டிஸ்கவுண்ட் கூப்பன் முதல் டிக்‌ஷனரி வரை... பயனுள்ள 5 கூகுள் க்ரோம் எக்ஸ்டென்ஷன்ஸ்!

கூகுள் க்ரோம் யூஸ் பண்றவரா நீங்கள்? அப்படியென்றால், நிச்சயம் extensions பற்றி தெரிந்திருக்கும். 

தெரியாதவர்களுக்கு : எக்ஸ்டென்ஷன்ஸ் என்பது கூகுள் க்ரோம் வசதிகளை இன்னும் மேம்படுத்தும், எளிமையாக்கும் மென்பொருள். உதாரணத்துக்கு, இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை டவுன்லோடு செய்ய முடியாது. ஆனால், இதற்கு ஒரு கூகுள் க்ரோம் எக்ஸ்டென்ஷன் உண்டு. அதை நிறுவிக்கொண்டால், ஒரே க்ளிக்கில் விரும்பிய புகைப்படத்தை சேமிக்கலாம். இதே போல, ஸ்க்ரீன்ஷாட் எடுப்பது தொடங்கி பல விஷயங்களுக்கு எக்ஸ்டென்ஷன்ஸ் உண்டு. கூகுள் வெப் ஸ்டோரில் இவற்றை டவுன்லோடு செய்துகொள்ளலாம். அதன் பின், எந்த கணினியில் க்ரோம் திறந்தாலும், உங்கள் லாக் இன்னில் இந்த எக்ஸ்டென்ஷன்ஸ் இருக்கும். அதனால் ஒவ்வொரு கணினியிலும் இதை நிறுவ வேண்டும் என்ற அவசியம் இல்லை.

இனி, கூகுள் எக்ஸ்டென்ஷனில் பயனுள்ள 5 எக்ஸ்டென்ஷன்ஸ் பற்றி பார்க்கலாம்.

பாஸ்வேர்டு:

கூகுள் க்ரோம்


உங்களுக்கு மொத்த எத்தனை லாக் இன், எத்தனை பாஸ்வேர்டு தேவை என யோசித்துப்பாருங்கள்? எப்படியும் 50க்கும் மேற்பட்ட தளங்கள், கணினி, மொபைல் பாஸ்வேர்டை நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும். இதனை எளிமையாக்குகிறது பாஸ்வேர்டு எக்ஸ்டென்ஷன்ஸ். ஒட்டு மொத்த பாஸ்வேர்டுகளையும் இந்த எக்ஸ்டென்ஷனில் சேமித்து விட்டு, அதற்கொரு பாஸ்வேர்டு போட்டுக்கொண்டால் போதும். கல்லுரி சமயத்தில் பிட்டுக்கெல்லாம் ஒரு பிட்டு எழுதி வைப்போமே. அந்த மாதிரி

இதை இன்ஸ்டால் செய்ய

Coupons at Checkout:

கூப்பன்ஸ்

பெயரே இதன் தேவையை உணர்த்திவிடுகிறது. ஆன்லைன் ஷாப்பிங் செய்பவர்களுக்கு ஏகப்பட்ட ஆஃபர் கூப்பன்கள் இணையத்தில் உண்டு. இந்த எக்ஸ்டென்ஷன் நாம் பொருள் வாங்கிவிட்டு, பணம் செலுத்தும் பக்கம் வந்ததும், அந்தப் பொருளுக்கு இணையத்தில் எதாவது தள்ளுபடி கூப்பன் இருக்கிறதா என்பதைத் தேடிச் சொல்லிவிடும். முக்கியமாக, தள்ளுபடி கூப்பன் தளங்களில் கொட்டிக்கிடக்கும் விளம்பரங்களை எல்லாம் ஒதுக்கிவிட்டு உருப்படியான கூப்பன்களை மட்டுமே நமக்குக் காட்டும்.

இதை இன்ஸ்டால் செய்ய

இமேஜ் சர்ச்:

கூகுளில் “விஜய்” எனத் தேடிப் பார்ப்பவர்கள் ஏராளம். ஆனால், புகைப்படங்களை வைத்து தேடியிருக்கிறீர்களா? உங்களுக்கு வாட்ஸ்அப்பில் ஒரு புகைப்படம் வருகிறது. அந்தப் புகைப்படம் உண்மைதானா என்பதை இமேஜ் சர்ச் மூலம் அறியலாம். இதில், வார்த்தைக்குப் பதில் ஒரு புகைப்படத்தை அப்லோடு செய்தால், அந்தப் படம் பற்றிய தகவல்களையும், லிங்குகளையும் கூகுள் தந்துவிடும். இந்தச் சேவைக்கு உதவுவதுதான் இமேஜ் சர்ச் எக்ஸ்டென்ஷன். இதன் மூலம், புகைப்படத்தின் மேல் மவுஸை கொண்டுப்போனால் போதும். அந்தப் புகைப்படத்தின் வரலாறு, பூகோளத்தை நமக்கு காட்டிவிடும்.

இதை இன்ஸ்டால் செய்ய

Hover zoom:
பல இணையதளங்களில் புகைப்படங்கள் மிகச்சிறியதாக இருக்கும். இந்த எக்ஸ்டென்ஷன் இருந்தால், புகைப்படத்தின் மேல் மவுஸை கொண்டுச்சென்றால், அதை பெரிதாக்கி காட்டும். படங்களை டவுன்லொடு அல்லது புது டேபில் திறந்துப் பார்க்கும் நேரம் மிச்சம். 

இதை இன்ஸ்டால் செய்ய

Google Dictionary

டிக்‌ஷனரி


ஆங்கில பேப்பரை கையில் டிக்‌ஷனரியோடு படித்துதான் நம்மில் பெரும்பாலானோர் வளர்ந்திருப்போம். அதை இன்னும் எளிமையாக்குகிறது இந்த எக்ஸ்டென்ஷன். இணையத்தில் நாம் படிக்கும் எந்தவொருச் சொல்லையும் டபுள் க்ளிக் செய்தால் போதும். அதன் அர்த்தம் பாப் அப் விண்டோவில் வந்துவிடும். இன்னும் விரிவான அர்த்தம் தேவையெனில், எக்ஸ்டென்ஷனை க்ளிக் செய்யலாம்.

இதை இன்ஸ்டால் செய்ய

இன்னும் ஏராளமான எக்ஸ்டென்ஷன்கள் கூகுள் க்ரோமில் உண்டு. உங்களுக்குத் தேவையான விஷயத்தை இங்கே தேடினால், அதற்குரிய எக்ஸ்டென்ஷன் கிடைக்கும்.

-கார்க்கிபவா

Do you like the story?

Please Appreciate the Author by clapping!