோ நிறுவனம், அடுத்ததாக, கூகுளுடன் இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கூகுளுடன் இணைந்து ஜியோ 4G ஸ்மார்ட் போனைத் தயாரிப்பதற்காக இரு நிறுவனமும் இணைந்துள்ளன. ஜியோ 4G சேவைக்காக, பிரத்யேகமாகத் தயாரிக்கப்படும் இந்த ஸ்மார்ட்போன்மூலம் வாடிக்கையாளர்களைக் கவர திட்டமிட்டுள்ளதாம் ஜியோ. ஆனால், இந்தத் திட்டம் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், இதன்மூலம் ஜியோவின் ஆப்ஸ்களை மேம்படுத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

Jio,Google

குறிப்பாக, ஜியோ ஸ்மார்ட் டி.வி தயாரிக்கும் பணிகளிலும் இந்த நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஜியோ ஸ்மார்ட் டி.வி, இந்த ஆண்டு இறுதியில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, 

நீங்க எப்படி பீல் பண்றீங்க