வெளியிடப்பட்ட நேரம்: 21:46 (27/04/2017)

கடைசி தொடர்பு:21:43 (27/04/2017)

மொபைல் ஸ்க்ரீனை டி.வி.யில் பார்க்க உதவும் 6 வழிகள்..! #MobileMirroring

மொபைல் மிரரிங்

இப்போதெல்லாம் மொபைல் போனை எந்த பாக்கெட்டிலும் அடக்க முடிவதில்லை. அவ்வளவு பெரிய ஸ்க்ரீன் கொண்ட மொபைல்கள் வந்தாலும் , நிறைய பேருக்கு டி.வி போன்ற பெரியதிரைகளில் படங்களை பார்க்கவும், கேம்ஸ் ஆடவுமே விருப்பம். ஹெச்.டி திரைகொண்ட மொபைல்கள் என்றாலும், பெரியதிரைகள் தரும் அனுபவமே தனி. ஆடியோ தரமும் ஒரு ‘வாவ்’ அனுபவத்தை கொடுக்கும்.  மொபைலில் தெரிவதை டி.விக்கு மாற்ற நிறைய டெக்னாலஜி உண்டு. மிரரிங் என்ற இந்த முறையினால் மொபைல் ஆப்ஸ் முதற்கொண்டு அனைத்து விஷயங்களையும் பெரியதிரையில் கண்டு ரசிக்கலாம்..

HDMI

hdmi

இருப்பதிலே எளிமையான வழி இதுதான். high-definition multimedia interface எனப்படும் HDMI கேபிள் மூலம் மொபைலை எளிதில் டி.வியுடன் இணைக்கலாம். இதற்குத் தேவை HDMI  கேபிள் மட்டும்தான். உங்கள் மொபைலில் HDMI அவுட் இல்லையென்றால், மைக்ரோ  USB-to-HDMI adaptor அடாப்டர்கள் ஆன்லைனிலே கிடைக்கின்றன. அதை வாங்கிவிட்டால் போதும். கேபிளின் நீளம் தான் இதில் கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான விஷயம்

MHL (Mobile high-definition link)

hml

HDMI அளவுக்கு MHL அளவுக்குபிரபலம் இல்லைதான். ஆனால், இதுவும் ஒரு சிறந்த வழி. இதற்கும் ஒரு கேபிள் தேவை. அந்த கேபிள் மூலம் மொபைலை வயர்லெஸ் கேம் கண்ட்ரோலுடன் இணைக்க வேண்டும். அதன்பின் மொபைலில் செய்யும் ஆக்‌ஷன்கள் பெரிய திரையில் பிரதிபலிக்கும். மொபைல் இந்த முறையில் கனெக்ட் செய்திருக்கும் போது சார்ஜும் ஆகும் என்பது இதில் கூடுதல் வசதி. மொபைல் மற்றும் கேம் கண்ட்ரோலும் MHL-ஐ சப்போர்ட் செய்ய வேண்டும். இல்லாதபட்சத்தில் இதற்கும் ஒரு அடாப்டர் உண்டு.

எதற்கு அடாப்டர் வாங்கினால் கவனித்து வாங்கவும். பெரும்பாலான விலை குறைந்த அடாப்டர்கள் பிக்சர் குவாலிட்டியை குறைத்துவிடும்

மிராகாஸ்ட் (Miracast)

வைஃபை டைரக்ட் டெக்னாலஜி மூலம் செயல்படுவதே மிராகாஸ்ட். உங்கள் ஃபோனும், டிவியும் மிராகாஸ்ட்டை சப்போர்ட் செய்தால் வேலை எளிது. மொபைல் செட்டிங்கில் ஸ்க்ரீன் மிரரிங் ஆப்ஷனை ஆன் செய்துவிட்டால் போதும். நமது மொபைல் பெரியதிரையில் தெரிய ஆரம்பித்துவிடும். இதில் வைஃபை எனப்படுவது மொபைலுக்கும், டி.விக்கும் மட்டுமேயான நெட்வொர்க். அதனால் இதற்கு இண்டெர்நெட் தேவையோ என்ற அச்சம் வேண்டாம்.

செட்-டாப் பாக்ஸ் (STB)

மொபைலையும், டி.வி அல்லது மற்ற பெரியதிரை கொண்ட சிஸ்டமை இணைக்க சில செட் டாப் பாக்ஸ்கள் உண்டு. இவை, மொபைலையும் டி.வியையும் ஒரே நெட்வொர்க்கில் இணைக்க உதவும். இந்த முறையில் மொபைல் செட் டாப் பாக்ஸுடன் வைஃபை மூலம் கனெக்ட் ஆகும். செட் டாப் பாக்ஸில் இருந்து டி.விக்கு கேபிள் மூலம் கனெக்‌ஷன் இருக்கும். வைஃபை ரெளட்டரின் வேகத்தைப் பொறுத்தே இதில் வீடியோ தரம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

டாங்கல் (Dongles)

இவையும் செட் டாப் பாக்ஸ் போலவேதான். செட்டாப் பாக்ஸில் இருந்து கேபிள் மூலம் டி.வியை இணைப்போம். இதில் டாங்கலை நேரிடையாக டி.வியில் இருக்கும் ல் சொருகிவிடலாம். மொபைலையும், டாங்கலியும் ஒரே வைஃபை நெட்வொர்க்கில் இணைத்துவிட்டால் தடையற்ற வீடியோ பெரியா திரையில் தயார். க்ரோம்காஸ்ட் டாங்கல் வகைக்கு சரியான உதாரணம்.

ஆப்ஸ்

இருப்பதிலே காஸ்ட்லியான வழி இதுதான். ஏனெனில் இதற்கு இண்டர்நெட் தேவை. இதில் போனில் இருக்கும் டேட்டா, இணையம் வழி ஆப்ஸ்க்கு போகும். டி.வி இணையம் பயன்படுத்தி அந்த ஆப் வழியாக டேட்டாவை பெற்று திரையில் காட்டும். ஆனால், இந்த முறையில் உங்களுக்கு எந்த கேபிளும், டாங்கலும், செட் டாப் கருவிகளும் தேவையில்லை. இண்டர்நெட் மட்டும் போதும். ஆனால், உங்கள் ஸ்மார்ட் டிவியாக இருக்க வேண்டும்.

MHL தவிர மற்ற அனைத்து வழிகளிலும் போனின் சார்ஜ் விரைவில் தீரும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.

 


 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்