ஆர்.கே. நகர் தேர்தலில் ஜெயிக்க உதவும் தொப்பிகள்.. தினகரன் கவனத்துக்கு..!

ஆர்.கே.நகர மக்களுக்கு இது வசந்த காலம். ஆளுங்கட்சி ஓரணியில் நின்றாலே வசூல் பறக்கும். இப்போது ஆட்சியில் இருந்தவர்கள் பிரிந்து நிற்பதால் Buy one get one ஆஃபர் போல இரண்டு பக்கமும் பணப்பட்டுவாடா நடக்குமென எதிர்பார்க்கலாம். இரண்டு அணிகளுக்குமே இரட்டை இலை சின்னம் கிடைக்கவில்லை. சசிகலா அணி தரப்பில் நிற்கும் தினகரனுக்கு தொப்பி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. அடிக்கிற வெயிலுக்கு ஆளுக்கொரு தொப்பி கொடுத்து ஓட்டு கேட்பார்கள் என்பது நிச்சயம். அப்படி கொடுக்கும் போது சாதா தொப்பி கொடுக்காமல் கொஞ்சம் ஸ்பெஷலாக கொடுத்தால் நன்றியோடு வாக்களிப்பார்கள். அது என்ன ஸ்பெஷல் தொப்பி? இந்தாங்க எங்க சஜெஷன்ஸ்.

LED கேப்:

தொப்பி

வெயில் காலம். எப்படியும் பவர் கட் அதிகரிக்கும். ஆர்.கே.நகர் சாலை வசதிகளை பற்றி சொல்ல வேண்டுமா? “செல்லும் வழியெல்லாம் பள்ளம் வரலாம்” ரகம்தான். அதனால், LED கேப்களை கொடுத்து உதவினால், வீடு வரைக்கும் மக்கள் பத்திரமாக போய்விடுவார்கள். இந்தப் படத்தில் கொடுத்திருப்பது போலவே ஆர்டர் தந்தால் நான் பொறுப்பாக மாட்டேன். இது திமுகவின் கொடி என்பதை ரத்தத்தின் ரத்தங்களுக்கு நினைவூட்டிக் கொள்கிறோம்.

MIDI கேப்:

கேப்

மிடி எப்படி கேப் ஆகும்னு கேட்கறீங்களா? இந்த மிடி - Musical instrument digital interface. இது மூலமா இரண்டு எலக்ட்ரானிக் கருவிகளை இணைச்சு செயல்படுத்த முடியும். இந்த கேப்பை வீட்டுக்கு ரெண்டு கொடுத்துட்டா, சம்மர் லீவுல இருக்கிற குழந்தைகள் போரடிக்காம நிறைய புதுப்புது விளையாட்டு விளையாடுவாங்க. அப்புறம் என்ன? அப்பா, அம்மா தொடங்கி தாத்தா பாட்டி ஓட்டு வரைக்கும் நமக்குதான்.

ஹெட்ஃபோன் கேப்:

கேப்

காதே இல்லாம போற பொண்ணுங்கள கூட பாத்துடலாம். காதுல ஹெட்ஃபோன் இல்லாதவங்கள பாத்திருக்கீங்களா? பெண்களுக்காகவே வாழந்த அம்மா வழி வந்த நீங்க... அந்த பெண்களுக்காக இந்த ஹெட்ஃபோன் கேப்பை வாங்கித் தரலாம். விலை கொஞ்சம் கூட குறைவா இருந்தாலும், இது ஒரு எமோஷனல் கனெக்ட் கொடுக்கும். அம்மா, சின்னம்மா ஃபோட்டோ கூட பிரிண்ட் பண்ணிக்குங்க. ஆனா, தியேட்டர்ல எங்கள தெறிக்க விட்ட “தாயே..நீயே” பாட்டை மட்டும் ப்ரீலோடு பண்ணி கொடுத்திடாதீங்க. அப்புறம், டெபாஸிட்டுக்கு நான் பொறுப்பில்லை.

ப்ளூடூத் கேப்:

கேப்


மேல சொன்னா எல்லாமே இதுக்கும் பொருந்தும். ஆனா, முடியோடு சிக்குற வொயர் இதுல கிடையாது.தமிழக அரசை சிறையில் இருந்தபடியே வழிநடத்தும் சின்னம்மா போல, இந்த ப்ளூடூத் பாக்கெட்டில் இருந்தபடியே தொப்பியை வழிநடத்தும் என்றால் அது மிகையல்ல.

கேமரா தொப்பி:

தொப்பி


எவ்ளோ எழுதினாலும் படிக்க மாட்றாங்க ப்ரோ. எல்லாம் வீடியோதான். அதுவும், யாருக்கும் தெரியாம எடுத்த ஸ்கேண்டல் வீடியோன்னா.. டபுள் மவுசு. அதுக்காகவே உருவாக்கினதுதான் இந்த கேமரா தொப்பி. இத போட்டுக்கிட்டு போய் மக்கள்ட்ட காசு கொடுக்கலாம். காசு வாங்கினவர் ஓட்டு போடலைன்னா, நாளைக்கு அவன் காசு வாங்கினதுக்கு ஆதாரமா காட்ட வீடியோ எடுக்க இந்த தொப்பி பயன்படும். 

இன்னும் வகைவகையா, ரகரகமா தொப்பிங்க இருக்கு. ஆனா, எவ்ளோ யோசிச்சு பார்த்தாலும் பர்மா பஜார்ல விக்குற பொம்மையை தவிர கரண்ட் கம்பத்துக்கு வேறு ஒண்ணும் தோணல. 

-கார்க்கிபவா

Do you like the story?

Please Appreciate the Author by clapping!