ஆப்பிளின் புதிய Self-Driving Car இதுதான்!

கூகுள், ஃபோர்ட், உபெர் நிறுவனங்களைப் போலவே ஆப்பிள் நிறுவனமும் டிரைவர் இல்லாத கார்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

ஆப்பிள் கார்

'புராஜெக்ட் டைட்டன்' எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்த திட்டத்தின் கீழ் இந்தக் கார்களைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த செய்திகள் ஏற்கெனவே வெளிவந்த நிலையில், தற்போது ஆப்பிளின் சோதனை காரின் புகைப்படம் ப்ளூம்பெர்க் இணையதளத்தில் வெளிவந்துள்ளது.  இந்த கார் கலிபோர்னியா நகரத்தின் சாலைகளில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. சோதனைகளுக்காக டொயோட்டா நிறுவனத்தின் Lexus RX450h SUVமாடலைப் பயன்படுத்தி வருகிறது ஆப்பிள். 

கலிபோர்னியாவின் சாலைகளில் கார்களை சோதித்துப் பார்ப்பதற்காக, கலிபோர்னியா போக்குவரத்துத்துறையிடம் இரண்டு வாரங்களுக்கு முன்புதான் ஆப்பிள் அனுமதி வாங்கியிருந்தது. தற்போது சிலிக்கான் வேலியின் சாலைகளில் சென்சார்கள் சகிதமாக சோதனை நடந்துவருகிறது. ஏற்கெனவே பல நிறுவனங்கள் டிரைவர் இல்லாத கார்களைத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கான எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு டெக்னாலஜி நிறுவனங்கள், புதிய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், கார் நிறுவனங்கள் எனப் பலரும் ஆட்டோமேட்டிக் கார்களைத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். கலிபோர்னிய போக்குவரத்து துறை மட்டுமே, இதுவரை 30-க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு ஆட்டோமேட்டிக் கார்களை சோதனை செய்வதற்கான அனுமதியை வழங்கியுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!