ஆப்பிள், சாம்சங்கை பின்னுக்குத் தள்ளி ஜியோமி முதலிடம்

இந்தியர்கள் அதிகம் விரும்பி வாங்கும் ஸ்மார்ட் போன்களில் ஜியோமி முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஆப்பிள், சாம்சங் போன்ற பெரிய மொபைல்போன் நிறுவனங்களைப் பின்னுக்குத் தள்ளி ஜியோமி முதலிடத்தைப் பிடித்துள்ளது. கலர் மொபைல், கேமரா மொபைல், டச் மொபைல் என்ற பரிமாணங்களைக் கடந்து மொபைல் உலகம் ஸ்மார்ட் போன் உலகில் பயணித்துக் கொண்டிருக்கிறது.

ஸ்மார்ட் போன்களில் இந்தியாவைப் பொறுத்தவரையில் சாம்சங், ஆப்பிள், ஓப்போ, லாவா, ஹூவாய், ரெட்மி போன்ற நிறுவனங்களின் ஸ்மார்ட் போன்கள் முக்கிய இடத்தைப் பெற்று இருக்கின்றன. இந்த ஸ்மார்ட் போன்களில் ஆப்பிள் போன்களின் விலை மிக அதிகமாகவும், சாம்சங்கின் ஸ்மார்ட் போன்கள் விலை அதிகமாகவும் இருந்து வருகின்றன. ஓப்போ, லாவா, ரெட்மி, போன்ற மொபைல்களின் விலைகள் நடுத்தர மக்களுக்கு ஏற்ற வகையில் இருந்து வருகின்றன.

இந்நிலையில் 2017-ம் ஆண்டுக்கான ஸ்மார்ட் போன்கள் விற்பனை குறித்த ஆய்வு அறிக்கை வெளிவந்துள்ளது. அதன்படி 2017-ம் ஆண்டில் ஜியோமி ஸ்மார்ட் போன் தான் அதிகமான இந்தியர்கள் தேர்வாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. சாம்சங், ஆப்பிள் நிறுவனங்களின் போன்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு ஜியோமி முதல் இடத்தைப் பெற்றுள்ளது. 2017-ம் ஆண்டில் 26 சதவீத மக்கள் ஜியோமி ஸ்மார்ட் போன்களைத் தேர்வு செய்வார்கள் என்றும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் ஜியோமி நிறுவனம் 125 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!