உங்கள் மொபைலில் உடனடியாக அன்இன்ஸ்டால் செய்ய வேண்டிய 5 ஆப்ஸ்! #AndroidTips

ஆப்ஸ்

ஆண்ட்ராய்டு மொபைல் ஓனர்களுக்கு ஆயிரம் பிரச்னைகள் இருக்கும். அதில் முக்கியமானது எந்த ஆப்ஸ் எல்லாம் வைத்து கொள்ளலாம்… எந்த ஆப்பை டெலீட் செய்யலாம் என்பதை முடிவு செய்வதுதான்.

ஜியோ வந்த பிறகு டேட்டாவுக்காக செலவாவதில்லை என்றாலும், எல்லா ஆப்களையும் மொபைலிலே தான் வைத்திருக்கிறோம். எப்போதாவது தேவைப்படும் என்பதே எல்லா ஆப்புக்கும் பொருந்தும் பதில். ஆனால், சில ஆப்ஸ் இருக்கின்றன. அவை மொபைலிலே இருக்கவே கூடாத ஆப்ஸ். அப்படி ஒரு ஆறு மொபைல் அப்ளிகேஷன்களை பற்றி பார்ப்போம்.

க்ளீன் மேனேஜர்: (Cleaning Apps)

என்னப்பா சொல்ற? அதுதானே மொபைலை வேகமா இயங்க உதவி பண்ணுதுன்னு சொல்றீங்களா? நிச்சயமா இல்லை. இந்த க்ளீனிங் ஆப்ஸ் எல்லாம் பேட்டரியை அதிகமாக சாப்பிடுவதுடன், தேவையற்ற விளம்பரங்களை கொண்டு வரும். ஸ்டோரேஜ் இடத்தை ஆக்ரமித்துக் கொள்ளும். கேஷ் மெமரியை (Cache memory) சுத்தப்படுத்த இப்போது அனைத்து பிராண்டு மொபைல்களிலும் டீஃபால்டாகவே ஆப்ஷன்கள் வந்துவிட்டன. எனவே, க்ளீன் மேனேஜர் வகை ஆப்ஸ் எது இருந்தாலும் தயங்காமல் அன் இன்ஸ்டால் செய்து விடுங்கள். 

கேஷ் மெமரியை சுத்தப்படுத்த, Settings>> Apps>> Downloaded 

அன் இன்ஸ்டால் செய்ய: Settings>> App>> Select one >> Uninstall.

பேட்டரி சேவர்ஸ்:

இதுவும் சதுரங்க வேட்டை மோசடிகளில் ஒன்றுதான். ஒவ்வொரு ஆப்பும் எடுத்துக் கொள்ளும் எனர்ஜியை குறைக்க, சிஸ்டத்தின் அடிப்படை விஷயங்களையே சரிப்படுத்த வேண்டும். ரூட்டட் மொபைல் (Rooted mobile) என்பார்களே.. அது போல மொபைலின் ரகசிய ஏரியாக்களுக்கே சென்று மாற்றங்கள் செய்ய வேண்டும். அந்த பெர்மிஷன் எல்லாம் , இந்த மாதிரியான பேட்டரி சேவர்ஸ் ஆப்ஸ்க்கு கொடுத்தால், அவை என்ன செய்யும் என யோசியுங்கள்? நிச்சயம் அது ஆபத்தில் தான் முடியும். அப்படி, பெர்மிஷன்ஸ் இல்லாத பேட்டரி சேவர்ஸ் ஆப்களினால், எந்த விதமான எனர்ஜி சேவிங்கையும் செய்ய முடியாது. பிரைட்னெஸ்ஸை குறைத்து வைப்பது, வேலை முடிந்ததும் ஆப்ஸ் அனைத்தையும் க்ளோஸ் செய்வது போன்ற சின்ன சின்ன விஷயங்களை நாமே செய்து விடலாம். அதற்கொரு ஆப் என்பது தேவையற்றது.

ப்ரீ லோடட் ஆப்ஸ்: (Pre loaded apps)

சட்டை வாங்கினால் கர்ச்சீஃப் இலவசம், பேட் வாங்கினால் பால் இலவசம் என்பது போல, மொபைல் வாங்கினால் அதில் பல ஆப்ஸ்களை அவர்களே இன்ஸ்டால் செய்து இருப்பார்கள். இப்படி , விற்கப்படும் அனைத்து மொபைல்களிலும் டீஃபால்ட்டாக ஆப்ஸ் இன்ஸ்டால் செய்ய, அந்த ஆப்ஸ் நிறுவனங்கள் மொபைல் நிறுவனங்களுக்கு பணம் தருவார்கள். எந்தப் பயனும் இல்லாமல், நாம் அந்த ஆப்களை வைத்திருப்பது தேவையற்றது. அவை என்ன என்ன என பார்த்து உடனடியாக டெலீட் செய்துவிடுங்கள். அவற்றில் பெரும்பாலும் கேம் ஆப்ஸ்தான் இருக்கும். அவை டேட்டாவையும், பேட்டரியையும் பேக்கிரவுண்டில் நமக்கே தெரியாமல் தீர்த்துக் கொண்டிருக்கும்.

டீஃபால்ட் பிரவுசர்ஸ்: (Default browsers)

சாம்சங்கோ, அஸுஸோ… ஒவ்வொருவரும் அவர்களது பிரத்யேக பிரவுசர்களை வைத்திருக்கிறார்கள். அவை வேகமாகவும் இருப்பதில்லை. எளிமையாகவும் இருப்பதில்லை. கூகுள் க்ரோம், ஒபேரா போன்ற பிரவுசர்களைதான் பெரும்பாலானோர் பயன்படுத்துகிறார்கள். நீங்களும், மொபைல் நிறுவனங்கள் தரும் பிரவுசர்களை பயன்படுத்தவில்லையெனில், அதை அன் இன்ஸ்டால் செய்து விடுங்கள். 

இவைத் தவிர ப்ளே ஸ்டோரில் இருந்து டெளன்லோடு செய்யாமல் நேரிடையாக APK file மூலம் இன்ஸ்டால் செய்யப்பட்ட ஆப்ஸ் எதுவாக இருந்தாலும் அவற்றையும் அன்இன்ஸ்டால் செய்துவிடுங்கள்.

மேலே சொன்ன ஆப்களை அன்இன்ஸ்டால் செய்யும் முன் பேக்கப் எடுத்து வைத்துக் கொளுங்கள்.ஓரு வாரம் இவை இல்லாமல் மொபைலை பயன்படுத்து பாருங்கள். நீங்களே வித்தியாசத்தை உணர்வீர்கள். 

மொபைலில் இன்ஸ்டால் செய்ய வேண்டிய ஆப்ஸ் பற்றி தெரிந்துகொள்ள

-கார்க்கிபவா

Do you like the story?

Please Appreciate the Author by clapping!