Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விற்பனையில் சாதனை படைத்த 'மோட்டோ ஜி5 ப்ளஸ்'

மோட்டோரோலாவின்  புதிய அறிமுகமான 'மோட்டோ ஜி5 ப்ளஸ்' மாடல் போன் நிமிடத்துக்கு 50 போன்கள் வரை விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. 

மோட்டோரோலா மார்ச் 15-ம் தேதி இந்தியாவில் மோட்டோ ஜி5 ப்ளஸ் மாடலை அறிமுகப்படுத்தியது. இந்த ஜி5 மாடல் ப்ளிப்கார்ட் இணையத்தளத்தில் மட்டுமே கிடைக்கும்.

மோட்டோ ஜி5 ப்ளஸ் இரண்டு வகைகளில் அறிமுகமானது. 3 GB Ram மற்றும் 16 GB internal memory கொண்ட மாடல் 14,999 ரூபாய்க்கும், 4 GB Ram மற்றும் 32 GB internal memory கொண்ட மாடல் 16,999 ரூபாய்க்கும் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் 3 GB Ram வசதி கொண்ட மாடல் போன் அறிமுகப்படுத்தப்பட்டு சில மணி நேரங்களிலேயே விற்றுத் தீர்ந்தது.  தற்போது 4 GB Ram வசதி கொண்ட ஜி 5 மாடல் போன் மட்டுமே ப்ளிப்கார்ட்டில் கிடைக்கிறது.

இருப்பினும் ப்ளிப்கார்ட் நிறுவனம் இதுவரையில் எத்தனை போன்கள் விற்றுள்ளன என்ற தகவலை வெளியிடவில்லை. முதல் நாள் விற்பனையின்போது எக்ஸ்சேஞ்ச் ஆஃபருக்கு 1,500 ரூபாயும் ஸ்டேட் பாங்க் கார்டு பயன்படுத்துவர்களுக்கு 10 % தள்ளுபடியும் செய்தது. இந்தக் காரணங்களால் மோட்டோ ஜி5 ப்ளஸின் விற்பனை எதிர்பார்த்ததைவிட அமோகமாக இருந்தது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement