உங்களைப் பற்றி ஊர் என்ன சொல்லுது தெரிஞ்சுக்கங்க..! வைரல் ஆப் SayAt.me | SayAt.me - A free service to receive sincere and honest feedback from people via Social Media

வெளியிடப்பட்ட நேரம்: 12:37 (04/04/2017)

கடைசி தொடர்பு:12:58 (15/04/2017)

உங்களைப் பற்றி ஊர் என்ன சொல்லுது தெரிஞ்சுக்கங்க..! வைரல் ஆப் SayAt.me

சோஷியல் மீடியாக்களில் சமீப காலமாக பிரபலங்கள் தொடங்கி, நேற்று அக்கவுன்ட் ஆரம்பித்தவர்கள் வரை எங்கு பார்த்தாலும் SayAt.me தளம் பற்றிதான் பேச்சு. அனைவரும் தங்கள் சோஷியல் மீடியா ப்ரொஃபைல்களில் இத்தளத்தின் மூலம் உருவாக்கிய முகவரியை சேர்த்துக் கொண்டு வருகின்றனர். 'அட என்ன தான்பா இது!' எனப் பலரும் இதுகுறித்து தேடி வருகின்றனர்.

Sayat - to receive feedback from others

ஒரு விஷயம் குறித்து சோஷியல் மீடியாவில் கருத்து கேட்க விரும்புகிறீர்கள் என வைத்துக் கொள்வோம். எங்கே நீங்கள் தவறாக நினைத்துக் கொள்வீர்களோ என்ற அச்சத்தில் நண்பர்களே கூட உண்மையான விமர்சனம் தெரிவிக்க மாட்டார்கள் அல்லது பதிலே கூறாமல் அக்கேள்வியைத் தவிர்த்து விடுவர். இதன் காரணமாக உண்மையே என்றாலும் கூட, எதிர்மறை கருத்துகள் கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது. நீங்களும் உங்கள் தவறை திருத்திக்கொள்ளும் வாய்ப்பு குறைய நேரிடும். ஃபேஸ்புக் Poll போன்றவற்றில் யார் யாரெல்லாம் எதற்கு வாக்களித்திருக்கிறார்கள் என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள முடியும். சென்சிட்டிவ்வான கேள்விகளில் நாம் என்ன தெரிவித்திருக்கிறோம் என்பது வெளியே தெரியும் என்பதால் பலரும் கலந்துகொள்ள தயக்கம் காட்டுவர். இந்தப் பிரச்னைகளுக்கு ஒரு தீர்வாகத்தான் SayAt.me பயன்படுகிறது. அப்ளிகேஷன் மூலமாகவும், இணையதளத்திலும் இந்த சேவையை பயன்படுத்த முடியும்.

இத்தளத்தில் கணக்கு தொடங்கி சோஷியல் மீடியாவில் அதன் லிங்கை ஒருவர் பகிர்ந்தால், அவர் கணக்கில் நண்பர்களாக இருக்கும் எவர் வேண்டுமானாலும் தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் கருத்தைத் தெரிவிக்க முடியும். கருத்து கேட்பவர்களுக்கு அனானிமஸ் ஆகதான் நமது பதில் செல்லும் என்பது இதன் ப்ளஸ். வெள்ளித்திரை, சின்னத்திரை பிரபலங்கள் தொடங்கி சோஷியல் மீடியாவில் அனைவரும் இதில் ஆர்வமாக கணக்கைத் தொடங்கி வருகின்றனர்.

Sayat me - Web Page

வெறும் இருபது நொடிகளில் கணக்கு தொடங்கலாம் என இத்தளம் கவர்ச்சிகரமாக வரவேற்கிறது. ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சோஷியல் மீடியாக்கள் மூலமும் Sign up செய்துகொள்ள முடியும். முதன் முதலாக இதைப் பயன்படுத்துபவர்கள் Sign up செய்யும் போது, ப்ரொஃபைல் உருவாக்க வேண்டும். உங்கள் பெயர், பாஸ்வேர்டு மற்றும் விருப்பமான யூசர் நேம் போன்றவற்றைக் கொடுத்து ப்ரொஃபைல் தொடங்க வேண்டும். அதன் பின் உங்களுக்கென பிரத்யேகமாக ஃபீட்பேக் லிங்க் (Feedback URL) உருவாகிவிடும். அந்த ஃபீட்பேக் லிங்கை காப்பி செய்து நமது ப்ரொஃபைலில் சேர்த்துக் கொள்ளலாம். இதன் மூலமாக கேள்வி, சர்வே போன்ற எதையும் இத்தளத்தில் உருவாக்கி பின்னர் அதைப் பகிரலாம். கருத்து தெரிவிப்பவர்களின் அடையாளம் தெரியாவிட்டாலும், அவர்களின் நேர்மையான பதில் நமக்குக் கிடைக்கும். சர்வே போன்றவற்றில் எந்தெந்த நாடுகளில் இருந்து பதில்கள் கிடைத்துள்ளன என்பது வரை தெரிந்து கொள்ள முடியும். நமக்கு கமென்ட் அளிப்பவர்களுக்கு நேரடியாக நாம் பதில் அளிக்கவும் முடியும். SayAt.me மூலம் நாம் அனானிமஸ் ஆக பிறருக்குப் பதில் சொல்வதோடு, நாமும் பதில்களைப் பெற முடியும்.

sayat.me - Profile

அனானிமஸ் என்பது இத்தளத்தின் பெரிய ப்ளஸ் என்றாலும், இதன் மிகப்பெரிய மைனஸூம் அதே! எதிர்மறையான கருத்து தெரிவிப்பவர்கள் யாரெனத் தெரியாது. நேர்மறையான எண்ணங்களை வெளிப்படுத்துபவர் பற்றியும் நமக்குத் தெரியாது. மேலும் ஒரு பிரபலம் இத்தளத்தின் வழியாக கருத்து கேட்கும்போது தகாத செய்திகளும், கமென்ட்டும் அதிகம் வர வாய்ப்பிருக்கிறது. அவர்களது அடையாளம் தெரியாது என்பதால் அவர்களை ப்ளாக் செய்யவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் இதில் வாய்ப்பு குறைவு.

சோஷியல் மீடியாவில் இயங்கும் பிரபலங்கள் இதன் குறைகள் குறித்தெல்லாம் பெரிதும் அலட்டிக் கொள்ளவில்லை. இதில் அக்கவுன்ட் தொடங்காதவர்களை ஆச்சர்யமாகப் பார்க்கும் காலம் வெகு தொலைவில் என்பதால், சீக்கிரம் அக்கவுன்ட் ஆரம்பிங்க பாஸ்!

- கருப்பு

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்