6000 ரூபாய்க்குள் கவரும் 4ஜி மொபைல்கள்! #BudgetMobiles | Top 6 - 4G VoLTE Budget mobiles in Indian Market

வெளியிடப்பட்ட நேரம்: 10:35 (21/04/2017)

கடைசி தொடர்பு:11:16 (21/04/2017)

6000 ரூபாய்க்குள் கவரும் 4ஜி மொபைல்கள்! #BudgetMobiles

புதிதாக மொபைல் வாங்கும் அனைவருக்கும் 4ஜி வசதி கொண்ட மொபைல்கள் தான் முதல் சாய்ஸாக இருக்கிறது. 4ஜி வசதி கொண்ட மொபைல்களின் விலை கொஞ்சம் அதிகம் என்பதால், வாடிக்கையாளர்களைக் கவர பல மொபைல் உற்பத்தி நிறுவனங்களும், குறைந்த பட்ஜெட் மொபைல்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகின்றன. அவற்றைப் பற்றி பார்ப்போமா!

 

Redmi 4A :

 

மொபைல் சந்தையில் இப்போதைக்கு அசைக்க முடியாத இடத்தை ரெட்மி பிடித்திருக்கிறது. சிம்பிளான தோற்றத்திலும், அழகான வடிவமைப்பிலும் Redmi 4A மாடல் அசத்துகிறது. 13 மெகா பிக்சல் கேமரா, 3120 mAh பேட்டரி திறன், ஸ்னாப்ட்ராகன் 425 ப்ராசசர், ஃபுல் ஹெச்.டி டிஸ்ப்ளே என குறைந்த விலைக்கு, நிறைந்த வசதிகளுடன் இந்த மாடல் கிடைக்கிறது. இந்த மாடலில் உள்ள டூயல் அப்ளிகேஷன் ஆப்ஷன் மூலம் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற பல அப்ளிகேஷன்களிலும் ஒரே நேரத்தில் இரண்டு அக்கவுன்ட்களைப் பயன்படுத்தலாம். ஹைப்ரிட் சிம் ஸ்லாட் இருப்பதால், மெமரி கார்ட் ஸ்லாட் தனியாகக் கிடையாது. குறைந்த விலைக்கு கவர்ச்சிகரமான தோற்றத்தில் கிடைப்பதால், சந்தையில் இது அதிகம் விற்பனையாகிறது.

விலை : ரூ. 5,999/-

 

Xolo Era 2 :

Xolo Era 2 மொபைல்

Xolo மொபைலின் Era 2 மாடலின் சிறப்பம்சமே இதன் சிம்பிளான வடிவமைப்பு தான். 5 இன்ச் அளவு கொண்ட இதன் டிஸ்ப்ளே மிகவும் பிரகாசமானது. இந்த மாடலில் 4ஜி சிம் பயன்படுத்த முடியும். இதில் முன்பக்கமும், பின்பக்கமும் 5 மெகா பிக்சல் கேமரா உள்ளது. மேலும், முன்பக்கமும் ஃப்ளாஷ் இருப்பதால் ஒளி குறைந்த இடங்களிலும் அட்டகாசமான செல்ஃபி எடுக்க முடியும். 1 ஜிபி RAM, 8ஜிபி இன்டர்னல் மெமரி மற்றும் 2350 mAh பேட்டரி திறனுடன் விற்பனைக்கு வந்துள்ளது. 32 ஜிபி வரை இதன் மெமரியை விரிவுபடுத்திக் கொள்ளலாம். மேலும், ஜியோவின் வெல்கம் ஆஃபரும் இந்த மாடலுக்குக் கிடைக்கிறது.

விலை : ரூ. 4,777/-

 

Micromax Spark Vdeo :

Micromax Spark Vdeo

குறைந்த விலை மொபைல்களுக்குப் புகழ்பெற்ற நிறுவனம் மைக்ரோமேக்ஸ். இந்நிறுவனத்தின் Spark Vdeo மாடலானது 4ஜி வசதியுடன் கடந்த மாதம் அறிமுகமாகியுள்ளது. டூயல் சிம், 1ஜிபி RAM, 8ஜிபி இன்டர்னல் மெமரி என இதன் வசதிகள் அசத்துகின்றன. ஆனால் இதன் பேட்டரி திறன் 1800 mAh மட்டுமே என்பதும், கேமராவின் அளவு 5 மெகா பிக்சல் மட்டுமே என்பதும் இதன் சிறிய குறைகள். 4ஜி சிம் பயன்படுத்தக்கூடிய இந்த மொபைல் கோல்டன் நிறத்தில் மட்டுமே கிடைக்கிறது. இந்த மாடலானது ஸ்னாப்டீல் தளத்தில் மட்டுமே பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது.

விலை : ரூ.4,499/-

 

Karbonn Titanium Vista 4G :

Karbonn Titanium Vista 4G

இளைய தலைமுறையைக் கவரும் வகையில் அழகான வடிவமைப்பு, லேட்டஸ்ட் தொழில்நுட்ப வசதிகள் கொண்டதாக கார்பன் நிறுவனத்தின் Titanium Vista 4G மாடல் விற்பனைக்கு வந்துள்ளது. 4ஜி சிம் பயன்படுத்தக்கூடிய இந்த மாடலில் Full HD டிஸ்ப்ளே, 8 ஜிபி இன்டர்னல் மெமரி, 5 மெகா பிக்சல் கேமரா போன்ற வசதிகள் உள்ளன. இந்த மாடல் கறுப்பு மற்றும் வெள்ளை என இரு நிறங்களில் கிடைக்கிறது. ரிமூவ் செய்யமுடியாத 2300 mAh பேட்டரி திறன் கொண்டதாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. குறைந்த விலைக்கு அழகான வடிவமைப்பு கொண்ட ஸ்மார்ட்போன் வாங்க நினைப்பவர்கள் இதைப் பரிசீலிக்கலாம்.

விலை : ரூ. 4,999/-

 

Lyf Wind 7I :

Lyf Wind 7I

ஜியோ நிறுவனத்துக்குச் சொந்தமான லைஃப் மொபைலின் Wind 7I மாடல், குறைந்த விலையிலும் நிறைவான வசதிகளுடன் கிடைக்கிறது. லைஃப் மொபைல்களுக்கென்றே பிரத்யேகமாக பல அதிரடி டேட்டா ப்ளான்களையும் ஜியோ வழங்குகிறது என்பது கூடுதல் சிறப்பு. 4ஜி வீடியோ கால் செய்வதற்கு ஏதுவாக இதன் முன்பக்க கேமரா 5 மெகா பிக்சல் வசதி கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 8 மெகா பிக்சல் கேமரா, 1ஜிபி RAM, 8ஜிபி இன்டர்னல் மெமரி என இதன் சிறப்பம்சங்கள் நிறைவாகவே இருக்கின்றன. நீலம், கறுப்பு என இரு நிறங்களில் இந்த மாடல் கிடைக்கிறது. ஜியோவின் 4ஜி சேவையை அதிகப்பேர் பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவே அந்நிறுவனம் இதுபோன்ற பல மொபைல் மாடல்களையும் குறைந்த விலைக்கு வழங்கி வருகிறது.

விலை : ரூ.5,499/-

 

Intex Aqua Amaze Plus :

Intex Aqua Amaze Plus

இன்டெக்ஸ் நிறுவனத்தின் Amaze Plus மொபைல் மாடல் குறைந்த விலையில் HD டிஸ்ப்ளே கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 8 ஜிபி இன்டர்னல் மெமரியுடன் கிடைக்கிறது. 32 ஜிபி வரை மெமரியை விரிவுபடுத்திக் கொள்ளலாம். 5 மெகா பிக்சல் கேமரா என்றாலும், ஆட்டோ ஃபோகஸ், ஃபேஸ் டிடெக்சன் போன்ற வசதிகள் கொண்டதாக இது டிஸைன் செய்யப்பட்டுள்ளது. 4ஜி இன்டர்நெட் டேட்டா கால் மற்றும் வீடியோ கால் வசதியும் இதில் உள்ளது. லோ-பட்ஜெட் மொபைல் என்றாலும் 1 ஜிபி RAM மற்றும் 2000 mAh பேட்டரி திறனுடன், அழகான வடிவமைப்புடன் இந்த மாடல் கிடைக்கிறது.

விலை : ரூ. 5,049/-

'பட்ஜெட் கொஞ்சம் இதைவிட அதிகமானாலும் பரவாயில்லை. ஆனால் நல்ல தரத்துடன் மொபைல் வாங்கலாம்' என நினைப்பவர்கள் இதைப் படிங்க.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்