பிரைம் யூஸர் கட்டணம் கேஷ்பேக்... கூடுதல் 120ஜிபி டேட்டா..! ஜியோவின் அடுத்த அதிரடி | Jio gives back the prime user fee and 120 GB extra data

வெளியிடப்பட்ட நேரம்: 09:57 (29/03/2017)

கடைசி தொடர்பு:10:41 (29/03/2017)

பிரைம் யூஸர் கட்டணம் கேஷ்பேக்... கூடுதல் 120ஜிபி டேட்டா..! ஜியோவின் அடுத்த அதிரடி

 

ஜியோ

ஜியோ யூஸர்களை குஷிபடுத்துவதே ரிலையன்ஸ் நிறுவனத்தின் முழு நேர வேலையாகிவிட்டது.

மார்ச் 31 அன்றுடன் இலவச டேட்டா/கால் வசதிகள் முடிவுக்கு வருவதாக ஏற்கெனவே ஜியோ அறிவித்திருந்தது. அதன் பின் பிரைம் யூஸர்கள் மாதம் 303 ரூபாய் கட்டி, அதே இலவச வசதிகளை பெற்றுக் கொள்ளலாம். பிரைம் யூஸர் ஆவதற்கு 99ரூபாய் ஒரு முறை கட்டணம் (One time fee) கட்ட வேண்டியிருந்தது. ஆனால், அதையும் இலவசமாக பெற ஜியோவில் ஒரு வழி இருக்கிறது.

பிரைம் யூஸர் கட்டணமான 99 ரூபாயை ஜியோ மணி (Jio Money) மூலம் செலுத்தினால் 50 ரூபாய் கேஷ்பேக் தருகிறார்கள். அதன் பின் ஏப்ரல் மாதத்துக்கு 303 ரூ ரீசார்ஜ் செய்தால் அதில் ஒரு 50ரூ கேஷ்பேக் உண்டு. ஆக, இந்த 100 ரூபாய் கேஷ்பேக் மூலம் பிரைம் யூஸர் ஆவதற்கான 99ரூ கட்டணத்தை திரும்ப பெற்றதாக எடுத்துக் கொள்ளலாம். மகிழ்ச்சி.

அதைத் தாண்டி பல டேட்டா ஆஃபர்களையும் அள்ளி தெளிக்கிறது ஜியோ. மாதம் 149ரூ ப்ரீபெய்ட் பிளானில் இலவச கால்களும், 2 ஜிபி டேட்டாவும் உண்டு என சொல்லியிருந்தார்கள் மார்ச் 31க்குள் 149ரூ ரீசார்ஜ் செய்தால் ஒரு ஜிபி டேட்டா கூடுதலாக கிடைக்கும். அதாவது 3 ஜிபி டேட்டா 149 மட்டுமே. போலவே, 303 ரூ ரீசார்ஜில் 28 நாட்களுக்கு, தினம் ஒரு ஜிபி என 28ஜிபி டேட்டா கிடைக்கும். புதிய ஆஃபர் படி 28ஜிபி தாண்டி இன்னுமொரு 5 ஜிபி டேட்டாவை தருகிறது ஜியோ. 303 ரூபாய் தாண்டியும் பல ரீசார்ஜ் பேக்குகள் பல 499, 999, 1999 என ஜியோவில் உண்டு. அதில் அதிகபட்சமாக மாதம் 10ஜிபி வரை கூடுதல் டேட்டா கிடைக்கும். அதாவது ஆண்டுக்கு 120 ஜிபி இலவச டேட்டா. 

jio

இந்த ஆஃபர் எல்லாம் மார்ச் 31க்குள் மட்டும் தான். ஏப்ரல் மாதம் முடிந்தால் அடுத்த மாதம் என்ன செய்வது? இதற்கும் வழி வைத்திருக்கிறது ஜியோ. ப்ரீபெய்ட் என்பதே முன் கூட்டியே கட்டணம் கட்டி வைப்பதுதானே? அதை ஏன் ஒரு மாதத்துக்கு மட்டும் என யோசித்த ஜியோ அதிரடியாக இன்னொன்றை செய்திருக்கிறது. நீங்கள் ஆகஸ்ட் மாதம் அதிக டேட்டா பயன்படுத்தும் தேவை வரும் என நினைக்கறீர்கள். இப்போதே ஆகஸ்ட் மாத பேக்குக்கான கட்டணத்தை கட்டி விடலாம். அந்த மாதம் கூடுதல் டேட்டா உங்களுக்கு கிடைத்துவிடும். திருமண மண்டபத்துக்கு பல மாதங்கள் முன்பே அட்வான்ஸ் தந்து பதிவு செய்கிறோமே.. அது போல ஆஃபரையும் முன்பதிவு செய்யலாம். இது எல்லாம் மார்ச் 31க்குள் செய்துவிட வேண்டும் என்பதை மறக்க வேண்டாம்.

ஜியோவின் ஆஃபர் அட்டாக்கை தாக்குப்பிடிக்க முடியாமல் 2016 கடைசி காலாண்டில் பலத்த நட்டத்தை மற்ற டெலிகாம் நிறுவனங்கள் சந்தித்தன. பின் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ள அவர்களும் ஆஃபர்களை அடுக்கினார்கள். ஆனால், யாருமே தெளிவான ஆஃபர்களை அறிவிக்கவில்லை. செக்மெண்ட்டட் ஆபர் என குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டுமேயான ஆஃபர்களையே அதிகம் கொண்டு வந்தார்கள். ஜியோவின் இந்த புதிய ஆஃபர்களை சமாளிக்க இன்னும் நிறைய மெனக்கெட வேண்டும். அவர்கள் என்ன செய்யப் போகிறார்களை என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

-கார்க்கிபவா

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்