மீண்டும் சந்தைக்கு வரவுள்ள சாம்சங் கேலக்ஸி நோட் 7

சாம்சங் கேலக்ஸி நோட் 7

கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட்போனை மீண்டும் சந்தைப்படுத்த உள்ளதாக, சாம்சாங் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட்போன்கள், சந்தைப்படுத்தப்பட்ட  இரண்டு மாதத்துக்குள்ளாகவே, அதன் மீது கடுமையான புகார்கள் வந்தன. அந்த போன்கள் தானாகவே தீப்பிடித்து எரிந்தன.

இதனையடுத்து, சாம்சங் நிறுவனம் தன் தவறை ஒப்புக்கொண்டு, அனைத்து கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட்போன்களையும் திரும்பப் பெற்றது. தீப்பிடித்து எரிந்ததற்கு, பேட்டரியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் குறைபாடுதான் காரணமாகப் பார்க்கப்பட்டது. தற்போது சாம்சங் நிறுவனம், பேட்டரியில் மாற்றத்தைக் கொண்டுவந்து, மீண்டும் போன்களை சந்தைப்படுத்த உள்ளது. ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் இருந்து தென்கொரியாவில் கடைகளில் கிடைக்கலாம் என்று கருதப்படுகிறது. தென்கொரிய நிறுவனமான சாம்சங், வரும் ஜூலை முதல் தனது நாட்டில் மட்டும் 4,00,000 முதல் 5,00,000 ஸ்மார்ட்போன்களை சந்தைப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. புதிய அறிமுகத்தின்மூலம் இழப்பீடுகளை ஈடுகட்ட முடியும் என்று சாம்சங் நிறுவனம் கருதுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!