Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

73 வயது பாட்டியை மரணத்திலிருந்து காப்பாற்றிய ஃபிட்னஸ் ட்ராக்கர்!

 ஃபிட்னெஸ்

வயதான ஒருவர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார் என்றால், அவரை முறையாகப் பாதுகாக்கவேண்டியது அவசியம். யாருமே உடன் இல்லாதபோது, அவருக்கு ஏதாவது நிகழ்ந்தால்... அவரை காப்பாற்றுவது கடினம். ஆனால் இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி, இந்த விஷயத்தை சரியாகக் கையாண்டுவருகிறது. அமெரிக்காவில் உள்ள 73 வயது பாட்டி ஒருவரை, சரியான நேரத்தில் ஃபிட்னஸ் ட்ராக்கர் காப்பாற்றியுள்ளது என்றால் நம்புவீர்களா? 

பாட்ரிஷியா லவ்டர் என்கிற 73 வயது பாட்டி, அமெரிக்காவில் வசித்துவருகிறார். அவர், சைனஸ் மற்றும் நிமோனியாவால் பாதிகப்பட்டிருந்தார். இந்த நிலையில், அவருக்கு திடீரென இதயத்துடிப்பு அதிகரித்துள்ளது. வழக்கமாக 60-70 என்ற அளவில் இருக்கும் இதயத்துடிப்பு திடீரென 140 என்ற அளவுக்கு சென்றுள்ளது. இதனால் படபடப்புக்குள்ளாகி இருக்கிறார். இதயத்துடிப்பு அதிகரிப்பதை அவர் அணிந்திருந்த ஃபிட்னஸ் ட்ராக்கர் உணர்த்தியிருக்கிறது. என்ன செய்வதென்று அறியாமல் அவசர உதவி எண் 911-ஐ அழைத்துள்ளார்.

fitnessfitness tracker

'அந்த நேரத்தில், அவர் அவசர உதவியை அழைக்கவில்லை என்றால், உயிருக்கு ஆபத்தாகியிருக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவருக்கு நுரையீரலில் ரத்த அடைப்பு ஏற்பட்டு உடல்நிலை மோசமாகியுள்ளது' என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.  ''எனக்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. சரியான நேரத்தில் எனது இதயத்துடிப்பு அதிகரிப்பதை ஃபிட்னஸ் ட்ராக்கர் மூலம் அறிந்தேன். அப்போதுதான், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்பது எனக்குத் தோன்றியது'' என்றார் பாட்டி.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 24 மணி நேரத்துக்குள் அவர் முழுமையாகக் குணமடைந்தார். ஃபிட்னஸ் ட்ராக்கர்கள் என்பது உடல் ஆரோக்கியம் பற்றிய விழிப்புஉணர்வுக்கும் தொடர்ச்சியான ட்ரக்கிங்கிற்கும் மட்டுமல்லாமல், இதுபோன்ற பாதுகாப்பு விஷயங்களுக்கும் பயன்படுகிறது.

இதுபோன்ற சம்பவங்கள், சமீபத்தில் நிறைய நடந்து வருகின்றன. தேர்வுக்காகப் படித்துக்கொண்டிருந்த ஒரு பெண்னின் இதயத்துடிப்பு 210 வரை அதிகரித்து மயக்கமடைய, அவர் மருத்துவமனையில் அனுமதிக்க ஃபிட்னஸ் ட்ராக்கர் உதவியது.


மரணத்திலிருந்து காப்பாற்றிய ஆப்பிள் சிரி

லண்டனில் உள்ள கென்லே பகுதியில் வசிக்கும் நான்கு வயது சிறுவன் ரோமன். அவன் செய்த ஒரு விஷயம், அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது. மரணத்தின் பிடியில் இருந்த தனது தாயை,  ஐபோனின் வாய்ஸ் அசிஸ்டென்ட்டான சிரியின் உதவியுடன் காப்பாற்றி, அனைவரையும் நெகிழவைத்துள்ளான் ரோமன். 

 ரோமன், தனது தாய் மயங்கிய நிலையில் இருப்பதை அறிந்து, அவரை எழுப்பியுள்ளான். தனது தாய் எழுந்திருக்காமல் இருந்ததையடுத்துப் பதறிய ரோமன். தனது தாயின் ஐபோனை எடுத்து, அவனது கட்டைவிரலை வைத்து சிரியை ஆன் செய்துள்ளான். அதன்மூலம், தனது தாய் மயங்கிய நிலையில் இருப்பதைத் தெரிவிக்க... சிரி, ஆம்புலன்ஸுக்கான எண் 999- ஐ அழைத்துள்ளது. அதன் பின் நடந்ததை இங்கே வாசிக்கலாம். 


யாருமே உதவிக்கு இல்லாத நேரத்தில், இந்த தொழில்நுட்பங்கள் சரியாக உதவிசெய்து உயிரைக் காப்பாற்றுகின்றன. புதிய தொழில்நுட்பங்கள், மக்களுக்கு எளிதில் புரியும்படியும், உபயோகிக்க எளிதாகவும்  இருக்கவேண்டியது அவசியம். மக்களும் தொழில்நுட்பத்தைச் சரியாகப் பயன்படுத்தினால், பல உயிர்கள் காக்கப்படும்.

ச.ஶ்ரீராம்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close