Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஸ்பைடர் கேம் முதல் தொப்பி கேம் வரை... ஐ.பி.எல்.-க்கு மசாலா சேர்ப்பவை இவைதான்! #IPLGadgets

சீசனுக்கு சீசன் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தும் ஐ.பி.எல்(IPL) சியர் கேர்ளிஸில் தொடங்கிய இந்த ஸ்பெஷல் ஹைலைட்ஸ் அம்பயர் தலையிலே ஒரு கேமராவை வைப்பது வரை தொடர்ந்தது. மற்ற கிரிக்கெட் போட்டிகளை விட ஐ.பி.எல்லுக்கு எண்டெர்டெயின்மெண்ட் வேல்யூவை கூட்டுவது இவைதான். இந்த முறை லோதா கமிட்டி பிரச்னையால் பிசிசிஐ-ன் பணம் முடக்கப்பட்டிருக்கிறது. எனவே, தொடக்க விழாவையே பிரமாண்டம் குறைவாகத்தான் நடத்தினார்கள். 

இதுவரைக்கும் வந்த ஆச்சர்யங்களில் பல டெக்லானஜிகளும், கேட்ஜெட்டும் கூட உண்டு. பிடித்த அணி, வீரர்கள் என்பதை எல்லாம் தாண்டி கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரையுமே ஆச்சர்யப்படுத்திய அந்த மாதிரியான விஷயங்கள் இவைதான்.

அம்பயர் கார்டு

ஐ.பி.எல் IPL

6,4 அடிக்க முடியாத, விக்கெட் எதுவும் எடுக்க முடியாமல் மைதானத்தில் இருப்பவர்கள் அம்பயர்கள் தான். வெகு சில நடுவர்களே தங்களது தனித்திறமைகளால் ரசிகர்களை கவர்வார்கள். அப்படி ஒருவர்தான் ப்ரூஸ் ஆக்சன்ஃபோர்டு. தனது இடது கையில் ப்ரூஸ் வைத்து இருந்த கண்ணாடி தடுப்பு தான் சென்ற ஆண்டு டாப் வைரல். கண்ணாடியால் செய்யப்பட்ட டென்னிஸ் பேட் போல் இருக்கும் இதை, ப்ரூஸ் மட்டும் தான் பயன்படுத்தி வருகிறார். பவுலர்கள், பேட்ஸ்மென் போன்றவர்களின் பாதுகாப்பில் கவனமாய் இருக்கும் ஐசிசி, அம்பயர்கள் பற்றி பெரிதும் கண்டுகொள்வதில்லை. ப்ரூஸின் இந்த ஐடியாவை எல்லா அம்பயர்களும் பின்பற்றவேண்டும் என்கிறார்கள் ரசிகர்கள்.

ஸ்பைடர் கேம் 

ஸ்பைடர் கேம்

“என்னை ஃபீல்டிங் செய்ய விடாமல் அடிக்கடி குறுக்கே வருகிறது” என ஒருமுறை புகார் செய்தார் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர். அவர் திட்டியது சகவீரரை அல்ல, மைதானத்தில் சுற்றிக்கொண்டிருந்த ஸ்பைடர் கேமராவைத்தான். மைதானத்தின் நான்கு மூலைகளிலும் இருக்கும் கயிற்றைக்கொண்டு இந்த கேமராவை இணைத்திருக்கிறார்கள். வலையின் நடுவே இருக்கும் சிலந்தி போல், அட்டகாசமாய் அமர்ந்து இருக்கிறது இந்த கேமரா.ஜூம், டில்ட், பேன், ஃபோக்கஸ் என பலவற்றையும் ஒரு மனிதர் ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு பயன்படுத்தலாம். நிஜ ஆல்ரவுண்டர் இந்த ஸ்பைடர் கேம் தான்.

அம்பயர் கேம்

cap camera

’தொப்பி தொப்பி தொப்பி ‘ என்பது போல், அம்பயர் தொப்பியிலும் கேமரா வைத்துவிட்டார்கள். தொப்பியில் இருக்கும் சிறு கேமரா, அதற்கு சார்ஜ் ஏற்ற பின் தலையில் இருக்கும் சிறு பேட்டரி, அவ்வளவு தான் மொத்த செட்டப். திரையில் பார்க்கும் நமக்கு பவுலர் கையில் இருந்து வெளியேறி, பந்து செல்வது போல் தெரியும். ஆனால், பேட்ஸ்மென் அம்பயர் நோக்கி அடிக்கும் ஷாட்கள் தான் தெறி லெவல். கிரிக்கெட்டை ஆக்‌ஷன் படமாகவும், சில சமயம் பேய் படமாகவும் மாற்றுகிறது அம்பயர் கேம்.

ஜிங் விக்கெட் சிஸ்டம் 

LED cam


இதுக்கா இந்தப் பேருன்னு நீங்க யோசிக்கலாம். ஃப்ளாஷ் லைட் வச்ச ஸ்டம்புக்களுக்குத் தான் இந்தப் பெயர் வைத்து இருக்கிறார்கள். ஸ்டம்பிங், ரன் அவுட் சமயங்களில் எல்லாம் அம்பயர்களுக்கு தெய்வமாய் வந்து இருக்கிறது இந்த ஃப்ளாஷ் லைட் ஸ்டம்புகள்.  தோனி ஒருமுறை ஜெயித்தவுடன், ஸ்டம்புகளை எடுக்க செல்ல, பதறியடித்துக் கொண்டு வந்துவிட்டனர். ஒரு போட்டிக்கு தேவைப்படும் பைல்ஸ்களுக்கும், ஸ்டம்புகளுக்கு மட்டும் 25 லட்ச ரூபாய் ஆகிறதாம். ஸ்டம்ப்பை உடைப்பதில் தென்னாப்பிரிக்காவின் லான்ஸ் க்ளூஸனர் புகழ்பெற்றவர். அவர் காலத்தில் ஜிங் விக்கெட் சிஸ்டம் இல்லாதது நல்லதுதான். 

பிளேயர் கமென்ட்ரி

 

 


ஹர்ஷே போக்லேவின் இனிய  குரலையும், நவ்ஜத்  சித்துவின் அலறல்களையும் மட்டுமே வர்ணனையாக கேட்டுக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு வீரர்களே பேசுவது புதுசுதான். லாங்க்-ஆன் ஃபீல்டிங்ல் இருக்கும் வீரர்கள், ஸ்லிப்பில் இருப்பவர்கள் போன்றவர்களிடம் ஹெட்-மைக் ஒன்றை வைத்து போட்டியின் போது பேச வைத்தார்கள்.கடந்த ஆண்டு நடைபெற்ற கிரிக்கெட் ஆல் ஸ்டார்ஸில், பேட்டிங் செய்யும் வீரர்களையும் வர்ணனை செய்ய சொல்ல, இந்தியாவின் முன்னாள் வீரர் சேவக் , பாட்டு பாடிக்கொண்டே சிக்ஸ் அடித்தது வைரல் ஆனது ஐ.பி.எல் அணிகள் மற்றும் வீரர்களின் ட்விட்டர் பக்கங்கள்.

-கே

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement