வெளியிடப்பட்ட நேரம்: 20:44 (15/03/2017)

கடைசி தொடர்பு:20:44 (15/03/2017)

விராட் கோலி கேப்டனாக இருக்க இந்த சம்பவம் தான் காரணம்..! #TrendsToday

Virat kohli #Trends

தல-தளபதி பட டீசர் ரிலீஸ் ஆரம்பிச்சு, எப்படா அரசியல்வாதிங்க வாயில இருந்து வார்த்தை வரும்னு ஆன்லைன்ல விழி வைச்சு காத்திருக்கும் நெட்டிசன்கள் எல்லாரோட நோக்கமும் ட்ரெண்டிங் தான்.  சில விஷயம் தெரிஞ்சு ட்ரெண்டாகும். சில விஷயம் எதுக்கு ட்ரெண்ட் ஆகுதுன்னே தெரியாம ஆகும். இப்படி ஒருநாள்ல நாம கடந்து போற ஹேஷ்டேக்ல கவனிக்க வைக்கும் சில ட்ரெண்டிங்குகள் இதோ... #Trends

#RK Nagar

எப்பவும் இடைதேர்தல்ன்னா ஆளுங்கட்சி தான் ஜெயிக்கும். ஆனா இந்த முறை ஆர்.கே நகர் இடைத்தேர்தல்ல ஆளுங்கட்சி ரெண்டா பிரிஞ்சு கிடக்கு. ரெண்டு அதிமுக-ல எந்த அதிமுக ஜெயிக்கும்ங்கறது தான் ட்விஸ்ட். ஆளாளுக்கு அம்மா சமாதில தியானம் பண்றாங்க. ஜெயலலிதா ஒதுக்கி வைச்ச டிடிவி தினகரன் தான் சசிகலா தரப்பு அதிமுகவோட ஆர்.கே நகர் வேட்பாளர். அதுனால தான் இன்னைக்கு ஆர்.கே நகர் ட்ரெண்டுல இருக்கு. திமுக வேட்பாளர் மருதுகணேஷை அறிவித்துள்ளது. இப்படி பிரதான கட்சிகளின் வேட்பாளர் அறிவிப்பால் ட்ரெண்ட் அடித்தது ஆர்.கே நகர்...

#Barmer

ட்விட்டர் இந்தியா ட்ரெண்ட்ல திடீர் என்ட்ரி பார்மெர். இது ராஜஸ்தான்ல உள்ள ஒரு பகுதி. இங்க இந்தியாவோட MiG போர்விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. 3 பேர் இறந்திருக்காங்க. தொழில்நுட்ப கோளாறு காரணமா தரையிறக்க முயற்சி செஞ்சப்ப கட்டுப்பாட்டை இழந்து  இந்த விபத்து நடந்திருக்கு.

#GulshanKumarBiopic

பாலிவுட்டில் எண்பது, தொண்ணூறுகளில் கலக்கிய இசையமைப்பாளர் குல்ஷான் குமார். அவரது வாழ்க்கையைப் படமாக்கப்படவுள்ளது பாலிவுட். இதில் அக்‌ஷய் குமார் ஹீரோவாக நடிக்கிறார். இந்த அறிவிப்பை குல்ஷான்குமாரது மகளின் பிறந்தநாளன்று அறிவித்துள்ளனர். இவர் 1997-ம் ஆண்டு மர்மமான முறையில் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்துக்கு மொகுல் என்று பெயரிடப்பட்டுள்ளது.

#NammaCanteens

தமிழ்ப்படம் பாக்கும் போது மட்டுமில்ல பெங்களூருல போய் சாப்டாலும் இனிமே இது எங்கயோ காப்பி அடிச்ச மாதிரி இருக்கேன்னு தோணும். ஆமாம் நம்ம ஊர் அம்மா கேண்டின் அங்க ’நம்ம கேண்டினா’ உருவெடுத்து பாகுபலி பார்ட் 2 மாதிரி இருக்காம். 5 ரூபாய்க்கு சாப்பாடு போட்டு அல்டிமேட் வைரல் பட்டியலில் ட்ரெண்டாகியுள்ளது கர்நாடகா பட்ஜெட். நம்ம கேண்டின்ல அம்மா போட்டோ இருக்கும் . நம்ம கேண்டின்ல யார் போட்டோ இருக்கும்னு ரரக்கள் தேட, சின்னம்மா பெங்களூரில் இருப்பதால் அதுவும் நம்ம கேண்டின் தான்னு ட்ரோலில் இறங்கியது இணையம். 

டூடுல் ஆஃப் தி டே!

#Trends

கூகுள் எல்லா முக்கிய நிகழ்வுக்கும் டூடுல் வெளியிடும். அப்படிப்பட்ட கூகுள் இன்னிக்கு வெளியிட்டு இருக்குறது கிரிக்கெட் டூடுல். இன்னிக்கு தான் முதன் முதலா சர்வதேச அரங்கில் டெஸ்ட் போட்டி ஆடப்பட்டதாம். 1877-ம் ஆண்டு மார்ச் 15-ம் தேதி மெல்போர்ன் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த மேட்ச்ல இங்கிலாந்தை 45 ரன் வித்தியாசத்துல ஆஸ்திரேலியா தோற்கடிச்சுச்சு. இந்த போட்டில முதல்ல செஞ்சுரி அடிச்சது ஆஸியோட பேனர்மேன், முதல் 5 விக்கெட் எடுத்தது இங்கிலாந்தோட மிட் வின்டர். 

இது தான் பாஸ் இன்னிக்கு ட்ரெண்டு. வேற எதாவது வித்தியாசமான ட்ரெண்டு இருந்தா கமெண்ட்ல பண்ணுங்க. 

- ட்ரெண்ட்பெர்க்
 


டிரெண்டிங் @ விகடன்