பவர் பாண்டியோட ரிலேஷன்ஷிப் ஸ்டேட்டஸ்,அமிதாப் ட்ரோல் ஸ்டேட்டஸ் என்ன? #TodayTrends

#TodayTrends

#TodayTrends

ஆமா, விராட் கோலி ட்ரம்ப் தான்! 

ஆஸ்திரேலிய வீரர்களை தொடர்ந்து ஸ்லெட்ஜிங் செய்து வரும் இந்திய கேப்டன் விராட் கோலியை ஆஸ்திரேலிய ஊடகம் ''விளையாட்டின் டொனால்ட் ட்ரம்ப் விராட் கோலி'' என விமர்சித்திருந்தது. இதற்கு பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் ''ஆஸ்திரேலிய ஊடகத்துக்கு நன்றி, ஆம் விராட் கோலி விளையாட்டின் டொனால்ட் ட்ரம்ப் தான். ஏனென்றால் அவர் வெற்றி பெற்றுள்ளார். அவர் தான் தலைவராகவும் உள்ளார்” என கலாய்த்து பதிலடி தந்துள்ளார். ஆஸ்திரேலிய ஊடகங்கள் தான் முதலில் விராட் கோலி ப்ரை பேட் எனும் மூளை மழுங்கிய நிலையில் செயல்படுவதாகவும் கூறியது. பின்னர் ஸ்டீவ் ஸ்மித்தின் செயல்கள் விமர்சனத்துக்குள்ளானது.

 

ரயில் உணவுகளின் விலைப்பட்டியல்

ரயில்வே அமைச்சகம் ரயிலில் விற்கப்படும் உணவு பொருள்களின் விலை பட்டியலை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. ரயில்வே துறை கீழ் இயங்கும் IRCTC கேன்டீன் விற்பனையாளர்கள் தண்ணீர், டீ, காபி, சாப்பாடு உள்ளிட்டவற்றை அதிக விலைக்கு விற்பதாக புகார்கள் குவிந்ததை தொடர்ந்து அவற்றின் விலை பட்டியலை ட்விட்டரில் வெளியிட்டுள்ளனர். 

 

#worldwaterday

உலக தண்ணீர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. தண்ணீரின் அவசியம் குறித்தும், தண்ணிர் பற்றாக்குறை மற்றும் பாதிப்பு குறித்தும் பல்வேறு விழிப்புஉணர்வுகள் பகிரப்பட்டு வருகின்றன. தண்ணீருக்கு பின்னால் நடக்கும் வியாபார அரசியல், ஊழல்கள் என இன்னொரு பக்கம் இருப்பதையும் சுட்டி காட்டி வருகின்றனர். #worldwaterday, #SaveWater என்ற ஹேஷ்டேக்குகள் உலக அளவில் ட்ரெண்டானது.


பவர்பாண்டியோட ரிலேஷன்ஷிப் ஸ்டேட்டஸ் மாஸ்!

தனுஷ் தயாரித்து இயக்கும் படம் பவர் பாண்டி . இதில் ராஜ்கிரண், ரேவதி, பிரசன்னா, சாயாசிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. படம் ஏப்ரல் 14-ம் தேதி ரிலீஸ் ஆகிறது. சோட்டா பீம், ராயல் என்ஃபீல்ட் என எல்லா வயதினருக்குமான விஷயங்களை பவர் பாண்டிட்ட எதிர்பார்க்கலாம் என்று விஷுவலில் சொல்கிறார் இயக்குனர் தனுஷ்.  படத்தில் 64 வயசுலயும் ஐ யம் சிங்கிள்னு சொல்லுற ராஜ்கிரண். இங்க வந்து செத்துடாதனு கெஞ்சும் ரேவதி, எவ்ளோ வயசானாலும் துணை துணைதான்னு சொல்லும் டிடினு நட்சத்திர பட்டாளம் மாஸ் காட்டும் ட்ரெய்லரில் கூடுதல் கெத்து தனுஷ் என்ட்ரி... டேக்ஸுக்காக பவர் பாண்டி ப.பாண்டி ஆனது வேறு கதை.

#SamsungPay

சாம்சங் புதிதாக இந்திய வாடிக்கையாளர்களுக்காக பேமன்ட் கேட்வேயை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் ஆக்சிஸ், ஐசிஐசிஐ, எஸ்பிஐ, ஸ்டான்டர்டு சார்ட்டர்ட் உள்ளிட்ட பல வங்கிகள் பார்ட்னராக உள்ளதாக அறிவித்துள்ளது. டிஜிட்டல் இந்தியா, கேஷ்லெஸ் பொருளாதாரம் என மாறி வரும் இந்தியாவில் இதற்கு அதிக வரவேற்பு இருக்கும் என்று சாம்சங் தெரிவித்துள்ளது. 

ஆர்.கே நகருக்கு வராத தீபா, வடகொரியாவின் ஏவுகணை சோதனை தோல்வி, அனிருத்-ரஜினி சந்திப்புனு ஹிட் அடித்த இன்றைய நாளின் நீங்கள் ரசித்த ட்ரெண்ட்ஸ் பற்றி கமென்ட் பண்ணுங்க...

- ட்ரெண்ட்பெர்க்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!