பூனம் பாண்டே ஆப்... தடை செய்த கூகுள்... காரணம் என்ன?

பூனம் பாண்டே

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் யாருமே இந்தப் பெயரை அவ்வளவு சீக்கிரம் மறக்கமாட்டார்கள். இவர் செஞ்சுரி அடிக்காமல், ஹெலிகாப்டர் ஷாட் ஆடாமல் கிரிக்கெட் ரசிகர்களுக்கு அறிமுகமானவர். ஆம் பாலிவுட் நடிகை பூனம் பாண்டே தான் அவர். இந்தியா உலகக் கோப்பையை வென்றால் மைதானத்தில் நிர்வாணமாக ஓடுவேன் என்று சபதமிட்டார். ஆனால் அதற்கான அனுமதி மறுக்கப்பட்டுவிட்டது. இந்த சர்ச்சை நாயகி தற்போது மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருகிறார்.

ஏப்ரல் 19ம் தேதி போல்ட் (Bold) எனும் தன்னை பற்றிய அப்ளிகேஷனை ஆன்ட்ராய்ட் தளத்தில் வெளியிட்டார். பூனம் பாண்டேவின் அப்ளிகேஷனுக்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு இருந்தது. கூகுள் ப்ளே ஸ்டோரில் பதிவேற்றப்பட்ட ஒரு மணி நேரத்தில் இந்த ஆப்பிற்கு அதிர்ச்சி காத்திருந்தது.

கூகுள் நிறுவனம் ரிவியூ செய்த பின் இந்த ஆப்-ஐ ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கியது. இந்த ஆப் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டவுடன் பூனம் பாண்டே தனது இணையதளத்தில் இந்த ஆப்-ஐ நேரடியாக டவுன்லோட் செய்து கொள்ளலாம் என்று ட்விட் செய்ய பற்றிக்கொண்டது ஆப். 

ஆப்-ஐ நேரடியாக டவுன்லோட் செய்த பலரும் ஆப்-ல் உள்ள சிறப்புகளை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். இந்த ஆப்- ல் முகப்பு திரையில் இந்த ஆப்பில் என்ன சிறப்பம்சங்கள் இருக்கிறது என்பதை விளக்கும் வீடியோ உள்ளது. மேலும் பூனம் பாண்டேவின் வாழ்க்கை, அவரது புகைப்படங்கள், வீடியோக்கள், ஷூட்டிங் தவிர அவரது புகைப்படங்கள், அவரது சுற்றுப்பயணங்கள், 360 டிகிரி வீடியோக்கள், நிகழ்ச்சிகள் குறித்த அப்டேட், லைவ், மற்றும் ஸ்டோர் வசதியும் உள்ளது. இதில் டாப் ரசிகர் யார் என்ற விஷயத்தையும் சேர்த்துள்ளனர்.

இந்த ஆப்-ல் 3 வழி நேவிகேஷன் அமைப்பு உள்ளது. மேலே ஸ்வைப் செய்தால் எந்த பிரிவில் இருக்கிறோம் அதன் மற்ற தகவல்களும், பக்கவாட்டின் இரண்டு புறமும் பிரிவுகளை மாற்றும் வசதியோடும் இந்த ஆப் வடிவமைக்கப்பட்டுள்ளது. மெனுக்கள் மூலமாகவும் இந்த ஆப்பில் உள்ள வசதிகளை பயன்படுத்திக்கொள்ள முடியும். 

App

 ஹெச்.டி தரத்தில் வீடியோக்களும், புகைப்படங்களும் அவரது ரசிகர்களை கவரும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 9.4 எம்.பி அளவில் உள்ளது இந்த ஆப். இந்த ஆப் நீக்கப்பட்டதற்கான காரணத்தை கூகுள் வழங்கவில்லை. ஆனால் பூனம் பாண்டே இது குறித்து கூறும் போது '' கூகுள் ப்ளே ஸ்டோரில் பல ஆபாச  படங்களையும், வீடியோக்களையும் கொடுக்கும் ஆப்களை பார்த்திருக்கிறேன். கூகுள் தளத்தில் இலவச ஆப்கள் மில்லியன் கணக்கில் கொட்டிக்கிடக்கின்றன. ஆனால் அதையெல்லாம் விட்டுவிட்டு என் ஆப்-ஐ எதற்கு தடை செய்தார்கள் எனத் தெரியவில்லை. இருந்தாலும் பரவாயில்லை. இதனை எனது இணையதளத்தில் நேரடியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்” என்று கூறியிருக்கிறார்.

கூகுள் ப்ளே ஸ்டோர் நீக்கப்படுவதற்கு முன்பு 15 நிமிடத்தில் 15000க்கும் அதிகமான நபர்கள் இந்த ஆப்-ஐ பதிவிறக்கம் செய்துள்ளனர், கூகுள் ப்ளே ஸ்டோரின் நிபந்தனைகளை போல்டு ஆப் மீறியதால் நீக்கப்பட்டிருக்கிறது. ஆப் குறித்த விவரங்களும், தகவல்களும், பதிவிறக்க லின்க்குகளும் இணையத்தில் வைரலாகி வருகின்றன, 

-ச.ஸ்ரீராம்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!