வெளியிடப்பட்ட நேரம்: 15:09 (19/03/2017)

கடைசி தொடர்பு:13:59 (20/03/2017)

நெட்டிசன் ஒருவரின் இணைய தேவை எவ்வளவு தெரியுமா? #VikatanSurveyResults

#VikatanSurveyResults

ஆள் பாதி... ஆப்ஸ் பாதி ஜெனரேஷன் இது. வேலைக்கு ரெஸ்யூம் எடுத்துக்கொண்டு போகாமல், தனக்கென ஒரு ஆப் உருவாக்கி அதன் லிங்க் தந்துகொண்டிருக்கிறார்கள் டெக் ஃப்ரீக்ஸ். இனி எல்லாமே மொபைல் என ஆன  பின், அதைப் பற்றிய சுய ஆய்வு அவ்வப்போது தேவைப்படுகிறது. அப்படி உங்களையும், உங்கள் மொபைலையும் பற்றி சில கேள்விகள் கேட்டிருந்தோம். ஆன்லைனில் கேட்ட கேள்விகளுக்கு பதில்களை ஆயிரக்கணக்கான நெட்டிசன்கள் தெறிக்கவிட்டனர். பதில்கள் தந்த தகவல்கள் ஆச்சர்யமளிப்பவையாகவும், சுவாரஸ்யமானவையாகவும் உள்ளன. #VikatanSurveyResults

#VikatanSurveyResults


 44 சதவிகிதம் பேர் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள போன்களைப் பயன்படுத்துகின்றனர். 44 சதவிகிதம் பேர் 10 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான போனைப் பயன்படுத்துகின்றனர். 

சுமார் 90 சதவிகிதத்துக்கும் அதிகமாக ஆண்ட்ராய்ட் போனும், அதற்கு அடுத்த இடங்களை விண்டோஸ், ஐஓஎஸ் பிடித்துள்ளன.

#VikatanSurveyResults

ஒரு சராசரி ஸ்மார்ட்போன் பயன்பாட்டாளர் அதிகபட்சமாக தனது போனில் 10-20 மொபைல் ஆப்-களை வைத்துள்ளார். 30ஆப்ஸ்க்கு மேல் 13.7 சதவிகிதம் பேர் வைத்துள்ளனர்.

ஆப்ஸ் பயன்பாட்டில் சமூக வலைதளங்களுக்குத்தான் முன்னுரிமை அளிக்கின்றனர். செய்தி மற்றும் பொழுது போக்கு ஆப்-களுக்கு முறையே 16,18 சதவிகித வரவேற்பு உள்ளது.

#VikatanSurvey

ஒருவருக்கு மாதத்துக்குத் தேவைப்படும் டேட்டா அளவு என்பது 2-3 ஜிபியாக உள்ளது. 29 சதவிகிதம் பேர் 5 ஜிபிக்கும் அதிகமான டேட்டாவை மாதந்தோறும் பயன்படுத்துகின்றனர். இது சர்வதேச அளவைக் காட்டிலும் அதிகம்.

37 சதவிகிதம் பேருக்கு இரவில்  போனை சார்ஜில் போட்டு தூங்கும் பழக்கம் உள்ளது.

#VikatanSurvey

ஒரு நாளில் தோராயமாக 3 மணி நேரம் வரை அதிகான நபர்கள் செல்போன் உபயோகிப்பவர்களாக உள்ளனர். 16.8 சதவிகிதம் பேர் 5 மணி நேரத்துக்கும் அதிகமாக பயன்படுத்துகின்றனர்.

#VikatanSurvey

செல்போன் பயன்படுத்துபவர் ஒருவர் அதிகமாக ஹெட்போனுக்கும், செல்போன் கவருக்கும்தான் பணம் செலவழிக்கிறார்கள். 
 

ச.ஶ்ரீராம்


டிரெண்டிங் @ விகடன்