விற்பனைக்கு வந்தது நோக்கியா 150... விலை 2,059 ரூபாய்!

நோக்கியா நிறுவனத்தின் நோக்கியா 150 மற்றும் நோக்கியா 150 டூயல் சிம் போன்கள் விற்பனைக்கு வந்துள்ளன. இந்த போனின் விலை 2,059 ரூபாய் ஆகும்.

ஃப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் இணையதளங்களில் இந்த போனை வாங்க முடியும். கறுப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் இந்த போன்கள் தயாரிக்கப்பட்டு, சந்தைக்கு வந்துள்ளது. 

1020 mAh பேட்டரி வசதியுடன் வரும் இந்த போனை, ஒரு முறை முழுதாக சார்ஜ் செய்தால், 22 மணி நேரத்துக்குப் பயன்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது. மேலும், 25 நாள்களுக்கு ஸ்டேண்டு-பையில் இருக்குமாம். 2.4 இன்ச் ஸ்கிரீன், MP3 ப்ளேயர், FM ரேடியோ, LED ப்ளாஷ் என்ற பல அட்டகாச வசதிகளுடன் மார்க்கெட்டுக்கு வந்துள்ளது, நோக்கியா 150.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!