சலுகை விலையில் iPhone SE...!

Iphone

ஆப்பிள் நிறுவனத்தின் iPhone SE 16GB ஸ்மார்ட் போன்கள் 19,999 ரூபாய்க்கு ஆஃபர் விலையில் குறுகிய காலத்துக்கு கிடைக்கவுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற ரீடெய்ல் ஸ்டோர்களில் இந்த ஆஃபர் விலையில் iPhone SE போன்களைப் பெறலாம். 

மேலும், இந்த ஆஃபரின் மூலம் 64GB iPhone SE போன்கள் 25,999 ரூபாய்க்கு வாங்க முடியும். இந்தச் சலுகை வரும் மார்ச் 31-ம் தேதி வரை மட்டுமே இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. சில குறிப்பிட்ட வங்கிகளின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி இந்த போன்களை வாங்கினால், 5,000 ரூபாய் கேஷ் பேக்கும் அளிக்கப்படுமாம்.

இதுதவிர, இந்த காலாண்டு முடிவதற்கு முன்னர் மற்ற ஐபோன்கள் மற்றும் ஆப்பிள் நிறுவன பொருட்களின் விலைகளும் குறையும் என்று தகவல்கள் கூறுகின்றன.

iPhone SE போன்கள் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம்தான் இந்தியாவில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!