வைஃபை மூலம் 100 மடங்கு அதிவேக இண்டர்நெட்!

நெதர்லாந்தில் உள்ள இந்தோவன் யுனிவர்சிட்டி ஆப் டெக்னாலஜியில் நடத்தப்பட்ட ஆய்வில், புதிய வைஃபை மூலம்நொடிக்கு 40 ஜிபிக்கும் அதிகமான வேகத்தில் இண்டர்நெட் பயன்படுத்த முடியும் என ஆராய்ச்சியில் கண்டறிந்துள்ளனர். இன்ப்ராரெட் சிக்னல்களின் உதவியோடு தற்போது இருக்கும் வேகத்தைவிடநூறு மடங்கு வேகத்தில் இண்டர்நெட் வழங்கமுடியும் என அந்த ஆய்வு தெரிவிக்கிறது. இந்தமுறையில் மிகக் குறைந்த விலையில் ஆன்டெனாக்கள் மூலம் இண்டர்நெட் வழங்கப்படுகிறது. இந்த ஆன்டெனாக்கள் வெவ்வேறு திசைகளில் வெளிச்சத்தைப் பரப்பும் தன்மைகொண்டது. ஆப்டிக்கல் ஃபைபர் மூலம் வெளிச்சத்தைப் பரப்புவதன் மூலம் இண்டர்நெட் வழங்கும் எனவும்சொல்லப்பட்டுள்ளது. இன்ப்ராரெட்டை பயன்படுத்துவதால் உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாது எனவும்தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய வைஃபைக்களில் 2.5 அல்லது 5.0 ஜிகாஹெர்ட்ஸ் ரேடியோ சிக்னல்கள்பயன்படுத்தப்படுகிறது. புதிய இன்ப்ராரெட் அமைப்புகளில் 1500 நானோமீட்டர் மற்றும் அதற்கும் அதிகமான அளவுகள்பயன்படுத்தப்படுகின்றன. ஆய்வு மேற்கொள்ளும்போது,2.5 மீட்டர் தொலைவில் நொடிக்கு 42.8 ஜிபி வேகத்தில் இண்டர்நெட் வழங்கப்பட்டது. தற்போது இருக்கும் வழிமுறைகளில் அதிசிறந்த நிலைகளிலும் நொடிக்கு 300 எம்பி என்றவேகத்தில் மட்டுமே இண்டர்நெட் பயன்படுத்த முடியும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!