வெளியிடப்பட்ட நேரம்: 16:10 (27/03/2017)

கடைசி தொடர்பு:16:10 (27/03/2017)

Arbo virtual அசிஸ்டன்டுடன் வெளியான பேனசோனிக் எலூகா ஸ்மார்ட் போன்!

Eluga smart phone

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேனசோனிக் நிறுவனம் அதன் எலூகா வகை ஸ்மார்ட் போன்களை வெளியிட்டது. எலூகா ரே மேக்ஸ் மற்றும் எலூகா ரே எக்ஸ் என்ற இருவகை போன்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் எலூகா ரே மேக்ஸ் 11,499 ரூபாயில் இருந்து கிடைக்கும். எலூகா ரே எக்ஸ் 8,999 ரூபாயில் இருந்து வாங்க முடியும். இரண்டு போன்களும் ஃப்ளிப்கார்ட் இணையதளத்தில் மட்டுமே வாங்க முடியும். 

 Arbo virtual அசிஸ்டன்ட்தான் இந்த போன்களின் சிறப்பம்சம் என்று கூறுகிறது பேனசோனிக். போனை பயன்படுத்துபவர்களுக்கு ஏற்றார் போல், பரிந்துரைகளை இந்த Arbo virtual அசிஸ்டன்ட் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளதாம்.

எலூகா ரே மேக்ஸ் போனில், ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ, 5.2 இன்ச் HD டிஸ்ப்ளே, 4 GB ரேம், 13 மெகா பிக்சல் பின் கேமரா, 5 மெகா பிக்சல் முன் கேமரா வசதிகள் இருக்கின்றன.

எலூகா ரே எக்ஸ் போனில், 6.0 மார்ஷ்மெல்லோ, 5.2 இன்ச் HD டிஸ்ப்ளே, 3 GB ரேம், 13 மெகா பிக்சல் பின் கேமரா, 5 மெகா பிக்சல் முன் கேமரா வசதிகளுடன் சந்தைக்கு வந்துள்ளது.