வெளியிடப்பட்ட நேரம்: 13:45 (24/04/2017)

கடைசி தொடர்பு:13:43 (24/04/2017)

உங்கள் IMEI நம்பர் கிடைத்தால் எதையெல்லாம் டிராக் செய்ய முடியும் தெரியுமா? #IMEI

International Mobile Equipment Identity

செல்போன் காணாமல் போனால் உடனடியாக யாராவது நம்மிடம் உங்கள் போனின் IMEI நம்பர் தெரியுமா என்று கேட்பது வழக்கம். ஏன் இந்த IMEI அப்படி என்ன செய்யும்? இதனை வைத்துக் காணாமல் போன செல்போனை கண்டறிய முடியுமா? இல்லை ஒருவரது செல்போனை ட்ராக் செய்ய முடியுமா என பல கேள்விகள் நமக்குள் எழலாம். அவற்றுக்கான பதில்கள் இதோ...

IMEI நம்பர் என்றால் என்ன? 

ஐ.எம்.இ.ஐ (International Mobile Equipment Identity) எண் என்பது 15 இலக்க எண்.  உங்கள் மொபைல், எந்த நாட்டைச் சேர்ந்த போன் என்பதற்கும், அது தற்போது எந்த நெட்வொர்க்கில் இணைந்துள்ளது என்பதை கண்டறியவும் உதவும் எண்ணாகும். இது பேட்டரியின் உள்பக்கத்தில் எழுதப்பட்டிருக்கும். இதனை உங்கள் மொபைலில் *#06# என்ற எண்ணை அழுத்தியும் தெரிந்து கொள்ளலாம். 

என்ன பயன்?

IMEI நம்பரை பயன்படுத்தி காணாமல் போன போன் இருக்கும் இடத்தை அறிய முடியும். அது மட்டுமின்றி அந்த செல்போனில் தற்போது சிம் கார்டு மாற்றப்பட்டாலும் அதன் இடத்தை ட்ராக் செய்வது எளிது. ஒருவரது போன் காணமல் போனாலோ அல்லது எங்கேயாவது தவறவிட்டாலோ அதனை இந்த எண் கண்டறிவது மிகவும் சுலபம்.

*#06# IMEI

ஒருவரை ட்ராக் செய்ய முடியுமா?

IMEI நம்பரை பயன்படுத்தி ஒருவரை ட்ராக் செய்ய முடியுமா என்றால் ஆம் என்பது தான் அதற்கான பதில். உங்கள்  ஐ.எம்.இ.ஐ நம்பர் தெரிந்தால் உங்கள் செல்போனை கட்டுப்பாட்டில் எடுக்க முடியும். அதன் மூலம் நீங்கள் எத்தனை சிம்கார்டுகளை மாற்றினாலும் உங்கள் IMEI நம்பர் மூலம் உங்களை ட்ராக் செய்யலாம். அப்படி செய்தால் உங்கள் புதிய சிம்கார்டு எண்ணையும் அது இருக்கும் பகுதியையும் அறிய முடியும். அதன் மூலம் உங்கள் கால் போன்றவற்றை ட்ராக் செய்யவும் முடியும். ஆனால் இதனை சாதாரண நபர்களால் செய்ய முடியாது. செல்போன் சேவை நிறுவனம் வாடிக்கையாளரின் கால் விவரங்கள், ஆடியோ போன்றவற்றை அவ்வளவு எளிதாக ஒருவருக்கு தந்துவிடாது என்ற போதிலும் இது சாத்தியமான விஷயமே. சில ஹேக்கர்களும் இந்த வேலையை ரகசியமாக செய்து வருகின்றனர். 

2003ம் ஆண்டு தான் ஆஸ்ரேலியாவில் முதல் முதலாக இந்த ஐ.எம்.இ.ஐ நம்பர் அறிமுகம் செய்யப்பட்டது. போலி தயாரிப்புகள் மற்றும் முறையற்ற தயாரிப்புகளில்  IMEI நம்பர் தவறானதாக இருக்கும். இதனை அறிய ஒரு ஆன்லைன் டூல் உள்ளது. இதன் மூலம் நமது ஐ.எம்.இ.ஐ நம்பர் சரியான நம்பர் தானா என்பதை உறுதி செய்து கொள்ள முடியும். 

பட்ஜெட் பத்தாயிரம்: என்ன மொபைல் வாங்கலாம்?


டிரெண்டிங் @ விகடன்