வெளியிடப்பட்ட நேரம்: 14:32 (28/04/2017)

கடைசி தொடர்பு:14:32 (28/04/2017)

செல்ஃபி முதல் மொபைல் போட்டோகிராபி வரை... இந்த மொபைல்கள்தான் பெஸ்ட்! #BestCameraMobiles

ட்ஜெட் மட்டுமே பார்த்து ஸ்மார்ட்போன் வாங்கியது எல்லாம் இப்போது பழைய கதை ஆகிவிட்டது. காரணம் இன்று பெரும்பாலோனோர் இந்த இந்த வசதிகள் தங்கள் போனில் இருக்க வேண்டும் என்ற முடிவுடன்தான் புதிய மொபைலே வாங்குகின்றனர். அப்படி தற்போது புதிய மொபைல் வாங்கும் பலரும் முதலில் பார்ப்பது கேமராவைத்தான். 'ஃபிரன்ட் கேமரா என்பது ஆடம்பரம் இல்ல பாஸ்... அத்தியாவசியம்' என சொல்லும் அளவுக்கு இளைஞர் பட்டாளத்தை மாற்றிவிட்டது தற்போதைய ட்ரென்ட்.

சில ஆண்டுகளுக்கு முன்பு உருவாகி, சோஷியல் மீடியாவில் ட்ரென்ட் அடித்த செல்ஃபி என்னும் ஒரு வார்த்தையைக் கொண்டே இன்று மார்க்கெட்டில் கோலோச்சிக் கொண்டிருக்கின்றன பல மொபைல் நிறுவனங்கள். அப்படி உங்கள் செல்ஃபிக்களுக்கு லைக்ஸ் குவிக்க வைக்கும்,  மொபைல் போட்டோகிராபிக்கு கைகொடுக்கும் மற்றும் கேமரா பெர்பார்மன்ஸில் குட்மார்க்ஸ் வாங்கும் மொபைல்களின் தொகுப்பு இது...

1. ரெட்மி நோட் 3:

ரெட்மி நோட் 3

16 எம்.பி திறன்,  f/2.0 aperture, PDAF கொண்ட ரியர் கேமரா மற்றும் 5 எம்.பி திறன் கொண்ட முன்பக்க கேமராவைக் கொண்டுள்ளது ரெட்மி நோட் 3. ரியர் கேமராவில் டூயல்டோன் ஃபிளாஷ் இடம்பெற்றுள்ளது. முன்பக்க கேமராவைப் பொறுத்தவரை 5 எம்.பி.,தான் என்றாலும் குவாலிட்டியான செல்ஃபிக்களுக்கு கியாரண்டி தருகிறது ரெட்மி நோட் 3. இதன் அடுத்த மாடலான ரெட்மி நோட் 4-ல் 13 எம்.பி திறன் கொண்ட ரியர் கேமரா மற்றும் 5 எம்.பி திறன் கொண்ட முன்பக்க கேமரா ஆகியவை இடம்பெற்றுள்ளன. 

விலை : 
ரெட்மி நோட் 3 - ரூ. 11,999
ரெட்மி நோட் 4 - ரூ. 9,999 முதல் கிடைக்கிறது.

 

2. எல்.ஜி G6:

எல்.ஜி நிறுவனத்தின் புதுவரவு இந்த எல்.ஜி G 6

எல்.ஜி G 6 மொபைல்

5.7 இன்ச் டிஸ்ப்ளே, 64 மெமரி, 4 ஜி.பி ரேம், ஆண்ட்ராய்டு நௌகட் ஆபரேட்டிங் சிஸ்டம் என அப்டேட்டாக களமிறங்கியிருக்கிறது எல்.ஜி G 6. கேமராவைப் பொறுத்தமட்டில் 13 எம்.பி திறன் கொண்ட டூயல் ரியர் கேமரா மற்றும் 5 எம்.பி திறன் கொண்ட முன்பக்க கேமரா இருக்கிறது. ரியர் கேமராவில் 125 டிகிரி வைட் ஆங்கிள் லென்ஸ், பேஸ் டிடக்ஷன் ஆட்டோஃபோகஸ், ஆப்டிக்கல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் ஆகிய வசதிகள் இருக்கின்றன. மொபைல் போட்டோகிராபி பிரியர்களுக்கு ஏற்ற வகையில் இருக்கிறது எல்.ஜி G 6.

விலை: ரூ. 51,999 முதல் கிடைக்கிறது.

3. ஜியோனி A1:

 ஜியோனி A1

செல்ஃபி எக்ஸ்பர்ட் மொபைல்களில் புதுவரவு இந்த ஜியோனி A1. 5.5 இன்ச் டிஸ்ப்ளே, 4 ஜி.பி ரேம், 64 ஜி.பி மெமரி, ஆண்ட்ராய்டு நௌகட், 4010 mAh பேட்டரி என கலக்கல் காம்போவாக இருக்கிறது A1. கேமராவைப் பொறுத்தவரை 13 எம்.பி, f/2.0 Aperture கொண்ட ரியர் கேமரா இருக்கிறது. சூப்பர் குவாலிட்டி செல்ஃபிக்களுக்காக 16 எம்.பி திறன், f/2.0 Aperture கொண்ட முன்பக்க கேமரா இருக்கிறது. மிட்ரேஞ்ச் பட்ஜெட்டில் கேமரா போன் தேடுபவர்களுக்கு இது சரியான சாய்ஸ்.

விலை : ரூ. 19,999 முதல் கிடைக்கிறது.

 

4. ஐபோன் 7 ப்ளஸ்:

ஐபோன் 7 ப்ளஸ்

தரம் பற்றிய அறிமுகமே தேவையில்லாதா மொபைல் இது. 'எவ்ளோ செலவானாலும் பரவால்ல!' என்ற மனசு கொண்டவர்கள் கண்ணை மூடிக்கொண்டு இதற்கு டிக் அடிக்கலாம். அந்தளவிற்கு கியாரண்டி தருகிறது ஆப்பிள் கேமரா குவாலிட்டி. பின்பக்கம் 12 எம்.பி வைட் ஆங்கில் மற்றும் டெலிபோட்டோ கேமராக்கள் இருக்கின்றன. 7 எம்.பி முன்பக்க கேமராவைக் கொண்டிருக்கிறது.

விலை : ரூ. 72,000. ஆன்லைன் தளங்களில் இதற்கும் குறைவான விலையிலும் கிடைக்கிறது.

 

5. சாம்சங் கேலக்ஸி A9 Pro:

கேமரா போன் சாம்சங் கேலக்ஸி A9 Pro

6 இன்ச் டிஸ்ப்ளே, ஆக்டாகோர் பிராஸசர், 4 ஜி.பி ரேம், 32 ஜி.பி மெமரி மற்றும்  5000 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி A9 ப்ரோ. இதில் 16 எம்.பி திறன்கொண்ட மெயின் கேமரா மற்றும் 8 எம்.பி திறன் கொண்ட ஃபிரன்ட் கேமரா இருக்கிறது. 

விலை : ரூ. 26,900 முதல் கிடைக்கிறது.

 

6. விவோ V5 ப்ளஸ்:

விவோ V5 ப்ளஸ்

செல்ஃபி எக்ஸ்பெர்ட் பிராண்ட் ஆன விவோ நிறுவனத்தின் லேட்டஸ்ட் மாடல் இது. கேமராதான் உங்கள் முதன்மையான தேவை என்றால், நீங்கள் விவோவுக்கு ஓ போடலாம். 5.5 இன்ச் டிஸ்ப்ளே, 4 ஜி.பி ரேம், 64 ஜி.பி மெமரி, 3055 mAh பேட்டரி ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது விவோ V5 ப்ளஸ். 20 எம்.பி திறன் கொண்ட முன்பக்க ப்ரைமரி கேமரா மற்றும் 8 எம்.பி திறன் கொண்ட முன்பக்க செகண்ட்ரி கேமரா என பிரன்ட் கேமராவில் லைக்ஸ் குவிக்கிறது விவோ. இவற்றுடன் 16 எம்.பி திறன் கொண்ட ரியர் கேமரா இருக்கிறது.

விலை :  ரூ. 27,980 முதல் கிடைக்கிறது.

 

7. ஒன் ப்ளஸ் 3T:

ஒன் ப்ளஸ் 3T

தரமான படங்கள் எடுக்க உதவும், மற்றொரு மொபைல் இந்த ஒன்ப்ளஸ் 3T. 5.5 இன்ச் டிஸ்ப்ளே, 6 ஜி.பி ரேம், 64 மற்றும் 128 ஜி.பி மெமரி, 3,400 mAh பேட்டரி ஆகிய வசதிகளைக் கொண்டுள்ளது. கேமராவைப் பொறுத்தவரை Sony IMX 298 சென்சார் மற்றும் f/2.0 Aperture உடன் கூடிய 16 எம்.பி திறன்கொண்ட ரியர் கேமரா மற்றும் 16 எம்.பி திறன் கொண்ட முன்பக்க கேமராக்களைக் கொண்டுள்ளது. 64 ஜி.பி மெமரி மற்றும் 128 ஜி.பி மெமரி என இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கிறது.

விலை : ரூ. 29,999 முதல் கிடைக்கிறது.

 

8. ஒப்போ F3 ப்ளஸ்:

ஒப்போ F3 ப்ளஸ்

கேமரா எக்ஸ்பெர்ட் மொபைல் எனப் பெயர் வாங்கிய பிராண்ட் ஒப்போ. அந்த நிறுவனத்தின் லேட்டஸ்ட் கேமரா எக்ஸ்பெர்ட்தான் இந்த F3 ப்ளஸ். 6 இன்ச் டிஸ்ப்ளே,  1.95GHz பிராஸசர், 4 ஜி.பி ரேம், ஆண்ட்ராய்டு மார்ஷ்மல்லோ, 4000 mAh பேட்டரி, டூயல்சிம் வசதி ஆகியவற்றைக் கொண்டுள்ளது F3 ப்ளஸ். டூயல்டோன் பிளாஷ் உடன் கூடிய 16 எம்.பி திறன்கொண்ட ரியர் கேமரா இதில் இருக்கிறது. முன்பக்கம் டூயல் செல்ஃபி கேமராவைக் கொண்டுள்ளது F3 ப்ளஸ். 

விலை : ரூ. 30,990 முதல் கிடைக்கிறது.

 

9. மோட்டோ Z ப்ளே:

மோட்டோ Z ப்ளே

5.5 இன்ச் டிஸ்ப்ளே, 3 ஜி.பி ரேம், 32 ஜி.பி மெமரி, 3510 mAh, ஆண்ட்ராய்டு 6.0 ஆகிய வசதிகளைக் கொண்டுள்ளது மோட்டோ Z ப்ளே. 16 எம்.பி ரியர் கேமரா மற்றும் 5 எம்.பி முன்பக்க கேமரா ஆகியவைதான் இதில் இருப்பது. துல்லியமான போட்டோக்களை எடுக்க டூயல் ஆட்டோபோகஸ் வசதி இதன் ரியர் கேமராவில் இடம் பெற்றுள்ளது.

விலை : ரூ. 24,999 முதல் கிடைக்கிறது.

10. கூகுள் பிக்ஸல்:

கூகுள் பிக்ஸல்

கூகுளின் ஆல் இன் ஆல் மொபைலாக வெளிவந்து ஹிட் அடித்த போன்தான் இந்த பிக்ஸல். 5 இன்ச் டிஸ்ப்ளே, 4 ஜி.பி ரேம், 32 ஜி.பி மெமரி, இன்பில்ட்  கூகுள் அசிஸ்டன்ட், ஆண்ட்ராய்டு நௌகட் ஓ.எஸ் என கெத்தாக இருக்கிறது பிக்ஸல். ஐபோன் போலவே இதிலும் பட்ஜெட்தான் யோசிக்க வேண்டிய விஷயம். 12.3 திறன் கொண்ட பின்பக்க கேமரா மற்றும் 8 எம்.பி முன்பக்க கேமராவைக் கொண்டுள்ளது. போட்டோ குவாலிட்டியில் குட்மார்க்ஸ் வாங்குகிறது பிக்ஸல்.

விலை : ரூ.57,000 முதல் கிடைக்கிறது.

11. ஹானர் 6X:

ஹானர் 6X

5.5 இன்ச் டிஸ்ப்ளே, 2.1 GHz ஆக்டாகோர் பிராஸசர், 3 ஜி.பி /4 ஜி.பி ரேம், 32 ஜி.பி / 64 ஜி.பி நினைவகம், 3,340 mAh பேட்டரி, ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ, ஃபிங்கர்பிரின்ட் சென்சார் ஆகியவற்றைக் கொண்டுள்ளது ஹானர் 6x. கேமராவைப் பொறுத்தவரை பின்பக்கம் 12 எம்.பி ப்ரைமரி கேமரா மற்றும் கூடுதல் 2 எம்.பி கேமரா என டூயல் கேமரா செட்-அப்பை கொண்டுள்ளது. முன்பக்கம் 8 எம்.பி திறன் கொண்ட கேமரா இருக்கிறது. 

விலை : ரூ. 12,999 முதல் கிடைக்கிறது.

 

12. எக்ஸ்பீரியா XZs:

எக்ஸ்பீரியா XZs

5.2 இன்ச் டிஸ்ப்ளே, 4 ஜி.பி ரேம், 64 ஜி.பி மெமரி, டூயல்சிம் வசதி, ஆண்ட்ராய்டு நௌகட் ஒ.எஸ்., 2,900mAh பேட்டரி, ஃபிங்கர்பிரின்ட் சென்சார் ஆகியவற்றைக் கொண்டுள்ளது எக்ஸ்பீரியா XZs. சூப்பர் ஸ்லோ மோஷன் வீடியோக்களுக்கு கைகொடுக்கும் 19 எம்.பி ரியர் கேமராதான் இதன் ஹைலைட். 13 எம்.பி திறன் கொண்ட முன்பக்க கேமராவையும் கொண்டுள்ளது. துல்லியமான படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு ஏற்ற வகையில் இருக்கின்றன இதன் கேமராக்கள். ஆனால் பட்ஜெட்தான் இதில் பிரச்னை.

விலை : ரூ. 51,990 முதல் கிடைக்கிறது.

 

10,000 ரூபாய் பட்ஜெட்டில் போன் வாங்க நினைப்பவரா நீங்கள்?

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்