உலகக்கோப்பை கால்பந்தில் அறிமுகமாகும் புதிய தொழில்நுட்ப வசதி என்ன தெரியுமா?!

கால்பந்து விளையாட்டில் வீடியோ உதவியுடன் தீர்ப்பளிக்கும் புதிய தொழிநுட்ப முறை விரைவில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.

கால்பந்து

கிரிக்கெட் விளையாட்டில் தங்களால் உறுதியாக முடிவெடுத்து தீர்ப்பு வழங்க முடியாத சூழ்நிலையில், மூன்றாவது அம்பயர் எனப்படும் டி.வி அம்பயரின் உதவியை மைதானத்தில் இருக்கும் நடுவர்கள் நாடுவார்கள். ஹாக்-ஐ (Hawkeye), ஸ்னிக்கோ மீட்டர் (Snick-o-Meter), ஹாட் ஸ்பாட் (Hot Spot) போன்ற தொழில்நுட்ப வசதிகளின் உதவியுடன் வீடியோ காட்சியை சோதித்து மூன்றாவது நடுவர் தீர்ப்பு வழங்குவார். 1992-ம் ஆண்டில் இருந்து கிரிக்கெட்டில் தேர்ட் அம்பயர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். பல விளையாட்டுகளிலும் வீடியோ ரீப்ளே வசதியுடன் முடிவுகள் வழங்கும் முறை பயன்படுத்தப்படுகிறது.

ஆனால், உலகில் அதிக ரசிகர்களைக் கொண்ட கால்பந்து விளையாட்டில், 'நடுவர்களின் புனிதத்தைக் குறைத்துவிடும்' என்ற காரணத்தால் வீடியோ ரீப்ளே மூலம் தீர்ப்பு வழங்கும் வழக்கம் இதுவரை இல்லை. அவ்வப்போது தவறான தீர்ப்புகள் வழங்கப்படுவதால், வீடியோ ரீப்ளே முறையைக் கால்பந்திலும் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக உள்ளது.

இந்நிலையில், 2018-ம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெறவிருக்கும் உலகக்கோப்பை கால்பந்துத் தொடரில் முதல்முறையாக வீடியோ உதவியுடன் தீர்ப்பளிக்கும் நடுவர்கள் பயன்படுத்தப்படுவார்கள் என உலக கால்பந்து சம்மேளனத்தின் (ஃபிபா) தலைவர் ஜியான்னி இன்ஃபான்டினோ அறிவித்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!