வெளியிடப்பட்ட நேரம்: 21:25 (29/03/2017)

கடைசி தொடர்பு:21:24 (29/03/2017)

வச்ச குறி தப்பாது... இரண்டு வயது 'பேஸ்கட் பால் அர்ஜூனன்'..! #ViralVideos

டி, களைத்து இரவு வீடு திரும்பியதும் தொலைக்காட்சியில் ஒரு கவுண்டர் காமெடியையோ, வடிவேலு காமெடியையோ பார்த்தால் ஒரு திருப்தி வருமில்லையா? அப்படி ஆகிவிட்டன வாட்ஸ்அப், யுட்யூபில் வலம் வரும் வைரல் வீடியோக்களும்.  இந்த வீடியோக்களை பாருங்கள். 

வீடியோ

ஹாலோவின் தெரியுமா? நம்ம ஊரில் மயான கொள்ளை திருவிழா என்போம். அதன் அமெரிக்க வெர்ஷன் தான் ஹாலோவின். அன்று எல்லோரும் விதவிதமாக உடை அணிந்து ஆச்சரியப்படுத்துவார்கள். அதிர்ச்சியூட்டுவார்கள். “Prank Vs Prank” என்ற யூட்யூப் யூசர், புகழ்பெற்ற அலாவுதீன் கெட்டப் போட்டார். அதோடு நிற்காமல் தனது ஸ்கேட்டிங் போர்டின் மீது அலாவுதீனின் மாயகம்பளம் போன்ற செட்டப்போடு  உலா வந்தார். அந்த காட்சிகளையும், நியூயார்க் நகர மக்களின் ரியாக்‌ஷனையும் இந்த வீடியோவில் பாருங்கள். 

 

 

எந்த பெற்றோருக்குத்தான் குழந்தைகளை பிடிக்காது?குழந்தையை மகிழ்விக்க என்ன வேண்டுமென்றாலும் செய்வார்கள். ஜப்பானை சேர்ந்த இந்த பெற்றோர்கள் ஒரு வயது மகளுக்கு காட்சில்லா வேஷம் போட்டு நடக்கவிட்டு வீடியோ எடுத்தார்கள். பின் அதை எடிட் செய்து, ஊருக்குள் நடந்து வரும் காட்சில்லா செய்யும் அட்டகாசங்களை அனிமேஷனில் சேர்த்து உருவாக்கினார்கள். என்ன நடக்கிறது என புரியாமல் அந்த வீடியோவை பார்த்து குழம்பும் அந்த குழந்தையின் ரியாக்‌ஷனுக்கு இப்போது ஆயிரமாயிரம் ரசிகர்கள்.

 

 


குழந்தைகளின் உலகில் சூப்பர்ஸ்டார் என்றால் சாக்லெட் தானே? ஒவ்வொரு நாட்டிலும் கிடைக்கும் கேண்டி ஒவ்வொரு சுவையில் இருக்கும். ஆப்பிரிக்க கேண்டியின் சுவை அமெரிக்க குழந்தைகளுக்கு கிடைக்க வாய்ப்பு இல்லை. இதை யோசித்த ”வாட்ச்கட் வீடியோ” சேனல் நிறுவனம் அமெரிக்க குழந்தைகளுக்கு உலகின் புகழ்பெற்ற சாக்லெட்களை சாப்பிட கொடுத்து, அவர்கள் ரிசல்ட்டை வீடியோவாக்கி இருக்கிறது. செம, மொக்கை, சூப்பர் என்பதை எல்லாம் குழந்தைகள் எக்ஸ்பிரஷனில் வெளிப்படுத்தும் அழகை பாருங்கள். ஒரு மில்லியன் மக்கள் பார்த்த வீடியோ இது.

 

 

ஜெட்பேக் தெரியுமா? வீடியோகேம்ஸீல், ஜெட்பேக்கை முதுகில் மாட்டிக்கொண்டு விண்ணில் விர்ரென்று பறந்திருப்போம். அதை நிஜத்தில் நிகழ்த்தி இருக்கிறார்கள். துபாய் பைலட்டுகள் இருவர் ஜெட்பேக்கை மாட்டிக்கொண்டு, உலகின் பெரிய விமானங்களில் ஒன்றான A380 ரக விமானத்தை சுற்றி வானில் வட்டம் அடித்திருக்கிறார்கள். இதற்காக மூன்று மாதங்கள் திட்டமிடலும், பயிற்சியும் நடந்திருக்கிறது. 

டைட்டஸ்க்கு வயது இரண்டுதான். ஆனால் குறிபார்த்து வீசுவதில் வித்தைக்காரனாக இருக்கிறான். பேஸ்கட் பாலை வலையில் மிகச்சரியாக போடுவதில் கில்லி இந்த டைட்டஸ். அதுவும் சாதாரணமாக இல்லை. போஸ்ட்டை நோக்கி நகரும் வண்டியில் அமர்ந்தபடியே வீசுகிறான். வலதுகை, இடது கை என மாறி மாறி வீசுகிறான். சுவற்றில் பட்டு பந்து திரும்பி வலையில் விழச்செய்கிறான். 5 மாடி கட்டிடத்தின் உச்சியில் இருந்து கீழே இருக்கும் வலையில் தொப்பென்று போடுகிறான். இரண்டு கைகளில் இரண்டு பந்துகளை வைத்து இரண்டு வலையில் ஒரே சமயத்தில் வீசுகிறான். என்ன மாதிரியான சவால் தந்தாலும் வலையில் விழுவது மட்டும் மிஸ் ஆவதே இல்லை. இரண்டு வயது குழந்தை கீழே விழாமல் நடப்பதே சவால். இவன் பேஸ்கட் பாலே விளையாடுகிறான். அர்ஜுனர் வில்லுக்கு அடுத்த டைட்டஸ் பாலு என சொல்லிவிடலாம்.

 

 

- கார்க்கிபவா

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்