10 வயது குழந்தைக்கு ஃபேஸ்புக்கில் மேத்ஸ் சொல்லிக்கொடுத்த காவல்துறை..! | Ohio police surprised this kid with their online support

வெளியிடப்பட்ட நேரம்: 17:23 (18/03/2017)

கடைசி தொடர்பு:17:38 (18/03/2017)

10 வயது குழந்தைக்கு ஃபேஸ்புக்கில் மேத்ஸ் சொல்லிக்கொடுத்த காவல்துறை..!

காவல்

காவல்துறை உங்கள் நண்பன்...

சிரிக்காதீங்க பாஸ். நம்ம ஊரின் பெரும்பாலான காவலர்களின் நடவடிக்கையும், இந்த வாசகத்தை வைத்து சினிமாக்காரர்கள் அடித்த காமெடிகளும் நம்மை சிரிக்கத்தான் தூண்டும். ஆனால், நாம்தான் சிரிக்காமல் இருக்க வேண்டும். அப்படி என்ன போலீஸ் மீது நல்லெண்ணம் என்கிறீர்களா? அதற்கு நாம் அமெரிக்க போலீஸ் செய்த ஒரு காரியத்தை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும்.

அமெரிக்காவில் இருக்கிறது ஓஹாயோ மாகாணம். அதன் காவல்துறைக்கென ஃபேஸ்புக் பக்கம் இருக்கிறது. அந்தப் பக்கத்துக்கு ஒரு தனி மெஸெஜ் வந்தது, போலீஸுக்கு மெசெஜ் என்றால் “என்னை காப்பாத்துங்க..காப்பாத்துங்க” என்றுதானே தகவல் வரும். இதுவும் கிட்டத்தட்ட அப்படித்தான். ஆனால், வில்லன் யார் தெரியுமா? மேத்ஸ்.

கணக்கு வீட்டுப்பாடம் செய்து கொண்டிருந்த ஒரு பெண்குழந்தைக்கு அதில் சந்தேகம் வந்துவிட்டது. அங்கேயும் “எனி ஹெல்ப்...ப்ளீஸ் காண்டாக்ட்...காவல்துறை உங்கள் நண்பன்” என சொல்லியிருக்கிறார்கள். எனவே, அந்த பத்து வயது குழந்தை லேனா ட்ரேப்பர் போலீஸுக்கு மெஸெஜை தட்டிவிட்டது.

”போலீஸ் அங்கிள்..போலீஸ் அங்கிள்..எனக்கு மேத்ஸ் ஹோம் ஒர்க்ல ஒரு சின்ன உதவி வேண்டும்”

அந்த மெஸெஜ் லெஃப்டினண்ட் க்ரூபருக்கு சென்றிருக்கிறது. அவரும் பதிலுக்கு “சரி..என்ன உதவி” எனக் கேட்டிருக்கிறார்.

 

 

லேனா, கேள்வியை கேட்க ட்ரேப்பர் பதில் சொல்ல... காவல்துறையின் ஃபேஸ்புக் மெஸெஜில் மேத்ஸ் பாடமே நடந்திருக்கிறது. இதை லேனா, தன் அம்மாவிடம் சொல்ல அவர் முதலில் நம்பவில்லை. பின், அந்த கான்வோவை பார்த்து ஆச்சர்யப்பட்டிருக்கிறார்.

பின், அந்த ஸ்க்ரீன்ஷாட்டை சமூக வலைதளத்தில் பகிர்ந்து அந்த போலீஸூக்கு தனது நன்றியை தெரிவித்திருக்கிறார். “சமூகத்துடன் நேசமான உறவை வளர்க்கும் ஓஹாயோ காவல்துறைக்கு என் நன்றிகள்” என எழுதியிருக்கிறார்.

ஓஹாயோ காவல்துறை செம லந்தாக, ஜாலியாக இதுபற்றி பதில் சொல்லியிருக்கிறார்கள். “அந்த குழந்தைக்கு உதவியதில் சந்தோஷம். அடுத்த முறை, மேத்ஸ் பற்றிய உதவிகளுக்கு லைஃப்லைனை பயன்படுத்துவோம்” என சொல்லியிருக்கிறார்கள்.

ஏன் தெரியுமா? அந்த காவல்துறை நண்பர் சொன்னது தவறான விடையாம். அதையும் நெட்டிசன்ஸ் கண்டுபிடித்து கலாய்த்திருக்கிறார்கள்.

இந்த ட்ரோல் இருக்கிறதே....

- கார்க்கிபவா

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்