இந்தியாவில் அறிமுகமான கூகுளின் புதிய 'ஆல் ரவுண்டர்' ஏரியோ ஆப் #Areo

கூகுளின் நியூ என்ட்ரியான ஏரியோ ஆப் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  இந்த ஆப் மூலமாக பில்களை செலுத்துவது முதல், உணவுகளை ஆர்டர் செய்தல், வீட்டில் தண்ணீர் பிரச்னை ஏற்பட்டால் பிளம்பர், மின்சாரப் பிரச்னைக்கு எலக்ட்ரீசியன் மற்றும் ப்யூட்டிசன் வரவழைப்பது வரை இந்த ஒரு ஆப் மூலம் பல்வேறு சேவைகள் சாத்தியமாகும்.

Areo App

கூகுள் ப்ளே ஸ்டோரில்  Areo என்றப் பெயரில் இந்த ஆப் கிடைக்கும். இதை இன்ஸ்டால் செய்த உடன், உங்களது லொக்கேஷனை மார்க் செய்து விட்டு, ஆப்பை பயன்படுத்தலாம். பின், அதில் உள்ள பல்வேறு சேவைகளில், நமக்கு தேவையானவற்றை, தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தலாம். குறிப்பாக, பல்வேறு ஆப்களை பயன்படுத்தி, ஸ்மார்ட் போனை கஷ்டப்படுத்துவதற்குப் பதிலாக, பலவிதமான சேவைகளை வழங்கும் ஏரியோ ஆப் பெஸ்ட் சாய்ஸ் என்கின்றனர் டெக்கிகள்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!