வெளியிடப்பட்ட நேரம்: 09:59 (27/03/2017)

கடைசி தொடர்பு:10:00 (27/03/2017)

சைனாமேன் குல்தீப்... வாட்டர் பாய் கோலி... யாருக்கு மவுசு அதிகம்?

சென்ற வார இறுதியில் கிரிக்கெட் போட்டிகள் பல வித்தியாசமான நிகழ்வுகளை சந்தித்தன. அத்தனையும் வைரல் ரகம் தான். இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான போட்டியில் அறிமுகமான குல்தீப் யாதவ் வீசிய சைனா மேன் பந்து, தென்னாப்பிரிக்கா - நியூஸிலாந்து இடையேயான போட்டியில் டாம் லாதம் பிடித்த அபாரமான கேட்ச், இலங்கைக்கு எதிராக போட்டியில் சதமடித்து வங்கதேசத்தை வெற்றியடைய செய்த தமீம் இக்பால். காயம் காரணமாக ஓய்வில் இருக்கும் இந்திய கேப்டன் கோலி... வீரர்களுக்கு தண்ணீர் கொண்டு வரும் வாட்டர் பாயாக மாறியது ஆகியவை தெறி வைரலானது, இந்த வைரல்கள் தான் இந்த வார இறுதியை ஆக்கிரமித்து மாஸ் காட்டின, மேலும் கூகுளில் இந்தியாவின் பெரும்பாலன பகுதிகளீல் தேடப்பட்ட வார்த்தைகள் பட்டியலிலும் இடம் பிடித்துள்ளன.

குல்தீப் யாதவின் சைனாமேன் பந்து:

 

 

இடது-கை பவுலரான குல்தீப் யாதவ், லெக்-ஸ்பின் முறையில் பவுலிங் வீசுகிறார். இதைப் போல் இடது-கை பவுலர்கள் அறிதினும் அறிதாகத்தான் லெக்-ஸ்பின் முறையில் பவுலிங் வீசுவார்கள். 20-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடியவர் எல்லீஸ் ஏகான்ங் ( Ellis Achong) சீன வம்சாவளியில் இருந்து டெஸ்ட் கிரிக்கெட் விளையாடிய முதல் நபர். இவர், லெக்-ஸ்பின் வீசும் இடது-கை பந்துவீச்சளராக இருந்தார். இவர் பந்துவீச்சுக்குப் பிறகே, 'சைனா-மேன்' சொல் கிரிக்கெட்டில் பயன்படுத்தப்பட்டது. இந்த போட்டியில் குல்தீப் யாதவ் சைனா மேன் பந்தை வீசியதன் மூலம் மீண்டு இந்த வார்த்தை ட்ரெண்டாகியுள்ளது.

வாட்டர் பாய் கோலி:

 

 

இந்தியா-ஆஸ்திரேலியா நான்காவது டெஸ்ட் தர்மசாலாவில் நடந்து வருகிறது. காயம் காரணமாக கோலி இந்தப் போட்டியில் இருந்து விலகியுள்ளார். இந்நிலையில், இதில் ஆஸ்திரேலியா பேட்டிங் செய்து கொண்டிருக்கும் போது, இந்திய வீரர்களுக்கு எனர்ஜி டிரிங்ஸ் கொடுத்துள்ளார் கோலி. மேலும் அறிமுக வீரர் குல்தீப் யாதவை பவுண்டரி லைனில் நின்று உற்சாகப்படுத்தியுள்ளார். இது சமூக வலைதளங்களில் தெறி வைரலாகியுள்ளது. ட்விட்டரில் நெட்டிசன்கள் 10000 ரன்களுக்கு மேல் குவித்த வாட்டர் பாய், அழகான வாட்டர் பாய் என ட்விட்டரில் புகழ்ந்துள்ளனர்.

நூற்றாண்டின் சிறந்த கேட்ச்:

தென்னாப்பிரிக்கா - நியூஸிலாந்து இடையேயான போட்டியில் நியூஸிலாந்து வீரர் டாம் லாதம் ஷார்ட் லெக் திசையில் நின்று கொண்டிருந்தார். தென்னாப்பிரிக்க வீரர் டூப்ளெசிஸ் ஆடிய ஸ்வீப் ஷாட்டை சமயோஜிதமாக கணித்து அதற்கேற்ப நகர்ந்து போய் பிடித்து மொத்த கிரிக்கெட் உலகையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார். கிரிக்கெட் ரசிகர்களால் இந்த கேட்ச் இந்த நூற்றாண்டின் சிறந்த் கேட்ச்சாக வர்ணிக்கப்படுகிறது.

தனி ஒருவன் தமீம் இக்பால்:

இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தமீம் இக்பாலின் சதத்துடன் வங்க தேசம் 324 ரன்கள் குவித்தது. மேலும் இலங்கையை 90 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த போட்டியில் சதமடித்த தமீம் இக்பால் சர்வதேச போட்டிகளில் 10000 ரன்களை கடந்த முதல் வங்கதேச வீரர் என்ற பெருமையை பெற்றார். 

இந்த நான்கு விஷயங்களையும் கூகுளில் தேடிய அதிகமாக தேடியுள்ளனர். இதில் சைனாமேன் பந்து முதலிடத்தை பிடித்துள்ளது. மொத்தத்தில் சென்ற வாரம் கிரிக்கெட் சுவாரஸ்யங்கள் நிறைந்த வாரமாக அமைந்துள்ளது. 

ச.ஸ்ரீராம்


டிரெண்டிங் @ விகடன்