வாவ்... வெளியானது ஸ்டைலிஷ் ஜியோமி Mi 6

மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வந்த ஜியோமி நிறுவனத்தின்  Mi 6 ஃபிளாக் ஷிப் ஸ்மார்ட் போன் வெளியிடப்பட்டுள்ளது. பெய்ஜிங்கில் நடைபெற்ற  விழாவில் இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  Mi 6-இல் 6GB RAM, 64GB மெமரி இந்திய மதிப்பில் 23,500 ரூபாய்க்கும்,  6GB RAM, 128GB மெமரி வசதிகளுடன் மற்றொரு மாடல், இந்திய மதிப்பில் 27,000 ரூபாய்க்கும் விற்பனைக்கு வர உள்ளது.

Xiaomi Mi 6


இது தவிர Mi 6 Ceramic, என்ற தங்க முலாம் பூசப்பட்ட மாடல்  6GB RAM, 128GB இந்திய மதிப்பில் 28,000 ரூபாய்க்கு விற்பனைக்கு வர உள்ளது.  5.15 திரை, 12MP ரியர் கேமரா, 3350mAh பேட்டரி,  4G நெட்வொர்க், 600Mbps டவுன்லோடு ஸ்பீடு, 100Mbps அப்லோடு ஸ்பீடு உள்ளிட்ட அம்சங்களுடன்  Mi 6 களமிறங்குகிறது. குறிப்பாக, இதன் ஸ்நாப் ட்ராகன் 835, கிராஃபிக்ஸில் ஐ-போன் 7-னை பின்னுக்குத் தள்ளி விடுமாம். மேலும், இந்த நிகழ்வில் Mi 6 சில்வர் எடிசனையும் அறிமுகப்படுத்தியுள்ளனர். சீனாவில் வருகின்ற 28-ம் தேதி முதல் Mi 6 விற்பனைக்கு வருகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!